Word |
English & Tamil Meaning |
---|---|
அம்பலமேறு - தல் | ampalam-ēṟu- v.intr. <>id.+. 1. To be acceptable to the assembly; சபையாரால் ஏற்றுக்கொள்ளப் படுதல். ஏழை சொல் அம்பல மேறாது. 2. To go to court, or village assembly; |
அம்பலவரி | ampala-vari n. <>id.+. Tax paid by village officers in the Ramnad Zemindary to keep up their claim to official emoluments or mirasis; வரிவகை. |
அம்பலவாணகவிராயர் | ampala-vāṇa-kavi-rāyar n. <>id.+. Name of the author of the Aṟappalīcura-catakam; ஒரு புலவர். |
அம்பலவாணதேசிகர் | ampala-vāṇa-tēcikar n. <>id.+. Name of a Saiva ascetic of the Tiru-v-āvaṭutuṟai-y-ātīṉam, author of ten of the paṇṭāra-cāttiram, q.v.; பண்டார சாத்திரத்துள் பத்துச் செய்தவர். |
அம்பலவாணன் | ampala-vāṇaṉ n. <>id.+. Siva, as the presiding deity at the shrine of Cidambaram; சிவபிரான். (பட்டினத். திருப்பா. திருத்தில். 9.) |
அம்பலவிருட்சம் | ampala-viruṭcam n. <>id.+. Blinding tree. See தில்லைமரம். (W.) |
அம்பலி 1 | ampali n. An ancient drum; ஒரு வாச்சியம். அம்பலி கணுவை யூமை (கம்பரா. பிரமாத்திர. 5). |
அம்பலி 2 | ampali n. <>T. ambali. 1. Porridge, esp. of ragi; களி. 2. Gummy substance, as the white of an egg; |
அம்பறாத்தூணி | ampaṟā-t-tūṇi n. <>அம்பு+அறு1-+ஆ neg.+. Quiver, case for arrows; அம்புக்கூடு. (பிங்.) |
அம்பறு - த்தல் | ampaṟu- v.intr. <>id.+ அறு2-. To draw an arrow out of the quiver; அம்பைத்தூணியினின்று வாங்குதல். அம்பறுத்தெய்ய வேண்டும்படி (ஈடு,1,2,7). |
அம்பா | ampā n. <>ambā. 1. Mother; தாய். (பரிபா.11,81.) 2. Pārvatī, as mother of the universe; |
அம்பாணி | ampāṇi n. <>அம்பு +āṇi. Sharp head of an arrow; அம்பு நுனி. அம்பாணி தைத்ததுபோலப் பேசுகிறான். |
அம்பாயம் | ampāyam n. cf. apāya. 1. Pains of child-birth; பிரசவ வேதனை. (W.) 2. Pain; |
அம்பாரம் | ampāram n. <>U. ambār. 1. Heap of paddy or other grain on the threshing floor; நெற்குவியல். (திவ். திருவிருத். 58, வ்யா. அரும்.) 2. Granary; |
அம்பாரி | ampāri n. <>U. 'amāri, ambārī. [T.K. Tu. ambāri, M. ampāri.] Howdah with a canopy; யானைமேற்பீடம். |
அம்பால் 1 | ampāl n. prob. அம்+பால். Garden; தோட்டம். (W.) |
அம்பால் 2 | ampāl int. cf. T. ambāl. 'Not ready!', a call in a boy's game; விளையாட்டில் பிள்ளைகள் தடைநிகழ்த்த உபயோகிக்குஞ் சொல். |
அம்பாலிகை | ampālikai n. <>Ambālikā. 1. Name of the mother of Pāṇdu; பாண்டுவின் தாய். (பாரத. குருகுல. 128.) 2. Goddess of virtue; |
அம்பாவாடல் | ampā-v-āṭal n.<>ambā+. Ceremonial ablutions of young girls in the month of Taiṣam under the guidance of their mothers; தைந்நீராடல். அம்பா வாடலி னாய்தொடிக் கன்னியர் (பரிபா. 11, 81). |
அம்பி 1 | ampi n. <>தம்பி. Younger brother; Loc. Brāh. . |
அம்பி 2 | ampi n. [K. ambi.] cf. ambu. 1. Small boat; தோணி. பரிமுக வம்பியுங் கரிமுக வம்பியும் (சிலப். 13, 176). 2. Raft, float; 3. Ship; 4. Toddy; 5. Suspended water-shovel; |
அம்பிகாபதி | ampikā-pati n. <>Ambikā+. 1. Siva, as the husband of Pārvatī; சிவபிரான். (சூத. சிவமான். 7,8.) 2. Name of a poet, son of Kampar, author of the Ampikāpati-kōvai; |
அம்பிகாபதிகோவை | ampikāpati-kōvai n. <>id.+. A kōvai poem attributed to Ampikāpati; ஒரு நூல். |
அம்பிகாவல்லவர் | ampikā-vallavar n. <>id.+vallabha. Siva, as the husband of Pārvatī; சிவபிரான். (பெரியபு. ஏயர். 325.) |
அம்பிகேயன் | ampikēyaṉ n. <>Ambikēya. 1. Dhrtarāṣṭra; திருதராட்டிரன். (பாரத. திரௌபதி. 107.) 2. Gaṇēša; 3. Skanda; |
அம்பிகை | ampikai n. <>Ambikā. 1. Pārvatī, as mother; பார்வதி. (கந்தபு. தெய்வ. 32.) 2. Goddess of virtue; 3. Durga; 4. Name of the mother of Dhrtarāṣṭra; |