Word |
English & Tamil Meaning |
---|---|
காவேரி | kāvēri, n. <>Kāvērī. Kāvēri river, as the daughter of Kavēra; கவேரன் மகளாகிய காவிரிநதி. வாழிகாவேரி (சிலப். 7, பாடல், 2). |
காவேரிப்பட்டணம் | kāvēri-p-paṭṭaṇam, n. <>id. +. See காவிரிப்பூம்பட்டினம். . |
காவேரிமணல் | kāvēri-maṇal, n. <>id. +. Iron sand; அயமணல். (W.) |
காவேரிமான்மியம் | kāvēri-māṉmiyam, n. <>id. +. Name of a Purāṇa on the Kāvēri river; காவிரியின்பெருமை கூறும் ஒரு புராணம். |
காவேளை | kāvēḷai, n. <>காய்வேளை. An annual herb grwoing in waste places. See வேளை. (W.) |
காவோலை | kāvōlai, n. prob. காழ்-+. Ripe palm leaf; முற்றின ஒலை. ஒலிகாவோலை (நற். 38). |
காழ் - த்தல் | kāḻ-, 11 v. intr. 1. To become hard, mature; முற்றுதல். காழ்த்த மரம் (திரிகடு. 75). 2. To be firm, strong in mind, implacable; 3. To increase beyond measure, abound; 4. to be pungent, acrid; |
காழ் 1 | kāḻ, n. <>காழ்-. cf. kāṣṭha. 1. Hardness; solidity, close grain, as of timber; core; மரவைரம். (திவா.) 2. Strength of mind; 3. Post to which a cow is tied; 4. Pillar; 5. Oar; 6. Iron rod; 7. Elephant goad; 8. Bolt, bar, as of a door; 9. Firewood; 10. Handle, stem; 11. Rafter; |
காழ் 2 | kāḻ, n. prob. kāš. 1. Brightness, lustre; ஒளி. (திவா.) 2. Gem; 3. Pearl, 4. Crystal; 5. Garland of pearls, of gems; 6. Garland of flowers; 7. Thread, string; |
காழ் 3 | kāḻ, n. cf. karṣa. 1. Seed; விதை. வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகா (நாலடி, 243). 2. Stone, nut, kernel, as of fruits; 3. Skin, as of a fruit, rind; 4. Gravel; |
காழ் 4 | kāḻ, n. cf. kāla. 1. Blackness; கருமை. கதுப்புவிரித் தன்ன காழக நுணங்கறல் (சிறுபாண். 6). 2. Blemsih, defect, fault; 3. Box-leaved satin ebony. See |
காழ்கொள்(ளு) - தல் | kāḻ-koḷ-, v. intr. <>காழ்-+. To mature, come to a climax; முதிர்தல். நிறையு முண்டோ காமங் காழ்கோளின் (மணி. 5, 20). |
காழ்கோளி | kāḻ-kōḷi, n. <>id. Indian mast tree. See நெட்டிலிங்கம். (L.) |
காழ்ப்பு | kāḻppu, n. <>id. 1. Pungency; உறைப்பு. (திவா.) 2. Close grain, as of the heart, of timber; 3. Implacable hatred; 4. Scar; 5. Essence; |
காழ்வை | kāḻvai, n. <>காழ்2. Tiger's-milk. See ஆரங் க்£ழ்வை கடியிரும் புன்னை (குறிஞ்சிப். 93). (M.M. 892.) |
காழகம் 1 | kāḻakam, n. Burmah; கடாரம். காழகத்தாக்கமும் (பட்டினப். 191.) (திவா.) |
காழகம் 2 | kāḻakam, n. <>காழ்3+அகம். cf. šāṭakam. 1. Cloth; ஆடை. புலராக் காழகம் புலரவுடீஇ (திருமுரு. 184). 2. Glove put on while handling an arrow; |
காழகம் 3 | kāḻakam, n. <>lālaka. Blackness; கருமை. காழகமூட்டப்பட்ட (சீவக. 1230). |
காழம் | kāḻam, n. prob. காழகம்2. A garment; உடைவிசேதம். காழ மிட்ட குறங்கினன் (கம்பரா. கங்கைப். 31). |
காழி 1 | kāḻi, n. <>காழ்-. Great strength, toughness, hardness; உறுதி. காழிக்கிளர் நாவலந் தீவில் (ஞானவா. கற்கடி. 8). |
காழி 2 | kāḻi, n. <>சீகாழி. Shyiyāli. See சீகாழி. (தேவா.) |
காழியர்கோன் | kāḻiyar-kōṉ, /n. <>காழி2+. Saint sambandha. See திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். கண்ணாருங் காழியர்கோன் கருத்தார்வித்த (தேவா.190, 11). |
காழியன் 1 | kāḻiyaṉ , n. prob. காழ்-. cf. kṣāl. Washerman, dhoby; வண்ணான். காழியர் கவ்வைப்பரப்பின் வெவ்வுவர்ப் பொழிய (அகநா. 89, 7). |