Word |
English & Tamil Meaning |
---|---|
அம்பிகைதனயன் | ampikai-taṉayaṉ n. <>id.+. Gaṇēša, as son of Pārvatī; விநாயகன். (சூடா.) |
அம்பிகைபாகன் | ampikai-pākaṉ n. <>id.+bhāga. Siva, as half-Pārvatī; சிவபிரான். (காஞ்சிப்பு. அந்தர்வே. 32.) |
அம்பிகைமாலை | ampikai-mālai n. <>id.+. Name of a poem in praise of Goddess Mīnākṣī of Madura, by Kulacēkara-pāṇṭiyaṉ; ஒரு நூல். |
அம்பிலி | ampili n. cf. U. ambil. Yolk or white of egg; முட்டைக் கரு (பைஷஜ. பக். 127.) |
அம்பினடி | ampiṉ-aṭi n. <>அம்பு2+அடி. Root of long pepper; திப்பலிமூலம். (தைலவ. தைல. 39.) |
அம்பு 1 | ampu n. Bracelet; வளையல். அம்பு கைக்காணாம் (சீவக. 2332). |
அம்பு 2 | ampu n. [T. K. Tu. ambu, M. ampu.] 1. Arrow; பாணம். (சீவக. 2286.) 2. Bamboo. See மூங்கில். 3. Long pepper. See திப்பிலி. 4. A mineral poison; |
அம்பு 3 | ampu n. <>ambu. 1. Water; நீர். 2. Sea; 3. World, as surrounded by water; 4. cf. ambu-da. Cloud; 5. Tincture; 6. See அம்புவாசினி, 1. 7. See அம்புவாசினி, 2. |
அம்புக்கட்டு | ampu-k-kaṭṭu n. <>அம்பு2+. Sheaf of arrows; அம்புகளின் கட்டியதொகுதி. (பிங்.) |
அம்புக்குதை | ampu-k-kutai n. <>id.+. Pointed end of an arrow; அம்பின் நுனி. (திவா.) |
அம்புக்குப்பி | ampu-k-kuppi n. <>id.+. Arrow-head; அம்பின்கொண்டை. பிங்.) |
அம்புக்குழைச்சு | ampu-k-kuḻaiccu n. <>id.+. See அம்புக்குப்பி. . |
அம்புக்கூடு | ampu-k-kūṭu n. <>id.+. Quiver. See அம்பறாத்தூணி. (திவா.) |
அம்புசம் | ampucam n.<>ambu-ja. Lotus, as water-born. See தாமரை. . |
அம்புசாதம் | ampu-cātam n. <>ambu+jāta. See அம்புசம். (மலை.) |
அம்புசாதன் | ampu-cātaṉ n. <>id. Brahmā, as lotus-born; பிரமன். அம்புசாதன் முகத்தினில் (பாரத. சிறப். 2). |
அம்புத்தலை | ampu-t-talai n. <>அம்பு2+ Butt end of an arrow; அம்பின் அடி. (திவா.) |
அம்புதம் | amputam n. <>ambu-da. 1. Cloud, as bestowing water; மேகம். அம்புதம போன்றிவ ரார்கொ லென்ன (திவ். பெரியதி. 2, 8, 3). 2. Sedge; |
அம்புதி | amputi n. <>ambu-dhi. Ocean, as the receptacle of waters; சமுத்திரம். (கந்தபு. தேவகிரி. 5.) |
அம்புப்பறை | ampu-p-paṟai n. <>அம்பு2+. Name of a class of Pariahs; பறையர்வகை. (W.) |
அம்புப்புட்டில் | ampu-p-puṭṭil n. <>id.+. Quiver; அம்பறாத்தூணி. |
அம்புமுது | ampu-mutu n. prob.ambu+ முதிர். Kind of pearl; முத்துவகை. (S.I.I. ii, 431.) |
அம்புயம் | ampuyam n. <>ambu-ja. Lotus, as water-born. See தாமரை. (நள. கலிநீ. 19.) |
அம்புயன் | ampuyaṉ n. <>id. Brahmā, as lotus-born; பிரமன். (கந்தபு. தெய்வயா. 223.) |
அம்புயை | ampuyai n. <>ambu-ja. Lakṣmī, as ocean-born; இலக்குமி. (திருவரங்கத்தந். 56.) |
அம்புராசி | ampu-rāci n. <>ambu-rāši. Ocean, as a mass of water; கடல். (பிங்.) |
அம்புலி | ampuli n.prob. அம்+புல்லு-. [M. ampiḷi.] 1. Moon; சந்திரன். (கலித். 80.) 2. A certain stage of childhood. See அம்புலிப்பருவம். |
அம்புலிப்பருவம் | ampuli-p-paruvam n. <>அம்புலி+ Section of piḷḷai-t-tamiḻ, which describes the stage of childhood in which the mother points out the moon and beckons it to come and play with the child, one of ten; பிள்ளைத்தமிழ்ப் பருவங்களு ளொன்று. |
அம்புலிமணி | ampuli-maṇi n. <>id.+. Moonstone, adularia; சந்திரகாந்தக்கல். (இரகு. சீதைவ. 23.) |
அம்புலிமான் | ampuli-māṉ n. <>id.+. See அம்புலியம்மான். . |
அம்புலியம்மான் | ampuli-y-ammāṉ n. <>id.+. [M.ampiḷi-ammāman.] Moon; சந்திரன். அம்புலியம்மானைப் பிடித்துத் தரவேணு மென்றழுத ப்ரஜைக்கு (ஈடு, 4, 3, ப்ர.). Nurs. |
அம்புவாசினி | ampu-vāciṉi n. <>ambu-vāsinī. 1. Trumpet-tree. See பாதிரி. (மலை.) 2. Sour lime. See எலுமிச்சை. |
அம்பை | ampai n. <>Ambā. 1. Pārvatī; பார்வதி. (திருக்காளத். பு. 24, 12.) 2. Name of a sister of Pāṇdu's mother, daughter of a king of Kāši; |