Word |
English & Tamil Meaning |
---|---|
காலவழுவமைதி | kāla-vaḻu-amaiti n. <>id. +. (Gram.) Deviation in the use of tenses, sanctioned by usage; காலவழுவை இலக்கணமுடையதாக அமைப்பது. (அந்.383.) |
காலவாகுபெயர் | kāla-v-āku-peyar n. <>id. +. (Gram.) Noun literally signifying time of season used figurativerly to denote anything connected therewith, as the month Kārttikai for a plant which blossoms in the month; ஒரு காலத்தின்பெயர் அக்காலத்தோடு இயைபுடையபொருளுகு ஆகிவருவது. (நன்.390.) |
காலவிடைநிலை | kāla-v-iṭai-nilai n. <>id. +. Tense-sign; காலத்தைக்காட்டும் இடைநிலை. |
காலவித்தியாசம் | kāla-vittiyācam n. <>id. +. 1. Change of circumstances; காலவேறுபாடு. 2. Times of misfortune; |
காலவிதி | kāla-viti n. <>id. +. Misfortune; தீவினை. Colloq. |
காலவிரயம் | kāla-virayam n. <>id. + vyaya. Waste of time; வீண்காலம்போகை. |
காலவைரவன் | kāla-vairavaṉ n. <>id. +. A form of Bhairava; பைரவழர்த்தி பேதம். |
காலளப்பான் | kāl-aḷappāṉ n. <>கால்1 +. One who measures grain with a mara-k-kāl; தானியமளப்போன். காலளப்பானுக்குத் திருக்கொட்டாரத்திலே காலளவும் பெரியகோவிலுக்கு அமுதுபடி யெடுக்கிறது. (கோயிலொ.90). |
காலளவு | kāl-aḷavu n. <>id. +. Measurement with a mara-k-kāl; மரக்காலால் அளக்கி (கோயிலொ.90.) |
காலளவுப்பாட்டம் | kāl-aḷavu-p-pāṭṭam n. <>id. +. (I.M.P. Cg. 1023.) An ancient tax on kāl-aḷavu; காலளவின்பேரில் விதித்துவந்த ஒரு பழையவரி. |
காலன் | kālaṉ n. <>kāla. 1. Yama; யமன். காலனென்னுங் கண்ணிலி யுய்ப்ப (புறநா. 240, 5). 2. Yama's messenger; 3. Gift made with a view to propitiate yama; 4 Saturn; 5. One of the unseen heavenly bodies; 6. A mineral poison. See காந்தபாஷாணம். (மூ.அ.) 7. A prepared arsenic. See நீலபாஷாணம். (W.) |
காலன்கொம்பு | kālaṉ-kompu n. <>காளை+. Ox-horn; மாட்டுக்கொம்பு. (W.) |
காலன்கொள்(ளு) - தல் | kālaṉ-koḷ- v. intr. <>காலன்+. To accept a gift made for the purpose of propitiating Yama to avert death; காலதானம் வாங்குதல். காலன்கொண்டு மோதிரமிடுவாரைப்போலே (ஈடு, 10, 3, 5). |
காலனூர் | kālaṉ-ūr n. <>id. +. Hell, the abode of Yama; யமபுரம். (திவ, திருச்சங்.28.) |
காலக்ஷேபம் | kāla-kṣēpam n. <>kālakṣēpa. 1. Passing one's time or days; காலங்கழிக்கை. (W.) 2. Means of subsistence; 3. Reading sacred books; 4. Exposition of devotional stories with music; |
காலஹரணம் | kāla-haraṇam n. <>kāla + haraṇa. 1. Delay; காலதாமதம். 2. Expiry of the limitation period; |
காலா | kālā n. A genus of sea-fish, Polynemus; ஒருவகைக் கடல்மீன். |
காலாக்கினி | kālākkiṉi n. <>kālāgni. 1. See காலத்தீ. . 2. A supernal world under the regency of Kālākki; |
காலாக்கினிருத்திரபுவனம் | kālākkiṉiruttira-puvaṉam n. <>id +. (šaiva.) Region over which Kālākkiṉiruttiraṉ presides; கலக்கினிருத்திரனாற் காக்கப்பெறும் உலகம். |
காலாக்கினிருத்திரம் | kālākkiṉi-ruttiram n. <>Kālāgni-rudra. Name of Upaniṣad; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று. |
காலாக்கினிருத்திரன் | kālākkiṉi-ruttiraṉ n. <>id. Rudra, the god of destruction, one of the presiding deities in the lower regions; சங்காரகருத்தாவான உருத்திரன் (சி.சி, 1, 34, ஞானப்.) |
காலாகாலத்தில் | kālā-kālattil adv. cf. kāla + kāla. 1. At the proper time; உரியசமயத்து. காலாகாலத்தில் உண்ணவேண்டும். 2. Occasionally, not frequently; |
காலாகோலம் | kālā-kōlam n. prob. கால+கோலம். Disorder; அலங்கோலம். |
காலாங்கரை | kālāṅ-karai n. <>கால்1+. Inlet to lakes, tanks etc.; ஏரிக்கு நீர் கொண்டு வருங்கால்வாய். Loc. |
காலாங்கி | kālāṅki n. <>n. kālāgni. A Vēdic mantra to Kālākkiṉiruttira; காலாக்கினிருத்திர மந்திரம். காலாங்கி மனுநவின்று (சைவச.பொது.319). |
காலாசு | kālācu n. <>கால்1 + ஆசு1. Greaves; காற்கவசம். காலாசோ டறவெறிந்த கனைகழற்கால் (சீவக. 2236). |
காலாசுவரம் | kālā-cuvaram n. <>U. kālā + U. hazar. Black fever; கொடிய சுரநோய் வகை. (M.L.) |