English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Apt
a. தகுதியுள்ள, பொருத்தமான, பாங்குடைய, ஒருதுறையில் அறிவுக்கூர்மையுள்ள.
Apterium
n. பறவைகளின் இறகுகளுக்கு இடைப்பட்ட வெறும் இடம்.
Apterous
a. சிறகற்ற, (தாவ.) மென்தோல் நீட்டிப்பு இல்லாத.
Apteryx
n. நியூசிலாந்தில் காணப்படும் வாலற்றதும் பறக்காததுமான ஒருவகைப்பறவை.
Aptitude
n. தகுதி, இயற்கைப்பாங்கு, போக்கு, நாட்டம், திறமை, கற்றுக்கொள்ளும் ஆர்வம்.
Aptote
n. வேற்றுமையுருபு ஏற்கமாட்டாத பெயர்ச்சொல்.
Aptotic
a. வேற்றுமை ஏற்கமாட்டாத.
Apyrexia
n. காய்ச்சல் நின்றிருத்தல், காய்ச்சல் இல்லாமை.
Aqua
n. (வேதி.) நீர், நீர்மம், நீரியற்பொருள், கரைசல்.
Aqua Tofana
n. 1ஹ்ம் நுற்றாண்டில் வாழ்ந்த டொபானா என்ற மாது உண்டு பண்ணிய நச்சுப்பொருள்.
Aqua-fortis
n. வெடியக்காடி, வெடியக்காடியைக் கொண்டு செதுக்குதல்.
Aquafortist
n. வெடியக்காடியைக்கொண்டு செதுக்கு வேலை செய்பவர்.
Aqualung
n. மூழ்க உதவும் அமைவு, நீர்மூழ்குபவர் கொண்டு செல்லும் உயிர்ப்புக்குழாய்க்கலம்.
Aquamarine
n. கடல் வண்ணக்கல், (பெ.) நீர்ப்பச்சை நிறமுடைய.
Aqua-mirabilis
n. இலவங்கம் சாதிக்காய் இஞ்சி மதுச்சாரம் இவற்றிலிருந்து வடித்திறக்கப்படும் சாறு.
Aquaplane
n. விரைவோடத்திற்குப் பின் இழுக்கப்படும் பலகை, (வினை.) விரைவோடப் பலகை மீது ஏறு.
Aqua-regia
n. அரச நீர்மம், பொன்னையும் விழுப்பொன்னையும் கரைக்கக்கூடிய வெடியக்காடியும் நீர்ப்பாசிக் காடியும் சேர்ந்த கலவைநீர்.
Aquarelle
n. நீர்வண்ண ஓவியம், நீர்வண்ணப்படம்.
Aquarian
n. நீர்வாழ் பொருட்காட்சிச்சாலை வைத்திருப்பவர், (பெ.) நீர்வாழ் பொருட்காட்சிச்சாலைக்கு உரிய.
Aquariist, aquarist
நீர்வாழ் பொருட்காட்சிச்சாலை வைத்திருப்பவர்.