English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Aoristic
a. சிறப்பு வரையறையில்லாத, இறந்தகாலம் சார்ந்த.
Aorta
n. கண்டரை, ஆதார நாடி, இதயத்தின் இடது ஏற்றறையிலிருந்து புறப்படும் பெரிய இரத்தக்குழாய்.
Apace
adv. விரைவாக, விரைநடையில்.
Apache
n. செவ்விந்தியர் இனக்குழு வகை, பாரிஸ் தெருவீணர்.
Apagoge
n. மறுதலைத் தவறு மூலம் மெய்ம்மை எண்பிக்கும் முறை.
Apanage
n. இளைய அரசகுடியினர் உயர் குடியினர் ஆதரவுக்கான ஏற்பாடு, மேல்வருமானம், ஒட்டுநிலம், சார்பு நாடு, இயல்பான அடை, துணைப்பண்பு.
Apart
adv. புறம்பாக, வேறாக, தனியாக, சார்பின்றி, ஒட்டாமல், சேராமல், பிரிந்து, நீங்கலாக.
Apartheid
n. தென்ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக்கொள்கை, இன ஒதுக்கீடு.
Apartmental,a;
தனி அறைக்குரிய.
Apartments
n.pl. அறைகளின் தொகுதி.
Apathetic
a. உணர்ச்சியற்ற, பராமுகமாயிருக்கிற, ஆர்வமில்லாத.
Apathy
n. உவ்ர்ச்சியின்மை, அக்கறையற்ற நிலை, பற்றின்மை, உவர்ப்பு, மடிமை.
Ape
n. குரங்கு, வாலில்லாக்குரங்கினம், பிறரைக்கண்மூடித்தனமாய்ப் பின்பற்றுபவர், பிறர்போல் நடிப்பவர்,(வினை.) பிறரைக் கண்மூடிப் பின்பற்று, பிறர்போல் நடி.
Apeak
adv. (கப்.) செங்குத்தாக, நேர் நிமிர்வாக.
Apepsia,apepsy
வயிற்றுமந்தம், செமிக்கும் ஆற்றல் குறைவாயிருத்தல்.
Apercu
n. சுருக்க விளக்கம், குறிப்புரை.
Aperient
n. பேதிமருந்து,(பெ.) குடல்இளக்குகிற, பேதியாகச்செய்கிற.
Aperiodic
a. கால ஒழுங்குப்படி நிகழாத, ஊசலாட்டமின்றி அமைந்திருக்கிற.
Aperitif
n. பசியெழுப்பும் நீர்மம், பசியூட்டும் மதுபானம்.