Word |
English & Tamil Meaning |
---|---|
காலசங்கதி | kāla-caṅkati n. <>id. +. Current news, events of the day; நடப்புச்செய்தி. (W.) |
காலசங்கை | kāla-caṅkai n. <>id. +. 1. Approximate time, as guessed; உத்தேச காலவளவு. 2. Reckoning of time; 3. Specified period, time-limit; |
காலசந்தி 1 | kāla-canti n. <>id. +. sandhyā. Lit., junction of times, worship in temples in the interval between every two of the six parts into which a day is divided; ஓருநாளின் ஆறுபாகங்களுள் இரண்டிரண்டு பாகங்கள் கூடுஞ் சந்திக்காலங்களிற் கோயில்களிலே செய்யும் பூசை. |
காலசந்தி 2 | kāla-canti n. <>காலை+ id. Morning worship; காலைவழிபாடு. |
காலசம் | kālacam n. prob. கால்3+அசை. (அக.நி.) 1. Large circular fan; பேராலவட்டம். 2. Wind; |
காலசூத்திரம் | kāla-cūttiram n. <>kāla +. A hell; ஒரு நரகம். காலசூத்திர நரகிடைவீழ்த்தினார் (குற்றா. தல. கவுற்சன. (68). |
காலசேயம் | kālacēyam n. <>kālašēya. Buttermilk; மோர். (பிங்.) |
காலஞ்செய் - தல் | kāla-cey- v. intr. <>kāla+. [M. kālamceyya.] To cease to exist, to die; மரணமடைதல். காலாந்தரத் திருவர் தங்காலஞ்செய்ய (திருவாச. 12, 11). |
காலஞ்செல்(லு) - தல் | kāla-cel- v. intr. <>id.+. 1. To depart this life, die; இறந்துபோதல். 2. To be late; 3. To be barred by limitation; |
காலஞ்சொல்லி | kāla-colli n. <>id. +. (சங். அக.) 1. Crow, as foretelling events; காக்கை. 2. Lizard; |
காலட்சேபம் | kālaṭcēpam n. <>id. + kṣēpa. See காலக்ஷேபம். . |
காலடி 1 | kāl-aṭi n. <>கால்1 +. [M. kāladi.] 1. Sole of the foot; உள்ளங்கால். 2. Step or trace of the foot, footprint; |
காலடி 2 | kālaṭi n. A town in the Chera country the birth-place of šaṅkara; சங்கராசாரியர் அவதரித்த தலம். |
காலடியில் | kāl-aṭi-y-il adv. <>கால்1 +. 1. In close proximity; மிகச்சமீபத்தில். இதோ, காலடியில் உள்ளது அவ்வூர். 2. Under one's protection; |
காலணி | kāl-aṇi n. <>id. +. Anklet, ankle rings or bells; பாதத்தில் அணியும் ஆபரணம். கரந்தியான் கொண்ட காலணி (சிலப், 16, 127). |
காலத்தால் | kālattāl adv. <>kāla. 1. Seasonably, in proper time; உரியபோதில். காலத்தால் தக்க தறிவதாந் தூது (குறள், 686). 2. Early, betimes; |
காலத்தாலே | kālattālē adv. <>id. In the morning; காலையில், காலத்தாலே வாருங்கள். |
காலத்திரயம் | kāla-t-tirayam n.<> id. +. Threefold division of time, as part, present and future; இறப்பு, நிகழ்வு எதிர்வு என்னும் முவகைக் காலம். |
காலத்தீ | kāla-t-tī n. <>id. +. Destructive fire that is believed to prevail at the dissolution of the universe; ஊழித்தீ காலத்தீப் பெயருருத்திரன் (கந்தபு. கணங. 4). |
காலதண்டம் | kāla-taṇṭam n. <>id. +. Yama's staff; யமனது தண்டாயுதம். கலதண்டஞ் சுழற்றி (உபதேசகா, சிவபுணய.222). |
காலதத்துவம் | kāla-tattuvam n. <>id. +. (šaiva.) Category oof time, which determines the duration of soul's experiences, one of seven Cuttācutta-tattuvam, q.v.; ஆன்மபோகங்களை அளக்கும் காலம் என்னும் சுத்தாசுத்தத்துவம். (சி. போ.பா.2, 2, பக் 144). |
காலதர் | kāl-atar n. <>கால்3 + அதர். Window, as an air passage; சாளரம். காலதர் மாளிகை (சிலப் 5, 8). |
காலதருமம் | kāla-tarumam n. <>kāla +. Spirit of the age; காலவியல்பு. |
காலதாமதம் | kāla-tāmatam n. <>id. +. Delay; காலத்தாழ்வு. |
காலதானம் | kāla-tāṉam n. <>id. + dāna. Gifts to propitiate Yama to avert death; மரணத்தினின்றும் உய்யுமாரு யமனுக்குப்பிரீதியாகச் செய்யப்படுந் தானம். (திவ், நன்மு, 52, வ்ய, அரும்.) |
காலதுரிதம் | kāla-turitam n.<> id. +. 1. Rapid flux of time; காலவிரைவு. 2. Quickness; |
காலதேசவர்த்தமானம் | kāla-tēca-varttamāṉam n. <>id. +. Lit., time, place and circumstance, milieu, environment, surrounding circumstances; காலைஇடங்களின் நிலைமை. |
காலந்தள்ளு - தல் | kālan-taḷḷu- v. intr. <>id. +. 1. To pass one's days, maintain oneself; சீவனஞ்செய்தல். பிச்சைவேண்டிக் ... காலந்தள்ளாமல் (தனிப்பா. i, 396, 7). 2. To delay; 3. To waste time; |