English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Aquarium
n. நீர்வாழ் பொருட்காட்சிச்சாலை.
Aquarius
n. கும்பராசி, 11வது வான்மனை, கும்பராசியடுத்த விண்மீன் குழு.
Aquatic
n. நீர்வாழ் செடி, நீர்வாழ் உயிரினம், நீர்விளையாட்டுக்காரர், (பெ.) நீரில் வளர்கிற, நீருக்கருகில் வளர்கிற, நீரில் வாழ்கிற, நீரில் நிகழ்கிற, நீர்மேல் கடத்தப்படுகிற.
Aquatics,n.pl
நீர்விளையாட்டுக்கள்.
Aquatint
n. காடிச் செதுக்குமுறை, பிசினையும் வெடியக்காடியையும் கொண்டு செம்பின்மேல் செதுக்குவேலை இழைக்கப்படும்முறை, (வினை.) செம்பில் பிசினும் காடியும் கொண்டு செதுக்கு.
Aqua-vitae
n. வெறியம், சாராயம், வெறிநீர்வகை.
Aqueduct
n. கட்டுக்கால்வாய், கால்வாய்ப்பாலம், உயர்தளத்தின் ஊடாகச் செல்லும் நீர்க்குழாய், சாலகம், (உட.) பாலுணிகளின் தலையில் அல்லது உடலில் உள்ள சிறுகுழாய்.
Aqueous
a. நீர் சார்ந்த, நீர்கலந்த, நீர்த்த, (மண்.) நீரினால் படியவிடப்பட்ட.
Aquifoliaceous
a. பசுமை மாறாத, இலையுதிராத.
Aquila
n. பொன்னிறக் கழுகினம், கழுகு வடிவமான விண்மீன் குழு.
Arab
n. அராபிய நாட்டவர், அராபிய இனத்தவர், அராபியக்குதிரை, அநாதைச் சிறுவர், (பெ.) அராபிய, அராபியர்களுக்குரிய.
Araba
n. மூடாக்கு வண்டி, கட்டை வண்டி.
Arabesque
-1 n. அராபிய வண்ணச்சித்திர வேலை, தொடர்வண்ண இசைப்பாட்டு, ஆடல் நிலைவகை, உடலையும் ஒருகாலையும் நிலத்தளத்துக்கு இணையாக்கி ஒருகாலில் நிற்கும் நிலை.
Arabesque(2), arahesqued
a. அராபிய முறை சார்ந்த, விசித்திரமான, விசித்திரப் பூப்பின்னல் வேலைப்பாட்டினால் ஒப்பனை செய்யப்பட்ட.
Arabian
n. அராபியர், (பெ.) அராபியாவுக்குரிய, அராபிய இனத்தவருக்குரிய.
Arabic
n. அரபுமொழி, (பெ.) அராபியாவுக்குரிய, அரபுமொழித்தொடர்பான.
Arabin
n. பிசினம், வேல் இன மரப்பிசினில் உள்ள அடிப்படைப்பொருள்.
Arabis
n. (தாவ.) கடுகுச் செடியினம்.
Arabism
n. அரபுமொழி மரபு, அரபு மரபுவழக்கு.