Word |
English & Tamil Meaning |
---|---|
குதிரைவீரர் | kutirai-vīrā, n. <>id. +. Cavalry, troopers, cavaliers; குதிரைப்படையாளர். |
குதிரைவையாளிவீதி | kutirai-vaiyāḷi-vīti, n. <>id. +. The place where horses are trained in different kinds of exercise; குதிரை செலுத்தற்குரிய செண்டுவெளி. (சூடா.) |
குதிவாதம் | kuti-vātam, n. <>குதி+. Neuralgia in the heels; குதிங்கால்வாதம். |
குதுகலம் | kutukalam, n. kutūhala. See குதூகலம். குதுகலம் பொங்க (தணிகைப்பு. பிரமன் சிருட். 83). . |
குதுகலி - த்தல் | kutukali-, 11. v. intr. <>id. See குதூகலித்-. குதுகலித் தாவியை யாகுலஞ்செய்யும் (திவ். நாய்ச் 5, 7). . |
குதுகலிப்பு | kutukalippu, n. <>குதுகலி- Ecstasy, joyfulness, repture; மகிழ்ச்சி. |
குதுகுது - த்தல் | kutukutu-, 11. v. tr. To desire eagerly; ஆசைப்படுதல். நாற்றங் குதுகுதுப்ப (பரிபா, 20, 13)--intr. To shiver from cold; |
குதுகுதுப்பு | kutukutuppu, n. <>குதுகுது-. 1. Desire, eagerness; ஆவல். குதுகுதுப்பின்றி நின்று (திருவாச. 6, 34). 2. Shivering with cold; |
குதுகுதெனல் | kutu-kuteṉal, n. Expr. signifying feverishness attended with shivering; குளிர்சுரக் குறிப்பு. Loc. |
குதுகுலம் | kutukulam, n. <>kutūhala. See குதூகலம். குதுகுலத் துளவின் றாமம் (அரிசமய. பதுமை.103.) . |
குதும்பகர் | kutumpakā, n. Bitter toombay. See தும்பை. (மலை.) |
குதுவை | kutuvai, n. <>T. kuduva. Mortgage. See கொதுவை. Loc. |
குதூகலம் | kutūkalam n. <>kutūhala. Joy, delight, rapture; அகக்களிப்பு. |
குதூகலி - த்தல் | kutūkali-, 11. v. intr. <>id. To rejoice, to delight in; அகமைகிழ்தல். அருளின் முழ்கிக் குதூகலித் திருதலோடும் (கந்தபு. வீரவாகு. 51) |
குதை | kutai, n. cf. guda. [M. kuta.] 1. Notch at the end of a bow to secure the loop of a bowstring; விற்குதை. குதைவரிச் சிலைநுதல் (கம்பரா. நகர. 49). 2. Notch at the feather end of an arrow; 3. Arrow; 4. Bow, loop, running knot, button or clasp of a bracelet; 5. Effort; |
குதை - த்தல் | kutai-, 11 v. intr. <>குதை1. To fasten the bow-string at the notch; விற்குதையில் நாணைப்பூட்டுதல். குதைக்கின்றன நிமிர்வெஞ்சிலை (கம்பரா. இராவணன்வ. 46). |
குதை 1 - தல் | kutai-, 4 v. intr. prob. உதை-. To discharge, propel; செலுத்துதல். குதைந்தவார் பகழிவேடன் (பிரமோத். 17, 12). |
குதை 2 - தல் | kutai-, 4 v. intr. prob. kṣud. To cause bewilderment, embarrassment; தடுமாறச்செய்தல். குதையும் வினையாவிதீர்ந்தேன் (திவ். இயர். நான்கு. 81). |
குதை | kutai, n. <>kṣudhā. Hunger; பசி. (அக. நி.) |
குதைபோடு - தல் | kutai-pōṭu-, v. intr. <>குதை1+. To button, to fasten as with a button; முடிச்சுப்போடுதல். (W.) |
குதைமணி | kutai-maṇi, n. <>id. +. A kind of hook, button; கொக்கிவகை. (W.) |
குதைமுடிச்சு | kutai-muṭiccu, n. <>id.+. Button of a running knot or noose; சுருக்கு முடிக்சு. (W.) |
குதையாணி | kutai-y-āṇi, n. <>id. +. Fastening pin or bolt in jewelry; சுரையாணி. (W.) |
குந்தக்கம் | kuntakkam, n. See குந்தகம். Vul. . |
குந்தகம் | kuntakam, n. prob. Mhr. kunda. [T. kundakamu, K. kundaka.] 1. Obstruction, obstacle; தடை. Colloq. 2. Low price; |
குந்தணை | kuntaṇai, n. prob. குந்து1+அனை. Special iron cauldron holding the vessel in which medicinal is prepared and serving as receptacle if the vessel gives way; காய்ச்சும் போது பாத்திரம் சிதையுமாயின் அதிலுள்ள தைலம் வீணாகாமற் காத்தற்பொருட்டு அப்பாத்திரத்துக்கு ஆதாரமாய் வைப்படும் இரும்பண்டா. (தைலவ. பாயி. 19.) |
குந்தந்தள்ளுகை | kuntan-taḷḷukai, n. <>குந்தம்4+. Staphyloma; கண்ணிற் குந்தநோய் விழுகை. Colloq. |
குந்தம் 1 | kuntam, n. perh. kuntaḷa. Horse; குதிரை. வெற்றிசேர் குந்தம் (திருவிளை. நரிபரி. 106). |
குந்தம் 2 | kuntam, n. perh. kunta. 1.See கற்பாஷாணம். . 2.See தாலம்பபாஷாணம். 3.See கோளகபாஷாணம். (மூ. அ.) 4. A standard weight=4 palam; |
குந்தம் 3 | kuntam, n. perh. kuja. Haystack; வைக்கோற்படப்பு. Loc. |