English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Approximate
a. மிக்க அண்மையில் உள்ள, பெரிதும் ஒத்திருக்கிற, ஏறத்தாழச் சரியாயிருக்கிற, (வினை.) பெரிதும் ஒத்திருக்கச் செய, அணுகு.
Approximation
n. ஒத்திருத்தல், அணுகுதல், (கண.) நெருங்கிய அளவீடு, ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
Approximative
a. அணித்தான.
Appui
n. (படை.) துணைவலி, துணை, அண்டைகட்டு, (வினை.) தாங்கு, காப்புப்படைவரிசையில் ஆற்றல் மிக்க இடத்தண்டை நிறுத்து.
Appurtenance
n. உடைமை, சேர்மானம், துணைப்பொருள், (சட்.) உடைமைக்கு உரிமை.
Appurtenant
n. உடைமை, (பெ.) உடைமையான, இணைந்துள்ள, தொடர்பான.
Apricot
n. வாதுமை போன்ற கொட்டைப் பழவகை, சீமைவாதுழைப்பழம், சீமை வாதுமை நிறம், சீமை வாதுமை மஜ்ம்.
April
n. ஆங்கில ஆண்டில் நான்கவாது மாதம்.
April-fish
n. ஏப்ரல் மாதம் முதல் நாளன்று ஒருவரை ஏமாற்றுதற்காக அவருக்கிடம் பயனற்ற வேலை.
April-fool
n. ஏப்ரல் மாதம் முதல் நாளன்று ஏமாற்றலாக பயனற்ற வேலைக்கு ஏவப்படும் ஒருவர்.
Aprilian, Aprilish
ஏப்ரல் மாத்ததுக்குரிய, ஏப்ரல் மாத இயல்புள்ள.
Apriorism
n. காரண காரிய வாதம்.
Apriorist
n. காண்ட் என்ற செர்மானியத் தத்துவப் பேராசிரியர், கொள்கையைப் பின்பற்றுபவர், நுகர்ச்சி சாராத மனக்கோட்பாடுகளிலிருந்து மெய்ம்முடிவுகளுக்கு வரவேண்டுமென்னும் கொள்கையினர்.
Apron
n. முன்றானை, தூசிதாங்கி, உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல், சமய நிலைகளுக்குரிய உடுப்பு, திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை, வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை, அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி, வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு, (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
Aproned
a. முன்றானை பொருத்தப்பட்டுள்ள.
Apron-string
n. முன்றானையை உடம்போடு சேர்த்துக்கட்டும் கயிறு.
Apropos
n. பொருத்தம், (பெ.) பொருத்தமான, தொடர்பான, காலத்துக்கேற்ற, ஏற்புடைய, (வினையடை.) பொருட்டாக, நிமித்தமாக, பொருத்தமாக.
Apse
n. திருக்கோயில் கவிகைக் கூரையுள்ள அரை வட்டஒதுக்கிடம், பல பக்கங்களுள்ள வளைவு ஒதுக்கிடம்.
Apsidal
a. திருக்கோயிலில் உள்ள ஒதுக்கிடத்தின் வடிவுள்ள, கிரகத்தின் ஞாயிற்றுச்சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய, நிலவுலகத்தின் திங்கள் சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய.
Apsis
n. ஞாயிற்றின் நெடுஞ்சேய்மையில் அல்லது மிக அண்மையில் அமைந்த கிரகத்தின் இடம், திங்கள் நிலவுலகுக்கு நெடுஞ்சேய்மையாக அல்லது மிக அண்மையாக இருக்கும் நிலை.