Word |
English & Tamil Meaning |
---|---|
அபிமானபுத்திரன் | apimāṉa-puttiraṉ n. <>id.+. Son by affection, foster son, not recognized by law; வளர்ப்புமகன். |
அபிமானம் | apimāṉam n. <>abhi-māna. 1. Self-respect, sense of honour; தன்மதிப்பு. (மச்சபு. மன்வந். 22.) 2. Erroneous identification, as of the soul with the body; 3. Love, affection; 4. Joy, enthusiasm; |
அபிமானஸ்திரீ | apimāṉa-stirī n. <>id.+. Concubine, used euphem.; வைப்பாட்டி. |
அபிமானி 1 - த்தல் | apimāṉi- 11 v.tr. <>id. 1. To honour, esteem, respect; மதித்தல். 2. To take great care of, support, love; |
அபிமானி 2 | apimāṉi n. <>abhi-mānin. One who has affection, attachment; பற்றுடையோன். |
அபிமுகம் | apimukam n. <>abhi-mukha. 1. Face turned towards; நேர்முகம். வடக்கபிமுகம் (நல். பாரத. கபிலை. 86). 2. Presence; |
அபிமுகன் | apimukaṉ n. <>id. Person favourably disposed; அனுகூலமானவன். ஐவரு மபிமுகராக (நல். பாரத. சத்தியபா. 4). |
அபியுக்தன் | apiyuktaṉ n. <>abhi-yukta. Scholar of high standing; அறிஞன். (திருக்கோ. நூன்முகம்.) |
அபிரங்கி | apiraṅki n. Species of Phyllanthus. See நீர்ப்பூலா. (W.) |
அபிராமம் | apirāmam n. <>abhi-rāma. That which is beautiful, lovely, pleasing, delightful; அழகானது. கொடுஞ்சமரிற் பட்ட வடுத்துளைத்த கல்லபிரா மம் (தனிப்பா. i, 92, 7). |
அபிராமன் | apirāmaṉ n. <>id. Sweet, charming person; மனத்துக்கினியவன். அபிராம விங்கு வருக (திருப்பு. 59). |
அபிராமி | apirāmi n. <>abhi-rāmi. Pārvatī, as beautiful; பார்வதி. (நல். பாரத. உமாமகே. 296.) |
அபிராமிபட்டர் | apirāmi-paṭṭar n. <>id.+. Name of a Brāhman devotee of Tirukkaṭavūr in the Tanjore district, author of the Apirāmi-y-antāti, 18th c,; அபிராமியந்தாதி யியற்றியவர். |
அபிராமியந்தாதி | apirāmi-y-antāti n. <>id.+. Name of a popular devotional poem on the goddess Apirāmi of Tirukkaṭavūr by Apirāmi-paṭṭar; ஒரு நூல். |
அபிருசி | api-ruci n. <>abhi-ruci. Great taste; மிகுவிருப்பம். |
அபிலாசை | apilācai n. See அபிலாஷை. அபிலாசையின்றி யாசாரியனைப் பிறிந்திருப்பா ரார் (உபதேசரத். 64). |
அபிலாஷை | apilāṣai n. <>abhi-lāṣa. Desire, wish, longing; விருப்பம். |
அபிவாதனம் | apivātaṉam n. <>abhi-vādana. Respectful salutation which describes the name and lineage of the person who salutes; தன் கோத்திரம் பெயர் முதலியன கூறிப் பெரியோரைத் தொழுகை. அபிவாதனத்தாற் பெரியோரை வணங்கல் (கூர்மபு. வியாதர்கரும. 8). |
அபிவியத்தி | apiviyatti n. <>abhi-vyakti. Manifestation; வெளிப்படுகை. நீர் கொண்ட சிவத்து வாபிவியத்திக்கு மீளப் பிறப்புண்டென்றவா றாயிற்று (சிவசம. 35). |
அபிவிருத்தி | apivirutti n. <>abhi-vrddhi. Growth, prosperity, continuous advancement; மேன்மேலும் பெருகுகை. தங்குல மபிவிருத்தி யெய்தும் (மச்சபு. சபிண்டீ. 29). |
அபின் | apiṉ n. <>U. afīm. Opium, inspissated juice of Papaver somniferum; கசகசாச் செடியின் பால். |
அபின்னம் | apiṉṉam n. <>a-bhinna. 1. That which is not different; வேறுபடாதது. (சூத. எக்கிய. பூ. 38, 9.) 2. State of being uninjured, completeness; |
அபினி | apiṉi n. See அபின். . |
அபிஷிக்தன் | apiṣiktaṉ n. <>abhi-ṣikta. One who is anointed, installed, enthroned; அபிஷேகம் பெற்றவன். |
அபீட்டம் | apīṭṭam n. See அபீஷ்டம். (மச்சபு. யயாதிபுத். 13.) |
அபீஷ்டம் | apīṣṭam n. <>abhīṣṭa. That which is desired; பிரியமானது. |
அபிஷேகம் | apiṣēkam n. <>abhi-ṣēka. 1. Bathing of an idol with water, etc. See அபிடேகம், 1. . 2. Anointing, consecrating. See அபிடேகம், 2. 3. Crown; |
அபுத்திபூருவம் | aputti-pūruvam n. <>abuddhi-pūrva. That which is unintentional; அறியாமல் நிகழ்ந்தது. சிவபுண்ணியம் அபுத்திபூருவம் புத்திபூருவமென் றிருவகைப்படும் (சி. போ. பா. 8,1,2, பக். 169). |
அபுத்திரகன் | a-puttirakaṉ n. <>a-putraka. One without male issue; புத்திரனைப் பெறாதவன். |
அபுதன் | aputaṉ n. <>a-budha. Fool, dolt; மூடன். (திருக்காளத்.பு.21,11.) |
அபூதம் | apūtam n. <>a-bhūta. Whatever has not been, has not happened; முன் இல்லாதது. |