English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Argosy
n. மிகப்பெரிய முற்கால வாணிகக் கப்பல், கப்பல், துணிவுச் செயல்.
Argot
n. குமூஉமொழி, திருடர் நாடோ டிகள் போன்றவர்வழக்கு, கொச்சைமொழி.
Arguable
a. வாதாடுதற்குரிய, நிலைநாட்டக்கூடிய.
Argue
v. சொல்லாடு, வாதிடு, காரணங்காட்டி நிலைநாட்டு, மெய்ப்பி, முடிவு சுட்டிக்காட்டு,விரித்துறை, விளக்கிஎழுது, வாதமூலம் தூண்டுதல் அளி.
Argument
n. வாதாடல், வாதம், சான்று, ஆதாரம், எடுத்துக்காட்டப்படும் காரணம், காரண காரிய விளக்கம், விவாதப்பொருள், நுற்பொருள் சுருக்கம், (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று,(கண்.) சார்பளவைச் சுட்டு, (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்.
Argumentation
n. முறைப்படி வாதித்தல், சொற்போர், விவாதம்.
Argumentative
a. அளவை முறையை ஒட்டிய, வாதிக்கும் ஆர்வமுள்ள, விவாதத்துக்கு இடமான.
Argus
n. நுறுகண்களை உடையவனென்று பண்டைக்கிரேக்கக் கதைகளில் கூறப்படும் மனிதன், விழிப்பாய்க் கவனிப்பவன், கண்கொட்டாக் காவலன், சிறகுகளில் கண்போன்ற புள்ளிகளையுடைய பட்டுப்பூச்சிவகை.
Argus-eyed
a. விழிப்பாய் இருக்கிற
Argus-shell
n. கண்போன்ற புள்ளிகளையுடைய பீங்கான் ஓடு.
Argute
a. அறிவுக்கூர்மையான, நுழைபுலமுள்ள, கீச்சென்ற, காதைத் துளைக்கிற.
Argyranthous
a. வௌளி போன்ற மலர்களையுடைய.
Argyria
n. வௌளி நச்சூட்டு, வௌளி கலந்த பொருள் உட்கொண்டதால் ஏற்படும் மேனி நிறமாற்றம்.
Argyrophyllous
a. வௌளிபோன்ற இலைகளையுடைய.
Aria
n. (இசை.) மூன்று பகுதிகளாகப் பிரித்து விரிவாகப்பாடப்படும் பாடல்வகை.
Arian
n. கி.பி.4ஆம் நுற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியாவில் வாழ்ந்த ஏரியஸ் என்பவரின் கொள்கையினைக் கடைப்பிடிப்பவர், கடவுள் மூவர் அல்லர் ஒரு முழுமுதற்பெரும் பொருளே என்னுங் கொள்கையினர்,(பெ.) ஏரியஸ் கொள்கையைச் சார்ந்த, ஏரியஸைப்பின்பற்றுகிற.
Arianism
n. ஏரியஸின் கொள்கை, இயேசுநாதர் கடவுளின் திருமகனார் என்பதை மறுக்குங்கொள்கை.
Arianize
v. ஏரியஸ் கொள்கையைப் பின்பற்று, ஏரியஸ் கொள்கைக்கு மாற்று.
Arid
a. உலர்ந்த, வறண்ட, ஒன்றும் விளையாத, வெறுமையான.
Aridity
n. வறட்சி, பாழ்நிலை.