Word |
English & Tamil Meaning |
---|---|
அபூதவுவமை | apūta-v-uvamai n. <>id.+. Figure of speech in which non-existent things are used as standards of comparison; இல்பொருளுவமை. (தண்டி. 30.) |
அபூபம் | apūpam n. <>apūpa. Small round cake made of flour or meal; அப்பவகை. (பிங்.) |
அபூர்வம் | apūrvam n. <>a-pūrva. 1. That which has not existed before, is quite new, rare; புதிதானது. 2. That which arises from Karma and leads to results aimed at; |
அபேட்சி - த்தல் | apēṭci- 11 v.tr. <>apēkṣ. To desire; விரும்புதல். |
அபேட்சிதம் | apēṭcitam n. <>apēkṣita. That which is desired; விரும்பப்பட்டது. (ஈடு.) |
அபேட்சை | apēṭcai n. <>apēkṣā. Desire; விருப்பம். |
அபேதசைவம் | apēta-caivam n. <>a-bhēda+. Saiva sect which holds that the initiate should meditate of Siva as one with himself, one of 16 caivam, q.v.; சைவம் பதினாறனுள் ஒன்று. |
அபேதம் | apētam n. <>a-bhēda. Absence of difference or distinction, identity; வேற்றுமையின்மை. பொன்னும் பணியும்போல அபேதம் (சி. போ. சிற். 2, 1). |
அபேதவாதி | apētavāti n. <>id.+. One who maintains the identity of the individual self with the Supreme Soul; அத்துவைதி. |
அபோச்சியம் | apōcciyam n. <>a-bhōjya. That which is prohibited as food; உண்ணத் தகாதது. போதமிகு ஞானிகட் கபோச்சியமொன் றேனுமிலை (சூத.எக்கிய.45,3). |
அபோதம் | apōtam n. <>a-bōdha. Ignorance, stupidity; அறியாமை. நின்னபோதமின்றி (பாரத. சூது. 183). |
அபௌருஷேயம் | a-pauruṣēyam n. <>a-pauruṣēya. That which is not made by any one, as the Vēdas; ஒருவரற் செய்யப்படாதது. (ஈடு, 1, 1, 7.) |
அம் 1 | am n. Beauty, prettiness; அழகு. கிஞ்சுகவா யஞ்சுகமே (திருவாச.19,5). |
அம் 2 | am n. cf. ap, ambu. Water; நீர் அந்தாழ் சடையார் (வெங்கைக்கோ. 35) |
அம் 3 | am part. 1. Noun suff. denoting (a) instrument, as in நோக்கம், 'the instrument of seeing'; (b) object of the action expressed by a verb, as in நீத்தம், 'what is swum over'; (c) subject of the action expressed by a verb, as in எச்சம், 'what remains'; கருவிப்பொருள்விகுதி: செயப்படுபொருள் விகுதி: வினைமுதற் பொருள் விகுதி. 2. Suff. of vbl. nouns, as in வாட்டம், 'withering' 3. Suff. of abst. nouns, as in நலம், 'goodness'; 4. Verb-ending denoting the 1st pers. pl., as in செய்தனம், பெரியம்; 5. A euphonic augment, as in புளியங்காய்; 6. An expletive, as in போமினம்; |
அம்சசக்கரம் | amca-cakkaram n. <>amša+. (Astrol.) One of the two diagrams used in casting horoscopes. See நவாம்ச சக்கரம். . |
அம்சபத்திரம் | amca-pattiram n. <>id.+. Deed or memorandum evidencing a division of family property effected with the consent of all the members (R.F.); பாகசாஸனம். |
அம்சபாதம் | amca-pātam n. <>hamsa-pāda. Caret mark, interlineation indicated by a caret; புள்ளடிக்குறி |
அம்சபூதன் | amca-pūtaṉ n. <>amša-bhūta. One who forms part, as of a deity; அமிசமாயிருப்பவன். நம்முடைய அம்சபூத ரொருவரை (குருபரம்.166). |
அம்சம் 1 | amcam n. <>amša. 1. Part, portion; கூறு. 2. Share of property for expenses; 3. Denominator of a fraction; |
அம்சம் 2 | amcam n. <>Hamša. Name of an Upaniṣad; நூற்றெட் டுபநிடதங்களு ளொன்று. |
அம்சன் | amcaṉ n. <>hamsa. Kind of ascetic. See ஹம்ஸன். . |
அம்சஸ்வரம் | amca-svaram n. <>amša+. (Mus.) Prominent note of a melody-type; ஓர் இராகம் பாடுவதில் அடிக்கடி உபயோகப்படுத்தும் ஸ்வரம். |
அம்பகம் 1 | ampakam n. <>ambaka. 1. Eye; கண். (பிங்.) 2. Copper; |
அம்பகம் 2 | ampakam n. Elevation; எழுச்சி. (சது.) |
அம்பகம் 3 | ampakam n. <>T. ampakamu. Leave, permission; உத்தரவு. (W.) |
அம்பகன் | ampakaṉ n. A mineral poison; சீர்பந்தபாஷாணம். (மூ.அ.) |
அம்பட்டச்சி | ampaṭṭacci n. Fem. of அம்பட்டன். . |
அம்பட்டத்தி | ampaṭṭatti n. Fem. of அம்பட்டன். . |
அம்பட்டன் | ampaṭṭaṉ n. <>ambaṣṭha. Barber; நாவிதன். |