English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Arras
n. ஓவியத்திரை, சுவர்மறைப்புத்திரை, அலங்காரச்சிலை.
Arrasad
a. ஓவியத்திரையினால் மூடப்பட்ட.
Arrasene
n. பூப்பின்னல் வேலைக்குரிய கம்பளி அல்லது பட்டு.
Array
n. வரிசை, படையணி, மக்களின் அணிவகுப்பு, பரிவாரம், அணிகலன்கள், (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை,(வினை.) ஒழுங்குபடுத்து, அணிவகு, பகட்டாக உடுத்து, ஒப்பனை செய், தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு, (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
Arrear
n. (சட்.) ஊர்வல வரிசையின் பின்பகுதி, நிலுவை.
Arrearage
n. பிற்பட்டிருத்தல், செலுத்தப்படாத எச்சத்தொகை.
Arrearages
n.pl. கடன்கள்.
Arrect
a. நெட்டுக்குத்தான, விழிப்புள்ள.
Arrest
n. நிறுத்தல், பிடித்தல், கவனப்பிணிப்பு, (வினை.)நிறுத்து, தடைசெய், (சட்.) நடவடிக்கைகளை நிறுத்து, பிடி ஆளைக்காட்டிக் கைப்பற்று, கருத்தைக்கவர்.
Arrestation
n. நிறுத்துதல், பிடியாணைகொண்டுபிடித்தல்.
Arrestee
n. பற்றுகைக்குட்பட்ட சொத்தினை வைத்திருப்பவர்.
Arrester
n. சிறைபிடிப்பவர், தடுத்து நிறுத்தும்பொருள்.
Arrestergear
n. பற்றுவல்ம், விமானந்தூக்கிக் கப்பலில் இறங்கும் விமானங்களின் அதிர்ச்சி தரப்புக்குரிய கம்பிவடஅமைவு.
Arresting
a. கருத்தை ஈர்க்கிற.
Arrestive
a. கருத்தைக்கவரும் பாங்குள்ள, (இலக.) பொருள் எல்லையைக் குறுக்குகிற.
Arrestment
n. தடுத்தல், நிறுத்தல், நிறுத்திவைத்தல்,(சட்.) தடுப்புக்காவல், கைதுசெய்யப்பட்டவர் பிணையத்தின் பேரிலோ ஈடுகாட்டுவதன்பேரிலோ விடுவிக்கப்டும் வரையில் அவரை மறியல் செய்துவைத்தல்.
Arret
n. நீதிமன்றத்தீர்ப்பு, தீர்ப்பு, முடிவு.
Arriere-ban
n. முற்கால பிரான்சு நாட்டு அரசர் போருக்குப் படைத்துறைக் கடடைமயாற்றும்படி உயர்குடியாளருக்குப் பிறப்பிக்கும் அழைப்பாணை, பெரங்குடி மக்கள் கடமைப் போர்ப்படை, மேற்குடிமக்கள்.
Arriere-pensee
n. உள்நோக்கம், மறைவான எண்ணம்.
Arris
n. இணைவிளிம்பு வரை.