Word |
English & Tamil Meaning |
---|---|
குண்டெழுத்தாணி | kuṇṭeḻuttāṇi, n. id. +<>எழுத்தாணி. Style with knob at the top, dist. fr. maṭakkeḻuttāṇi; தலைப்பக்கம் திரண்டுள்ள எழுத்தாணிவகை. |
குண்டெழுத்து | kuṇṭeḻuttu, n. <>id. +. Bold round hand; திரண்டு தடித்த எழுத்து. |
குண்டேறு | kuṇṭēṟu, n. perh. id. +ஏறு-. A kind of fish; மீன்வகை. (W.) |
குண்டை | kuṇṭai, n. prob. id. 1. Bull, ox; எருது. வையம் பூண்கல்லா சிறுகுண்டை (நாலடி, 350). 2. Taurus, sign of the zodiac; 3. That which is short and stout; 4. Shortness; 5. A species of mimosa. See |
குண்டைச்சம்பா | kuṇṭai-c-campā, n. <>குண்டை+. A kind of campā paddy; சம்பா நெல்வகை. (W.) |
குண்டோசனை | kuṇṭōcaṉai, n. See குண்டு ரோசனை. (W.) . |
குண்டோதரன் | kuṇṭōtaraṉ, n. <>kuṇda+udara. 1. A short gluttonous goblin in the host of šiva, having a capacious round belly; பெருவயிறும் குறுவடிவும் உடையனான சிவகணத்தவருள் ஒருவன். குண்டோதரனெனு நாமம் பூண்டு (திருவலவா. 4, 22). 2. A stout, big bellied glutton; |
குண்ணவாடை | kuṇṇa-vāṭai, n. prob. குணக்கு+. North east wind; வடகீழ்க்காற்று. குண்ணவாடை கூட்டினாலும் கூட்டும், கலைத்தாலும் கலைக்கும். Loc. |
குண்ணியம் | kuṇṇiyam, n. <>guṇya. (Arith.) Multiplicand; பெருக்கப்படும் எண். |
குணக்காய்ப்பேசு - j;y | kuṇakkāy-p-pēcu-, v. intr. <>குணக்கு+. To talk perversely, advance captious argument; விதண்டாவாடஞ்செய்தல். |
குணக்கிராகி | kuṇa-k-kirāki, n. <>guṇa+grāhin. One who recognises and appreciates the good points only; நற்குணத்தையே கொள்பவன். |
குணக்கு | kuṇakku, n. prob. குட. 1. East; கிழக்கு. கரைபொரு தொடுகடற் குணக்கும் (புறநா. 6, 3). 2. Crookedness, curvature; 3. Crossness, opposition; 4. Complication in sickness; |
குணக்கு - தல் | kuṇakku-, 5 v. tr. Caus. of குணகு-. To bend; வளைத்தல். (W.) |
குணக்குன்று | kuṇa-k-kuṉṟu, n. <>guṇa+. Lit., a mountain of good qualities. Person of noble character; நற்குணம் மிக்கவன். |
குணக்கேடன் | kuṇa-k-kēṭaṉ, n. <>id. +. Ill-natured person; நற்குணமற்றவன். இரங்காக் குணக்கேடன் (சைவச. ஆசா. 17). |
குணக்கேடு | kuṇa-k-kēṭu, n. <>id. +. 1. Bad dispostion, ill-nature; கெட்ட குணம். 2. Unfavourable symptom in disease; |
குணகண்டி | kuṇakaṇṭi, n. Indian jalap. See சிவதை. (மலை.) |
குணகாங்கி | kuṇakāṅki, n. See குணகாங்கியம். குணகாங்கி யென்னுங் கருநாடகச் சந்தமும் (யாப். வி. 96, பக். 490). . |
குணகாங்கியம் | kuṇa-kāṅkiyam, n. prob. Guṇa-gaṅga. An ancient treatise on prosody in Kanarese; பழையதொரு கன்னட யாப்புநூல் குணகாங்கியமென்னுங் கருநாடாகச்சந்தமேபோல மகடூஉ முன்னிலைத்தாய் (காரிகை, பாயிரவுரை). |
குணகாரம் | kuṇa-kāram, n. <>guṇa-kāra. (Arith.) Multiplication; பெருக்கல். (சூடா.) |
குணகு - தல் | kuṇaku-, 5. v. intr. perh. குட. cf. குணுகு-. (W.) 1. To become bent or crooked; வளைதல். 2. To sink, faint, fade, droop; 3. To be dejected; 4. To feel uneasy, to be vexed; |
குணகு | kuṇaku, n. cf. kuṇapa. See குணங்கு. . |
குணகுணிபாவம் | kuṇa-kuṇi-pāvam, n. <>guṇa + guṇī-bhāva. State of inseparbleness as an object and its attributes; பண்பும் பண்பியும்போலப் பிரியாமலிருக்கும் நிலை. அனல் வெம்மையும்போல் . . . குணகுணிபாவமாகி (சி. சி. 4, 6). |
குணகோளார்த்தம் | kuṇa-kōḷārttam, n. <>குணக்கு+gōla+ardha. Eastern hemisphere; பூமியின் கிழக்குப்பாதிக்கோளம். |
குணங்கர் | kuṇaṅkā, n. <>குணங்கு-. Devil, goblin, evil spirit; பூதபிசாசம். திரண்டன குணங்கரீட்டம் (கந்தபு. முதனாட்பானு. 312). |
குணங்காட்டு - தல் | kuṇaṅ-kāṭṭu-, v. intr. <>guṇa+. 1. To come out in one's true colours, reveal one's true character; இயற்கைக்குணத்தை வெளிப்படுத்துதல். 2. To show signs of cure, as diseases; |
குணங்கு - தல் | kuṇaṅku-, 5. v. intr. See குணகு-. |
குணங்கு | kuṇaṅku, n. <>குணகு. Devil, goblin; பூதபிசாசம். குணங்கினம்கானம் பாடி (கல்லா. 34, 4). (பிங்.) |