Word |
English & Tamil Meaning |
---|---|
குண்டுச்சுழி | kuṇṭu-c-cuḻi, n. <>id. +. The circular portion of kompu which forms part of the symbols of certain vowel-consonants, as in கெ, கோ, etc.; உயிர் மெய்யெழுத்துக்களின் கொம்பில் வலைக்குஞ் சுழி. |
குண்டுச்சூளை | kuṇṭu-c-cūḷai, n. <>id. +. Circular kiln; வட்டமாக அமைக்கப்படுங் காளவாய். Loc. |
குண்டுசட்டி | kuṇṭu-caṭṭi, n. <>id. +. Round earthen vessel; உருண்டையான சட்டிவகை. கூனையுங் குடமுங் குண்டுசட்டியும் (தனிப்பா. i,169, 20). |
குண்டுணி | kuṇṭuṇi, n. cf. குண்டணி. 1. Inciting, instigating to a quarrel; கலகமூட்டுகை. கோளுங் குண்டுணிப்பேச்சும் (இராமநா. உயுத். 81). 2. Slander, calumny; 3. Talebearer; |
குண்டுணிநாரதர் | kuṇṭuṇi-nāratā, n. <>குண்டுணி+. Lit., Nārada, the talebearer. Talebearer, instigator of quarrels; கோட்சொல்லிக் கலகமூட்டுபவன். Colloq. |
குண்டுதலையணை | kuṇṭu-talai-yaṇai, n. <>குண்டு1+. Small round pillow; வட்டத்தலையணி. Loc. |
குண்டுதைரியம் | kuṇṭu-tairiyam, n. <>id. +. Rash courage, follhardiness; மூரட்டுதரியம். Loc. |
குண்டுநீர் | kuṇṭu-nīr, n. <>குண்டு2+. The sea, as being deep; கடல். குண்டுநீர்வையத்து (நாலடி, 94). |
குண்டுநூல் | kuṇṭu-nūl, n. <>குண்டு1+. Plumb line used by masions; நுனியில் ஈயக்குண்டு கட்டப்பட்டிருக்கும் அளவுநூற்கயிறு. Colloq. |
குண்டுப்பிணையல் | kuṇṭup-p-iṇaiyal, n. prob. id. +. A kind of hinge; கீல்வகை. (J.) |
குண்டுபடு - தல் | kuṇṭu-paṭu-, v. intr. <>id. +. To be shot, to be wonded with bullet; வெடி குண்டால் தாக்கப்படுதல். குண்டுபட்டுச் செத்தான். |
குண்டுபாய் - தல் | kuṇṭu-pāy-, v. intr. <>குண்டு2+. To become hollow; ஆழம்படுதல். முள்ளுக்குத்திய இடம் குடுபாய்ந்துவிட்டது. Colloq. |
குண்டுபோடு - தல் | kuṇṭu-pōṭu-, v. intr. <>குண்டு1+. 1. To fire a salute as a sign of honour to distinguished persons, etc.; அரசாங்கத்தில் உயர்ந்தபதவியில் இருப்போர்கள் வருங்காலங்களிளும் பிற விசேஷகாலங்களிலும் மரியாதையின் பெபாருட்டு வெடிபோடுதல். 2. To mark the time of day by gun-fire; 3. To die; 4. To fail, to be unsuccessful, as in an undertaking, examination, etc.; |
குண்டுமணி | kuṇṭu-maṇi, n. Corr. of குன்றிமணி. |
குண்டுமரக்கால் | kuṇṭu-marakkāl, n. <>குண்டு2+. A grain measure of capacity =8 paṭi; எட்டுப்படிகொண்ட ஓரலவு. (G. Tn. D. I. 238.) |
குண்டுமரம் | kuṇṭu-maram, n. <>குண்டு1+. Lower half of the batten the heavy round bottom piece of the batten of which the upper part is the palakai, which gives it its force; நெசவுத்தறியின் ஓர் உறுப்பு. |
குண்டுமருந்து | kuṇṭu-maruntu, n. <>id. +. Bullet and powder, gunpowder; வெடிமருந்து. |
குண்டுமல்லிகை | kuṇṭu-mallikai, n. <>id. +. Tuscan jasmine. See குடமல்லிகை. (மூ. அ.) |
குண்டுமாலை | kuṇṭu-mālai, n. <>id. +. Necklace of beads; மணியாலமைந்த கழுத்தணி வகை. Loc. |
குண்டுமாற்றுக்குழிமாற்று | kuṇṭu-māṟṟu-k-kuḻi-māṟṟu, n. <>குண்டு2+. [T. kuṇdamārpu.] Loc. Lit., exchange of lands. 1. Exchange between families of daughters in marriage; பெண்ணைக்கொடுத்துப் பெண்வாங்குகை. 2. Deceitful action; |
குண்டுரம் | kuṇṭuram, n. <>id. +. Manure of cow-dung etc., as stored in a pit, dist. fr. kuḻai-y-uram; குழியிற்சேர்த்துவைக்கும் காணமுதலிய உரம். |
குண்டுருட்டாய்க்கட்டு - தல் | kuṇṭuruṭ-ṭāy-k-kaṭṭu-, v. tr. <>குண்டு1+. 1. To tie anything en masse; திரளச்சேர்த்துக்கடுதல். 2. To tie up head to heel, as rolling one into a ball; |
குண்டுரோசனை | kuṇṭu-rōcaṉai, n. prob. id. + rocanā. An odoriferous root growing in circular masses; வாசனையும் உருண்டிவடிவுமுள்ள ஒருவகை மருந்துக்கிழங்கு. (மலை.) |
குண்டுவட்டில் | kuṇṭu-vaṭṭil, n. <>குண்டு2+. A hollow dish; உட்குழிந்த வட்டில். (W.) |
குண்டுளகரம் | kuṇṭu-ḷakaram, n. <>குண்டு1+. The tamil letter ள, as beginning with a loop; சுழித்துத்தொடாங்குவதாகிய பொது ளகரம். Loc. |
குண்டூசி | kuṇṭūci, n. <>id. + ஊசி. Pin; தலைதிரண்டுள்ள ஊசி. |