Word |
English & Tamil Meaning |
---|---|
காலந்தாழ்த்து - தல் | kālan-tāḻttu- v. intr. <>id. +. To delay; காலதாமதஞ்செய்தல். |
காலநிரூபணம் | kāla-nirūpaṇam n. <>id. +. 1. Determination of time, age, date; காலத்தை வரையறுக்கை. 2. Chronology; |
காலநுட்பம் | kāla-nuṭpam n. <>id. +. A moment of time; காலத்தின் நுண்ணிய பகுதி. |
காலநேமி | kāla-nēmi n. <>id. +. 1. The wheel of time; காலசக்கரம். காலநேமிப் பிரமையிற்றிரிவன் (கைவல்ய. தத். 19). 2. An asura slain by Viṣnu; |
காலநேரம் | kāla-nēram n. <>id. +. Time with reference to the influence of planets upon one's fortune or health; கிரகபலன். (W.) |
காலப்பண் | kāla-p-paṇ n. <>id. +. Mode appropriate to particular time; அவ்வக்காலத்திற்கு உரிய பண். |
காலப்பயிர் | kāla-p-payir n. <>id. +. Lit., seasonal crop, wet-season crop, opp. to kōṭai-p-payir; பருவத்தில் விளையும் பயிர். |
காலப்பழக்கம் | kāla-p-paḻakkam n. <>id. + [M. kālappaḻakkam.] 1. Time honoured usage; பழமையான ஆசாரம். 2. Long-standing habit; |
காலப்பிரமம் | kāla-p-piramam n. <>id. +. Time, as the Supreme Being; காலமாகிய பரம்பொருள். |
காலப்பிரமாணம் | kāla-p-piramāṇam n. <>id. +. Meansuure of time; காலவளவை. |
காலப்பெயர் | kāla-p-peyar n. <>id. +. 1. (Gram.) Noun denoting time, as சித்திரை; காலத்தைக்குறிக்கும் பெயர்ச்சொல். (நன். 290.) 2. Name derived from a noun denoting time, as ஆதிரையான்; |
காலபடர் | kāla-paṭar n. <>id. + bhaṭa. Yama's messengers; யமதூதர்காலபடரெனப்படரிற் பட்டார் (திருவிளை. யானையெய். 32). |
காலபரிச்சேதம் | kāla-pariccētam n. <>id.+paricchēda. 1. Determination or ascertainment of anything from time; காலத்தால் ஒரு பொருளை அளவிடுகை. ஒருகாலத்துண்டின்றொருகாலத்தெனுங் காலபரிச்சேதம் (வேதா. சூ. 36). 2. Time limitation; |
காலபரிபாகம் | kāla-paripākam n. <>id +. Fulness of time; காலத்தின் பக்குவநிலை. |
காலபாசம் | kāla-pācam n. <>id. +. Yama's noose, as an instrument of dealth; கயிற்றின் வடிவான யமனாயுதம். |
காலபுருஷதானம் | kāla-puruṣsa-tāṉam n. <>id. +. See காலதானம். (ஈடு, 10, 3, 5, ஜீ.) . |
காலபேதம் | kāla-pētam n. <>id +. Change of times, mostly for the worse; நற்காலம் மாறியநிலை. அவனுடைய காலபேதத்தாலே இப்படி நேர்ந்தது. |
காலபோகம் | kāla-pōkam n. <>id. +. 1. Crop of grain, fruit, etc. proper to a season; பருவத்திற்குரிய பயிர் கனிமுதலியன. 2. Enjoyment or suffering at the destined time, resulting from the actions of previous birth; |
காலபோசனம் | kāla-pōcaṉam n. <>id.+. Timely meal; காலத்திற்கொள்ளும் உணவு. |
காலம் | kālam n. <>kāla. 1. Time, duration; பொழுது. (தொல். சொல். 58). 2. Proper time, opportune moment; 3. Season of the year, of life; specific time; 4. Wet season, crop, opp. to kōṭai; 5. cf. காலை. Daybreak; 6. Time of death; 7. See காலதத்துவம். 8. (Gram.) Tense, three in number, viz., இறப்பு, நிகழ்வு, எதிர்வு; 9. (Mus.) Tempo, a measure of time, three in number, viz., விளம்பம், துரிதம், மத்திமம்; 10. (Mus.) The element of time-measure which specifies duration, being of ten varieties viz., கணம், இலவம், காட்டை, நிமிடம், துடி, துரிதம், லகு, குரு, புலுதம், காகபதம், one often tāḷa-p-pirāṇam, q.v.; |
காலம்பண்ணிப்போ - தல் | kālam-paṇṇip-pō- v. intr. <>காலம்+. See காலம்பண்ணு-.(W.) . |
காலம்பண்ணு - தல் | kālam-paṇṇu- v. intr. <>id. +. To live out one's time, to die; ஆயுள் முடிதல். (W.) |
காலம்பார் - த்தல் | kālam-pār- v. intr. <>id. +. 1. To look out for a suitable time, watch for an opportunity; சமயநோக்குதல். காலம் பார்த்திறைவேலை கடவாத கடலொத்தான் (கம்பரா. ஊர்தே. 222). 2. To calculate the time of death; |
காலம்பெற | kālam-peṟa adv. <>id. +. 1. At the right time; தக்க காலத்தில். காலம்பெறவென்னைக் காட்டுமின்கள் (திவ். திருவாய். 7, 3, 6). 2. Early in the morning; |