Word |
English & Tamil Meaning |
---|---|
அப்பு 8 | appu n. (Astrol.) The sixth of 15 divisions of day; பகல் பதினைந்து முகூர்த்தத்துள் ஆறாவது. (விதான. குணா.73. உரை.) |
அப்புக்கட்டு | appu-k-kaṭṭu n. <>அம்பு+. Sheaf of arrows; அம்புகளின் கட்டு. (பதிற்றுப்.16, 4, உரை.) |
அப்புது | apputu int. Expr. which a mahout uses while patting and quieting an elephant; பாகர் யானையைத் தட்டிகொடுக்கையிற் கூறும் ஒரு குறிப்புச் சொல். (சீவக.1834.) |
அப்புலிங்கம் | appu-liṅkam n. <>ap+. Liṅga in the shrine at Tiruvāṉaikkāval, as representing the element water, one of pacaliṅkam, q.v.; பஞ்சலிங்கத்துள் திருவானைக்காவிலுள்ளது. |
அப்புவின்கூறு | appuviṉ-kūṟu n. <>id.+. (Saiva.) Categories which partake of the nature of the element water, five in number viz., நீர், உதிரம், சுக்கிலம், மூளை, மச்சை, One of 11 divisions of puṟa-nilai-k-karuvi, q.v.; புறநிலைக் கருவி வகை. (சிவப்.கட்.) |
அப்புளண்டம் | appuḷaṇṭam n. Fetid cassia. See தகரை. (மலை.) |
அப்புறப்படுத்து - தல் | appuṟa-p-paṭuttu- v.tr. <>அப்புறம்+. To remove, send away; வெளியேற்றுதல். |
அப்புறம் | a-p-puṟam <>அ+புறம். n.; adv. That side; Henceforth, after that, furthermore; அந்தப் பக்கம். அதன்பின். |
அப்பூச்சிகாட்டு - தல் | a-p-pūccikāṭṭu- v.intr. <>அ prothetic+. To frighten children by turning back the eyelids; கண்ணிதழை மடித்துக் குழந்தைகளைப் பயமுறுத்துதல். (திவ். பெரியாழ். 2, 1, 1.) Nurs. |
அப்பூதியடிகணாயனார் | appūti-y-aṭikaṇāyaṉār n. Name of a canonized Saiva saint, contemporary of Tiru-nāvukkaracu-nāyaṉār, one of 63; அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர். (பெரியபு.) |
அப்பூதியடிகள் | appūti-y-aṭikaḷ n. See அப்பூதியடிகணாயனார். . |
அப்பை | appai n. 1. See அப்பைக்கோவை. (பாலவா. 347.) 2. Indian laburnum. See சரக்கொன்றை. 3. A marine fish, brownish attaining more than one foot in length, Monocanthus monoceros; |
அப்பைக்கொவ்வை | appai-k-kovvai n. See அப்பைக்கோவை. (W.) |
அப்பைக்கோவை | appai-k-kōvai n. <>அப்பை+. A climber, Bryonia rostrata; கொடிவகை. (மலை.) |
அப்பொழுது | a-p-poḻutu adv. <>அ+ Then, at that time; அக்காலத்தில். |
அப்போது | a-p-pōtu adv. See அப்பொழுது. . |
அப்போதைக்கப்போது | a-p-pōtaikkappōtu adv. <>id.+. 1. From time to time; அவ்வக்காலத்தில். 2 Forthwith; |
அப்போழ்து | a-p-pōḻtu adv. Then. See அப்பொழுது. . |
அப்போஸ்தலர்நடபடிகள் | appōstalar-naṭapaṭikaḷ n. <>Gr. apostolos+. Name of a book in the Bible, viz., Acts of the Apostles. chr. . |
அப்போஸ்தலன் | appōstalaṉ n. <>Gr. apostolos. Apostle; கிறிஸ்துவின் தலைமைச் சீடர் பன்னிருவருள் ஒருவன். Chr. |
அப்ஸரஸ் | apsaras n. <>apsaras. A class of celestial nymphs; தெய்வப்பெண்களில் ஒரு வகையார். |
அப | apa part. <>apa. A Skt. adverbial or adnominal preposition implying contrariety, inferiority or distance; வடமொழி யுபசர்க்க வகை. |
அபக்கியாதி | apa-k-kiyāti n. <>apa-khyāti. Disrepute, disgrace, infamy; அபகீர்த்தி. |
அபக்குவம் | a-pakkuvam n. <>a-pakva. Immaturity, unripeness, unfitness; முதிராமை. |
அபக்குவன் | a-pakkuvaṉ n. <>id. Immature person, one not yet fit, esp. to be initiated; பரிபாகமடையாதவன். (தாயு. நினைவொ. 8.) |
அபக்குவி | a-pakkuvi n. <>a-pakvin. See அபக்குவன். . |
அபகடம் | apa-kaṭam n. <>ava-kaṭa. Guile, dissimulation; வஞ்சகம். அபகட நினைவிகள் (திருப்பு.243). |
அபகரி - த்தல் | apa-kari- 11 v.tr. <>apahar To seize by violence, snatch away, plunder, abduct; கவர்தல். எனையபகரிக்க வந்த சின்மயம் (தாயு. ஆசை. 33). |
அபகாரம் 1 | apakāram n. <>apa-kāra. Injury, wrong, mischief, opp. to உபகாரம்; தீமை. அபகார மாற்றச்செயினும் (நாலடி.69). |
அபகாரம் 2 | apakāram n. <>apa-hāra. Stealing, snatching away; கவர்கை. சுவர்ணாபகாரம். |
அபகாரி | apakāri n. <>apa-kārin. One who does evil to another, wrongdoer; தீமை செய்வோன். |
அபகீர்த்தி | apa-kīrtti n. <>apa-kīrti. Disgrace, ill fame, disrepute; அபக்கியாதி. |