Word |
English & Tamil Meaning |
---|---|
காவிடோல் | kāvi-ṭōl, n. <>காவி3. See காவிப்பருவன். Naut. . |
காவிதி | kāviti, n. 1. Ancient title bestowed on Vēḷāḷas by Pāṇdya kings; வேளாளர்க்குப் பாண்டியர் கொடுத்துவந்த ஒரு பட்டம். (தொல். பொ. 30, உரை.) 2. Title conferred on Vaišya ladies; 3. Minister; 4. Accountant caste; 5. Collector of revenues; |
காவிதிப்புரவு | kāviti-p-puravu, n. <>காவிதி +. Land bestowed upon the king's ministers; அரசராற் கவிதியர்க்குக் கொடுக்கப்பட்ட ஊர். (நன். 158, மயிலை.) |
காவிதிப்பூ | kāviti-p-pū, n. <>id. +. Gold flower, the badge of the title kāviti; காவிதியென்னும் பட்டத்துடன் அரசர் அளிக்கும் பொற்பூ (தொல். எழுத். 154, உரை.) |
காவிதிமை | kāvitimai, n. <>id. Accountant's work; கணக்குவேலை. காவிதிமைசெய்ய ஒருவனுக்கு அரையன் மணவிலிங்கனான செம்பியன் பெருங்காவிதிக்குப் பங்கு அரையும் (S. I. I. ii, 277). |
காவிதோய் - த்தல் | kāvi-tōy-, v. tr. <>காவி1 +. To dye or tinge with ochre, as ascetic's cloth; காஷாயமூட்டுதல். |
காவிப்பருவான் | kāvi-p-paruvāṉ, n. <>காவி3 +. Topsail-yard; கப்பலின் தலைப்பாய்மரம். |
காவிபிடி - த்தல் | kāvi-piṭi-, v. intr. <>காவி1 +. To acquire an yellowish-brown colour, as cloth by daily washing in water; to acquire a reddish colour, as teeth from betel, as from ochre; பழுப்புநிறம் ஏறுதல். |
காவிமண் | kāvi-maṇ, n. <>id. +. Red ochre in the shape of loose earth; செம்மண். |
காவியகுணம் | kāviya-kuṇam, n. ka1vya +. Merits of poetic composition, which are ten in number, viz., செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுக்கிசை, உதாரம், உய்த்தலில்ல்பொருண்மை, காந்தம், வலி, சமாதி; செய்யுட்குநம். (தண்டி.13.) |
காவியம் | kāviyam, n. <>kāvya +. 1. Epic poem; பழையதோர் கதைபற்றிய தொடர்நிலைச்செய்யுள். (திவ.) 2. Minor poetic composition; |
காவியன் | kāviyaṉ, n. <>id. Cukkiran, as the son of Kavi or Bhṟgu; சுக்கிரன். (இராசவைத்.) |
காவியா | kāviyā, n. See காவியாக்கட்டை. . |
காவியாக்கட்டை | kāviyā-k-kaṭṭai, n. <>காவி3+. Wooden beam of an anchor; நங்கூரக்கட்டை. |
காவியேறு - தல் | kāvi-y-ēṟu-, v. intr. <>காவி1 +. To have the yellowish-brown colour produced, as in white cloth by constant washing; ஆடையில் நீர்ப்பழுப்பேறுதல். |
காவிரி | kāviri, n. <>Kāvēri. See காவேரி. காவிரிரிவாயிலில் (மணி.22, 43). . |
காவிரிப்பட்டினம் | kāviri-p-paṭṭiṉam, n. <>id. +. See காவிரிப்பூம்பட்டினம். . |
காவிரிப்பூம்பட்டினம் | kāviri-p-pūm-paṭṭiṉam, n. <>id. +. Ancient sea-port and capital of the chola kingdom, the khaberis of ptolemy; சோழர்க்குரிய தலைநகரமும் பழைய துறைமுகப்பட்டினமுமாகிய புகார்நகரம். காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் (அகநா.107). |
காவிரிபுதல்வர் | kāviri-putalvar, n. <> id. +. Vēḷāḷas, as the sons of the soil fertilised by the Kāvēri; வேளாளர். (சிலப். 10, 148, உரை.) |
காவிவஸ்திரம் | kāvi-vastiram, n. <>காவி1+vastra. Brown-red cloth worn by ascetics; காஷாயவஸ்திரம். |
காவிளாய் | kāviḷāy, n. See காவிளை. (மலை.) . |
காவிளை | kāviḷai, n. cf. காய்வேளை. 1. An annual herb growing in waste lands See வேளை. 2. Purple wild indigo. See |
காவு 1 - தல் | kāvu- 5 v. tr. 1. To carry on the shoulder, as a palanquin, a pole with a weight at each end; தோளாற் காத்தண்டு சுமத்தல். காவினெங் கலனே (புறநா. 206). 2. To bear or sustain anything heavy, on the arms or on the head; |
காவு 2 - தல் | kāvu-, 5 v. tr. prob. kām. To long for desire; இச்சித்தல். தேனைக்காவி யுண்ணார் சிலதெண்ணர்கள் (தேவா. 338, 1). |
காவு 3 | kāvu, n. <>Pkt. ghāu. 1. Sacrifice, oblation to inferior deities; சிறுதெய்வங்களுக்கு இடும் பலி. காளிக்குக் காவுகொடுத்தார்கள். 2. Magic ointment used for mark on the forehead; |
காவுதடி | kāvu-taṭi, n. <>காவு1 +. Pole for carrying burdens on the shoulder; காவடித்தண்டு. |
காவுப்பொட்டு | kāvu-p-poṭṭu, n. <>காவு2 +. A mark of magic ointment worn on the forehead by the temple priest; பூசாரி நெற்றியிலணியும் அஞ்சனப்பொட்டு. (W.) |
காவுவோர் | kāvuvōr, n. <>காவு1-. Palanquin-bearers; பல்லக்குச்சுமப்பவர். |
காவேட்டைக்காரன் | kā-vēṭṭai-k-kāraṉ, n. prob. கா-+. Head huntsman of the ūraḷi caste who distributes every animal that is killed; ஊராளிச்சாதியில் வேட்டைக்காரர் தலைவன். |