Word |
English & Tamil Meaning |
---|---|
அபராவதாரம் | aparāvatāram n. <>apara+ava-tāra. New, different incarnation; வேறவதாரம். |
அபரிச்சின்னம் | a-paricciṉṉam n. <>a-paricchinna. That which is unlimited; அளவிடமுடியாதது. எம்பெருமானது அபரிச்சின்னமான குணங்கள். |
அபரிமிதம் | aparimitam n. <>a-parimita. Unlimitedness, immeasurableness, immensity; அளவின்மை. (பிங்.) |
அபரோட்சஞானம் | aparōṭca-āṉam n. <>a-parōkṣa+. Direct cognition as arising from the senses or such other sources of perception; பிரத்தியட்சஞானம். (வேதா. சூ. 23, உரை.) |
அபரோட்சம் | aparōṭcam n. <>id. See அபரோட்சஞானம். (வேதா. சூ. 115.) |
அபலந்துரு | apalanturu n. <>a-phala+dru. Non-fruitbearing tree, as scrub, young trees; பயன்தரா மரம். Rd. |
அபலம் 1 | apalam n. <>a-phala. Uselessness, barrenness; பயனின்மை. பலாபல மிவற்றில் விருப்பமற (ஞானவா. விரத. 10). |
அபலம் 2 | apalam n. <>a-bala. Weakness, as want of strength; வலியின்மை. |
அபலன் | apalaṉ n. <>id. Weak person; வலியற்றவன். |
அபலாபனம் | apalāpaṉam n. <>apa-lāpana. Concealing, hiding; மறைக்கை. இதனை அபலாபனம் செய்தல் யார்க்கும் ஒல்லாது (சிவசம. 54). |
அபலை | apalai n. <>a-balā. Woman, as weak; பெண். |
அபவர்க்கம் | apa-varkkam n. <>apa-varga. Emancipation of the soul from bodily existence, final liberation; முத்தி. அபவர்க்கமு மற்றடையான் (ஞானா. 3, 10). |
அபவருக்கம் | apa-varukkam n. See அபவர்க்கம். (திவா.) |
அபவாக்கு | apa-vākku n. <>apa-vāk. Evil word, opp. to சுபவாக்கு; தீமைவிளைக்குஞ் சொல். (சினேந். 454, உரை.) |
அபவாதம் | apa-vātam n. <>apa-vāda. 1. Calumny, slander, reproach; அவதூறு. உரையா தொழிதிமற் றொருவர்க் கபவாதம் (சேதுபு. கவிசம்பு. 61) 2. Bad reputation; |
அபவித்தன் | apa-vittaṉ n. <>apa-viddha. Son abandoned by his parents and adopted by a stranger, one of twelve puttiraṉ, q.v.; பெற்றோரால் விடப்பட்டுப் பிறரால் தத்துக் கொள்ளப்பட்ட மகன். |
அபவேட்டிதம் | apa-vēṭṭitam n. <>apa-vēṣṭita. (Nāṭya.) A gesture; அபிநயவகை. (சீவக. 1257, உரை.) |
அபஸ்மாரம் | apasmāram n. <>apa-smāra. 1. Epilepsy, as marked by loss of memory; காக்கைவலிப்பு. 2. That which is repulsive, disgusting; |
அபாக்கியம் | a-pākkiyam n. <>a-bhāgya. Wretchedness, misfortune; துரதிர்ஷ்டம். |
அபாங்கம் | apāṅkam n. <>apāṅga. Looking from the outer corner of the eye, gracious attention; கடைக்கணிப்பு. (சூடா.) |
அபாண்டம் | apāṇṭam n. <>Mhr. abhaṇda. Deliberate evil report, slander; இடுநிந்தை. அபாண்டமாய் என்மேற் சொல்லாதே. Colloq. |
அபாண்டவாஸ்திரம் | apāṇṭavāstiram n. <>a-pāṇdava+astra. Missile thrown out with a view of exterminating the PANDava clan; பாண்டவ வம்சத்தை யழிக்கப் பிரயோகித்த அஸ்திரம். |
அபாண்டவியம் | apāṇṭaviyam n. <>a-pāṇdavya. See அபாண்டவாஸ்திரம். . |
அபாத்திரம் | a-pāttiram n. <>a-pātra. Unfit recipient, person unworthy to receive a gift; தானம் பெறத் தகாதவன். இரப்பான் றன்னை யபாத்திரமென் றுன்னி (சைவச. பொது. 421). |
அபாமார்க்கம் | apāmārkkam n. <>apā-mārga. Species of Achyranthes. See நாயுருவி. (மாலை.) |
அபாயக்கொடி | apāya-k-koṭi n.<>apāya+. Danger-signal, red flag; ஆபத்தைக் குறிக்குங் கொடி. |
அபாயம் | apāyam n.<>apāya. Danger, misfortune, calamity; ஆபத்து. அபாய மொருநாளுமில்லை (நல்வழி, 15) |
அபார்த்தம் | apārttam n. <>apārtha. Erroneous meaning; தவறான பொருள். |
அபாரசக்தி | apāra-cakti n. <>a-pāra+. Unlimited power; அளவிலாற்றல். |
அபாரம் | apāram n.<>a-pāra. That which is boundless, as not having an opposite shore; அளவற்றது. (திவா.) |
அபாவம் | apāvam n. <>a-bhāva. 1. (Log.) Non-existence, negation, usu. of four kinds, viz., முன்னபாவம், அழிவுபாட்டபாவம், முழுதுமபாவம், ஒன்றினொன்றபாவம் (தருக்க சங். 8), of five kinds, viz., என்று மபாவம், இல்லத னபாவம், ஒன்றினொன் றபாவம், உள்ளத னபாவம், அழிவுபாட்டபாவம் (சி.சி. அளவை, 1 மறைஞா.), o இன்மை. 2. Non-cognition relied upon as proof of negation, one of six piramāṇam, q.v.; |