Word |
English & Tamil Meaning |
---|---|
குண்டலதீக்ஷிதர் | kuṇṭala-tīkṣatir, n. <>kuṇdala +. One who wear the kuṇṭalamin token of his having performed Sōma, sacrifice; சோமயாகம்புரிந்ததற்கு அடையாளமாகக் குண்டலக் கடுக்கன் அணிந்த வேதியர். |
குண்டலப்புழு | kuṇṭala-p-puḻu, n. <>id. +. See குண்டலப்பூச்சி. கோழிவிட்டேறி குழையினைக் குண்டலப்புழுவென்று (திருவானைக். திருநாட். 122). . |
குண்டலப்பூச்சி | kuṇṭala-p-pūcci, n. <>id. +. A kind of worm that rolls itself up; வளைந்து சுருண்டுகொள்ளும் புழுவகை. சுண்டுவிரலிலே குண்டலப்பூச்சி சுருண்டு கிடப்பனேன் (குற்றா. குற. 123, 13). |
குண்டலம் | kuṇṭalam, n. <>kuṇdala. 1. Gold ear-ring worn by men; ஆடவர்காதணிவகை. குண்டல மொருபுடை குலாவி வில்லிட (சீவக. 1009). 2. Sky, atmoshpere, heavens; 3. Circle; zero; |
குண்டலமண்டலம் | kuṇṭala-maṇṭalam, n. <>id. +. Coiling round; சுருண்டுவளைகை. |
குண்டலவுழுவை | kuṇṭala-v-uḻuvai, n. <>id. +. A fish found in fresh water and in backwaters, yellowish, Gobius straitus; நன்னீரிலும் கழியிலும்வாழும் மஞ்சள்நிறமுள்ள மீன்வகை. |
குண்டலன் | kuṇṭalaṉ, n. <>id. One who wears the kuṭalam; குண்டலந்தரிப்போன். ஒர் குண்டலன் (சூடா. 1, 10). |
குண்டலி 1 | kuṇṭali, n. prob. kuṇdalin. 1. Umbilical region; நாபித்தானம். குண்டாலியா னன லையோம்பி (சி. சி. 9, 8). 2. mystic circle situated between the anus and the generative organ; |
குண்டலி 2 | kuṇṭaliṉi, n. <>kuṇdalnī. 1. Gulancha. See சீந்தில். (தைலவ. தைல. 56.) 2. (Yōga.) A šakti or principle in the form of a serpent, abiding in the mūlādhāra; |
குண்டலி 3 | kuṇṭali n. <> kuṇdalinī Primal Māyā, as the presiding power in kuṇṭali. See சுத்தமாயை. (சி. போ. பா. 2, 2, பக். 133.) |
குண்டலிசக்தி | kuṇṭali-cakti n. <> குண்டலி3 +. See குண்டலி3 . |
குண்டலினி | kuṇṭaliṉI n. <> kuṉṭdalini 1. Primal Māyā; மகாமாயை. (சி.சி. 1. 57, சிவாக்.) 2. (Yōga.) A šakti or principle in the form of a serpent, abiding in the mūlādhāra; |
குண்டவண்டன் | kuṇṭa-vaṇṭaṉ, n. <>குண்டன்+. Short, stumpy person; குள்ளமாய்த்தடித்தவன். (J.) |
குண்டற்கச்சி | kuṇṭaṟkacci, n. A kind of cocount; தென்னைவகை. (பதார்த்த. 71.) |
குண்டன் | kuṇṭaṉ, n. <>kuṇda. 1. Son born in adultery; வியபிசாரத்திற் பிறந்த மகன். (பிங்.) 2. Strong, stout person; 3. Man low in caste or character; |
குண்டா | kuṇṭā, n. <>Mhr. guṇdā. See குண்டான்சட்டி. Colloq. . |
குண்டாக்கன் | kuṇṭākkaṉ, n. perh. குண்டு1+ஆக்கையன். Leader, chief; தலைவன். சமணர்க்கோர் குண்டக்கனாய் (தேவா. 963, 8). |
குண்டாச்சட்டி | kuṇṭā-c-caṭṭi, n. <>குண்டா+. See குண்டான்சட்டி. . |
குண்டாஞ்சட்டி | kuṇṭā-caṭṭi, n. <>id. +. See குண்டான்சட்டி. Colloq. . |
குண்டாணி | kuṇṭāṇi, n. <>குண்டு1+ஆணி. See குடையாணி, 1. . |
குண்டாணிக்கொடி | kuṇṭāṇi-k-koṭi, n. See குந்தாணிக்கொடி. (W.) . |
குண்டாந்தடி | kuṇṭān-taṭi, n. <>குண்டு1+ஆம்+. Short stout stick; பருத்துக்குறுகிய கைத்தடி. |
குண்டாமண்டி | kuṇṭāmaṇṭi, n. Mischief; குறும்பு. Colloq. |
குண்டாலரோகம் | kuṇṭāla-rōkam, n. [T. kuṇdālarōgamu.] Tumour in the head; தலையிலுண்டாகும் செவ்வாப்புக்கட்டி. (பைஷஜ.) |
குண்டான் | kuṇṭāṉ, n. kuṇṭāṉ, See குண்டான்சட்டி. . |
குண்டான்சட்டி | kuṇṭāṉ-caṭṭi, n. <>குண்டான்+. Vessel with wide mouth; வாய் அகன்ற பாத்திரவகை. |
குண்டி | kuṇṭi, n. 1. [T. kuṭṭe, K. kuṇde, M. kuṇṭi.] Buttocks; posteriors; rump of an animal; any rump-like protuberance; ஆசனப்பக்கம். Colloq. 2. The end of a fruit or nut opposite to the stalk; 3. [T. guṇde.] Heart; 4. Kidney; 5. Roe of fish, spawn; |
குண்டிக்காய் | kuṇṭi-k-kāy, n. <>குண்டி+காய். 1. [M. kuṇṭikkāyi.] Kidneys; மூத்திராசயம். (கால். வி.) 2. Heart; 3. Buttocks, posteriors; |
குண்டிக்காயெரிச்சல் | kuṇṭikkāy-ericcal, n. <>குண்டிக்காய்+. Inflammation of kidneys; மூத்திராசயத்திற் காணும் ஒருநோய். |