Word |
English & Tamil Meaning |
---|---|
காலம்போக்கு - தல் | kālam-pōkku- v. intr. <>id.+. To spend time; காலங்கழித்தல். |
காலமடை - தல் | kālam-aṭai- v. intr. <>id +. To die, as reaching the end of one's time; மரணமாதல். |
காலமயக்கம் | kāla-mayakkam n. <>id. +. (Gram.) Deviation in the use of tenses sanctioned by usage; காலவழுவமைதி. (புறநா.138, உரை.) |
காலமயக்கு | kāla-mayakku n. <>id. +. 1. See காலமயக்கம். . 2. (Alap.) Theme of a confidante convincing the heroine that the winter season when her lord should return has not arrived, though it is actually otherwise; |
காலமல்லாக்காலம் | kālam-allā-kālam n. <>id. +. Unseasonable, improper time; அகாலம். கலமல்லாக்காலத்தில் காய்ச்சதாம் பேய்ச்சுரைக்காய். |
காலமலைவு | kāla-malaivu n. <>id. +. (Gram.) Mistake in regard to time, as in the statement that the lotus blooms at night; ஒருகாலத்துக்குரியதை மற்றொருகாலதுக்குரியதாகக் கூறும் வழு (தண்டி, 117, உரை.) |
காலமழை | kāla-maḻai n. <>id. +. Seasonal rain; பருவமழை. |
காலமறி - தல் | kālam-aṟi- v. intr. <>id. +. 1. To ascertain the time suitable for the accomplishment of one's object; வினைசெயற்கேற்றகாலத்தையறிதல். கருவியாற் கால மறிந்து செயின் (குறள், 483). 2. To know of events past, present or future, intuitively or by spiritual vision, as Yōgis; |
காலமா - தல் | kālam-ā- v. intr. <>id.+. To pass away, as having one's life-time spent out; மரணமடைதல். Colloq. |
காலமாறு | kāla-māṟu adv. <>காலை + மாறு. Every morning; காலைதோறும். (W.) |
காலமானம் | kāla-māṉam n. <>kāla +. Measure of time; காலவளவு. |
காலமிருத்து | kāla-miruttu n. <>id. +. mrtyu. Death at the destined moment, dist. fr. akāla-miruttu; விதித்த காலத்தில் அடையும் மரணம். |
காலமே | kālamē adv. <>காலை [M. kālame.] In the morning, early betimes; விடியற்காலையில். |
காலமேகம் | kāla-mēkam n. <>kāla +. Black cloud appearing at the end of a yuga. See காளமேகம். காலமேக மென்னவே யிடித்ததிர்ந்து (திருவாலவா.36, 19). . |
காலமேகாட்டியும் | kālamē-kāṭṭiyum adv. <>காலை +. Very early in the morning; அதிகாலையில். Loc. |
காலயுத்தி | kālayutti n. <>kālayukṭi. The 52nd year in the Indian cycle of sixty years. See காளயுக்தி. Colloq. . |
காலர் | kālar n. <>kāla. (šsaiva.) Tutelary deity of wind; வாயுவை அதிஷ்டித்துநிற்கும் மூர்த்தி. (சித்தா. சாராவளி. சுலோ. 4.) |
காலராத்திரி | kāla-rāttiri n. <>id +. 1. The long night that envelopes the whole world at its final destruction; கற்பமுடிவிலுள்ள நீண்ட இரவு. 2. Night of distress, as seemighly long; 3. One of the manifestation of Durgā; |
காலருத்திரன் | kāla-ruttiran n. <>id. +. 1. šiva, as destroyer at the end of a kalpa; ஊழிக்காலத்துச் சர்வசங்கார மூர்த்தியான மகாருத்திரன். காலருத்திரப்பெயர் தேற்றமா முனக்கே (திருவிளை. குண்டோ. 19). 2. (šaiva.) Name of a minor Rudra performing the function of šiva on a smaller scale. See குணருத்திரர். |
காலலம்பு - தல் | kāl-alampu- v. intr. கால்1. +. 1. To wash one's feet; கால்கழுவுதல். 2. To wash after stool; |
காலவகை | kāla-vakai n. <>காலம்+. (W.) 1. Times, seasons; காலக்கூறு. 2. Circumstances depending on time; |
காலவம் | kālavam n. <>கால்3. Fire; நெருப்பு. (அக.நி.) |
காலவர்த்தமானம் | kāla-varttamāṉam n. <>kāla. Events of the time; நடப்புச்செய்தி. |
காலவரை | kāla-varai n. <>id. +. See காலவரையறை. . |
காலவரையறை | kāla-varai-y-aṟai n. <>id. +. 1. Fixing a time; காலநியமிப்பு. 2. Time-limit; specified period; 3. Settlement of a historical date; |
காலவழக்கம் | kāla-vaḻakkam n. <>id. +. Time-honoured usage; நடப்பு வழக்கமுறை. |
காலவழு | kāla-vaḻu n. <>id. +. (Gram.) Incorrect use of tense, as the past for the future; ஒரு காலச்சொல் தன்னோடு இயையாக் கால மொடு புணருங் குற்றம். தொல், சொல்11, சேனா.) |