Word |
English & Tamil Meaning |
---|---|
அபயவரதக்கை | apaya-varata-k-kai n. <>a-bhaya+. (Nāṭya.) A pose of the hands, one indicative of protection, and the other, bestowal of boons; அபிநயக்கை வகை. (பரத.பாவ.55.) |
அபயவாக்கு | apaya-vākku n. <>id.+. Assurance of safety, word of encouragement; அஞ்சலென்னுஞ் சொல். |
அபயன் 1 | apayaṉ n. <>a-bhaya. 1. Arhat, as without fear; அருகன். (திவா.) 2. Cōḻa king; |
அபயன் 2 | apayaṉ n. <>abhayā. See அபயன அபயனெனுங் கடுக்காய் (பதார்த்த.963). |
அபயன்கடுக்காய் | apayaṉ-kaṭukkāy n. <>id.+. Species of chebulic myrobalan; கடுக்காய் வகை. |
அபயஸ்தம் | apayastam n. Dial.var.of அபயஹஸ்தம். . |
அபயஹஸ்தம் | apaya-hastam n. <>a-bhaya+. 1. Right hand of an idol or great person raised in token of dispelling fear and assuring protection; அடைக்கலக்கை. 2. Brittle cake of sandal containing the impression of the right hand of the idol and presented to worshippers in temples; |
அபயாஸ்தம் | apayāstam n. Dial. var. of அபயஹஸ்தம், 2. . |
அபரக்கிரியை | apara-k-kiriyai n. <>apara+. Obsequies; பிரேத கருமம். அபரக்கிரியை இன்றோடு முடிந்தது. |
அபரகாத்திரம் | apara-kāttiram n. <>a-vara+. Leg; கால். வேழம்... மருப்புத்திண்கை யபரகாத் திரங்க டம்மாற்...கொன்றது (சீவக.806). |
அபரசூரியன் | apara-cūriyaṉ n. <>a-para+. Person pre-eminent in wisdom and character, as a second sun; ஞானநடைகளிற் சிறந்தோன். |
அபரஞ்சி | aparaci n. [T.K. aparaji.] Refined gold; புடமிட்ட பொன். ஆயிரத் தெட்டு மாற்றி னரஞ்சி (மச்சபு. தாரகாசுரவ. 26). |
அபரஞானம் | apara-āṉam n. <>a-para+. That which is not divine wisdom, as knowledge of Sāstras, opp. to பரஞானம்; சாஸ்திர ஞானம். (ஒழிவி.கிரியை.11, உரை.) |
அபரத்துவம் | aparattuvam n. <>a-paratva. Being behind, coming after; பின்மை. (பிரபோத.42,2.) |
அபரபக்கம் | apara-pakkam n. See அபரபட்சம். (இரகு.மாலையீ.96.) |
அபரபட்சம் | apara-paṭcam n. <>a-para+. The dark or latter half of the lunar month; கிருஷ்ணபட்சம். |
அபரபுத்தி | apara-putti n. <>id.+. Indiscretion, afterthought; பின்புத்தி. (W.) |
அபரம் | aparam n. <>a-para. 1. Latter, being after in time or place; பின். (பிங்.) 2. Back; 3. Hind leg of an elephant; 4. Falsehood; 5. Hell; 6. Coat of mail; 7. West; 8. Obsequies, opp. to பூர்வம்; 9. Stern of a ship. See அமரம். |
அபரமுத்தி | apara-mutti n. <>id.+. 1. Inferior state of bliss, attaintment of heavens of deities, opp. to பரமுத்தி; பதமுத்தி. 2. (Saiva.) Incomplete liberation which consists in enjoyment of bliss in any one of the cutta-tattuvam; |
அபரராத்திரம் | apara-rāttiram n. <>apara-rātra. Small hours of the night; நள்ளிரவிற் கடுத்த சாமம். |
அபரவயசு | apara-vayacu n. <>a-para+. Old age; முதிர்ந்த வயது. |
அபராங்கம் | aparāṅkam n. <>id.+aṅga. The hinder part of the body, back; சரீரத்தின் பிற்பாகம். வேடனத னபராங்கம் பிளக்க வெய்தான் (பாரத. அருச்சுனன் தவ.90). |
அபராசிதன் | aparācitaṉ n. <>a-parā-jita. He who is unconquered, invincible; வெல்லப் படாதவன். (சங். அக.) |
அபராணம் | aparāṇam n. <>aparāhṇa. Afternoon, last watch of the day; பிற்பகல். அபராணப் போழ்தி னடகிடுவ ரேனும் (நாலடி.207). |
அபராதகாணிக்கை | aparāta-kāṇikkai n. <>apa-rādha+. Gift to God made in expiation of failure to present the original gift in due time as vowed; செலுத்தற்குரிய பிரார்த்தனையைச் சரியாகச் சேர்ப்பிக்காத பிழைக்காகச் செலுத்துங் காணிக்கை. Colloq. |
அபராதம் | aparātam n. <>apa-rādha. 1. Offence, transgression, fault, crime, sin; குற்றம். அடியனேன் முன்னஞ் செய்த வபராதம் (திருவிளை நான்மாடக்.25). 2. Fine, penalty; |
அபராதக்ஷாபணம் | aparāta-kṣarapaṇam n. <>id.+ kṣāpaṇa. Seeking forgiveness; மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுகை. (குருபரம்.115.) |
அபராதி | aparāti n. <>apa-rādhin. Offender, guilty person; தீங்குசெய்தோன். உறவினுக்கபராதியும் (சிவதரு. பாவ.68). |