Word |
English & Tamil Meaning |
---|---|
அபங்கம் | apaṅkam n. <>a-bhaṅga. 1. A mineral poison; கோளகபாஷாணம். (மூ.அ.) 2. Marāṭhī devotional song; |
அபங்கன் | a-paṅkaṉ n. <>id. One free from defect, perfect; குறைவில்லாதவன். கொல் யானை யபங்கா (தமிழ்நா. 129). |
அபசகுனம் | apa-cakuṉam n. <>apa-šakuna. Bad omen; சகுனத் தடை. |
அபசப்தம் | apa-captam n. <>apa-šabda. 1. Faulty expression; வழூஉமொழி. 2. Inauspicious expression; 3. Disrepute; |
அபசயம் | apa-cayam n. <>apa-jaya. Destruction, ruin; கேடு. (மச்சபு. திரிபுரவி.2.) |
அபசரிதம் | apa-caritam n. <>apa-carita. Improper conduct, misbehaviour; தீயொழுக்கம். |
அபசவ்வியம் | apa-cavviyam n. <>apa-savya. 1. Left side; இடப்பக்கம். நலத்த சவ்விய மேயப சவ்விய நாமம் (வேதாரணி. பிரதக்.13). 2 Contrariety, disorder, as moving from right to left; |
அபசாரப்படு - தல் | apacāra-p-paṭu- v.intr. <>apa-cāra+. To be guilty of disregard, discourtesy, improper speech towards respectable people; குற்றப்படுதல். நான் தேவரீரிடத்து அபசாரப்பட்டுவிட்டேன். |
அபசாரம் | apa-cāram n. <>apa-cāra. Incivility, disrespectful conduct, irreverence; மரியாதை தவறிய செயல். (மச்சபு. சந்திரோ.17.) |
அபசித்தாந்தம் | apa-cittāntam n. <>apa-siddānta+. Wrong conclusion; போலிமுடிவு. பன்னு மபசித்தாந்த மாகும் (பிரபோத.43, 3). |
அபட்கை | apaṭkai n. Lower fang of a snake; பாம்பின் கீழ்வாய் விஷப்பல். (W.) |
அபத்தக்களஞ்சியம் | apatta-k-kaḷaciyam n. <>a-baddha+. Storehouse of errors; தவற்றுக்கிருப்பிடம். Colloq. |
அபத்தம் | apattam n. <>a-baddha. 1. Error; வழு. 2. Falsehood; 3. Instability; 4. Disaster, accident, calamity; |
அபத்தியம் | apattiyam n. <>a-pathya. Deviation from prescribed diet, improper or unsuitable diet, in medical treatment; பத்தியத் தவறு. அபத்தியஞ் செய்திட றனக்கே கேடு (வேதா.சூ.175). |
அபதார்த்தம் | a-patārttam n. <>a-padārtha. 1. Nonentity; உள்ளதல்லாதது. 2. That which is useless; |
அபதானம் | apatāṉam n. <>apa-dāna. Great or noble deed; பெருஞ்செயல். இதுவன்றோ அவனுடைய அபதான மிருதகிறபடி (ஈடு, 2, 8, 8). |
அபதேவதை | apa-tēvatai n. <>apa-dēvatā. Demon, goblin, evil spirit; துர்த்தேவதை. |
அபமார்க்கி | apa-mārkki n. <>apā-mārga. Species of Achyranthes. See நாயுருவி. (பதார்த்த.395.) |
அபமிருத்தியு | apa-miruttiyu n. <>apa-mrtyu. Untimely, accidental or unnatural death; அகாலமரணம். |
அபமிருத்து | apa-miruttu n. See அபமிருத்தியு. . |
அபயக்கல் | apaya-k-kal n. <>a-bhaya+. Boundary stone, as removing fear of encroachment; எல்லைக்கல். Loc. |
அபயகுலசேகரன் | apaya-kula-cēkaraṉ n. <>id.+. A Cōḻa king. See திருமுறைகண்டசோழன். (திருமுறைகண்.1.) |
அபயங்கொடு - த்தல் | apayaṅ-koṭu- v.tr <>id.+. To dispel fear by raising the hand, give assurance of protection, give refuge; அஞ்சலென் றருளுதல். |
அபயதானம் | apaya-tāṉam n. <>id.+. dāna. Giving assurance of safety or protection; அடைக்கலந் தருகை. (கம்பரா. விபீடண.120.) |
அபயப்பிரதானம் | apaya-p-piratāṉam n. <>id.+pra-dāna. See அபயதானம். (பிரபோத. 22.5.) |
அபயம் | apayam n. <>a-bhaya. 1. Fearlessness, intrepidity, safety, security; அச்சமின்மை. அபயமச்சம் (பிரபோத.27, 81). 2. Refuge, protection; 3. God's grace, as refuge; |
அபயமிடு - தல் | apayam-iṭu- v.intr. <>id.+. To call for succour, appeal for protection; அடைக்கலந்தரும்படி கூவுதல். அபயமிடு குரலறியாயோ (திருப்பு.180). |
அபயமுத்திரை | apaya-muttirai n. <>id.+. Pose of the right hand, as of an idol, raised as a sign of protection; அபயமளித்தலைக் காட்டுங் கைக்குறி. |
அபயர் | apayar n. <>id. Warriors; வீரர். (உரி.நி.) |
அபயலை | apayalai n. cf. amrṇāla. Cuscuss grass. See இலாமிச்சை. (தைலவ. தைல.34.) |
அபயவத்தம் | apayavattam n. prob. avahittha. (Nāṭya.) Gesture with both hands in which they, in cuka-tuṇṭam pose, are placed loosely so as to face the breast; இணைக்கைவகை. (சிலப்.3, 18, உரை.) |