Word |
English & Tamil Meaning |
---|---|
குடைக்கொள்(ளு) 1 - தல் | kuṭai-k-koḷ-, v. intr. <>id. +. To overflow, as milk; to come to the surface, as some cakes in frying; to be pushed up, as a cloth in water; மேலெழுதல். (J.) |
குடைக்கொள்(ளு) 2 - தல் | kuṭai-k-koḷ-, v. intr. prob. குடம்1+. To capsize, to be upset as a cart; குடஞ்சாய்தல். (J.) |
குடைகரி | kuṭai-kari, n. <>குடை-+ Piece of charcoal bored into a cup for melting small nuggests of gold or silver; பொன்னுருக்கும் கரிக்குகை. படரிருட்குழாங் குடைகரியா . . . என் பொன்னை யுருக்குமாறு (பெருந்தொ. 1278). |
குடைகவிழ் - தல் | kuṭai-kaviḻ-, v. intr. prob. குடம்1+. To be upset, as a cart; to be overturned; to tip over; வண்டி குடங்கவிழ்தல். |
குடைச்சல் | kuṭaiccal, n. <>குடை-. Neuralgia, gnawing pain; வாயுவால் உண்டாகும் குடைச்சல் நோவு. (தைலவ. தைல. 15.) |
குடைச்சூல் | kuṭai-c-cūl, n. <>id. +. 1. Anklet; சிலம்பு. அவ்வரிக் குடைச்சூல் (பதிற்றுப். 68, 18). 2. The state of being hollow; |
குடைச்செலவு | kuṭai-c-celavu, n. <>குடை+செல்-. (Puṟāp.) Theme of a king sending the royal umbrella in advance in an auspicious hour, before he actually sets out to defend his territory from an advancing enemy; எதிர்த்து வந்தபகையைத் தடுத்துக்காக்கச் செல்லும்முன் தன் கொற்றக்குடையை நல்வேலையிற் புறவீடுவிடும் காஞ்சித்திணைத்துறை. (பு. வெ. 4, 8.) |
குடைச்செவி | kuṭai-c-cevi, n. <>குட+. Ears pricked up and bent forward, as those of an elephant, tiger, horse in surprise or rage; கோபம் முதலிய காரணங்களால் வளைவுபட்ட விலங்குகளின் செவி. (W.) |
குடைந்தாடு - தல் | kuṭaintāṭu-, v. intr. <>குடை-+ To bathe by immersion; அமிழ்ந்து நீராடுதல். புனல் குடைந்தாடினோ மாயின் (சிலப். 24, பாட்டு மடை). |
குடைநாட்கோள் | kuṭai-nāṭ-kōḷ, n. <>குடை+. (Puṟap.) Theme of a kind sending the royal umbrella in advance in an auspicious hour, before he actually sets out to capture his enemy's fortress; பகையரணைகொள்ளநினைந்து மேற்சென்ற வேந்தன் தன்குடையை நல்வேளையிற் புறவீடுவிடும் உழிஞைத்துறை. (பு. வெ. 6, 2.) |
குடைநிலை | kuṭai-nilai, n. <>id. Theme of a king sending the royal umbrella in advance in an auspicious hour, before he actually sets out on an expedition; பகைமேற் செல்லும் அரசன் தன்குடையை நல்வேளையிற் புறவீடு விடும் வஞ்சித்திணைத்துறை. (பு. வெ.3, 3.) |
குடைப்பனை | kuṭai-p-paṉai, n. <>id. + [M. kuṭappana.] Talipot palm. See தாளிப்பனை. (W.) |
குடைப்புல் | kuṭai-p-pul, n. <>id. +. Trail grass. See மயிற்கொண்டைப்புல். |
குடைமங்கலம் | kuṭai-maṅkalam, n. <>id +. Theme of eulogizing the state umbrella of a king whose fame has spread far and wide; நான்குதிக்கும் கீர்த்திமிக வீற்றிருந்த அரசனது குடையைப் புகழ்ந்துகூறும் பாடாண்டுறை. (பு. வெ. 9, 34.) |
குடைமிளகாய் | kuṭai-miḷakāy, n. <>id. +. Bell-pepper, s.sh., Capsicum grossum; காப்பிரிமிளகாய். (L.) |
குடைமுல்லை | kuṭai-mullai, n. <>id. +. Theme of enlogizing the state umbrella of a king who returned from battle laden with victory; போரில் வெற்றிகொண்ட அரசனது குடையைப்புகழ்ந்து கூறும் வாகைத்துறை. (பு. வெ. 8, 28.) |
குடையடி - த்தல் | kuṭai-y-aṭi-, v. intr. prob. குடம்1+. See குடங்கவிழ்-. Loc. . |
குடையாணி | kuṭai-y-āṇi, n. <>குடை+. [M. kuṭayāṇi.] 1. Pin or nail with round head, opp. to caṭai-y-āṇi; தலையிடம் உருண்டையான ஆணி. 2. Large pin used to keep a temple umbrella open; |
குடையோலை | kuṭai-y-ōlai, n. <>id. + Ola basket out of which low caste people eat and drink; இழிந்தசாதியார் உண்டற்குரிய கலமான ஓலைப்பட்டை. (திவா.) |
குடைவண்டு | kuṭai-vaṇṭu, n. <>குடை-+. Proforating beatle, borer; துளைக்கும் வண்டுவகை. (W.) |
குடைவு | kuṭaivu, n. <>id. 1. Hollwo; பொந்து. 2. Cavity; |