English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Arrival
n. பயண முடிவு, வந்துசேர்கை, வந்து தோன்றுதல், வருகையர், வந்துசேர்ந்தவர், வருபொருள், வரவினம், புதுக்குழந்தை, கப்பல் வந்ததும் ஒப்புவிக்கப்பட வேண்டிய சரக்கு.
Arrive
v. சென்றுசேர், வந்தமை, முடிவிடம் சேர், முன்தோன்று, முடிவுறு, புகழ் இலக்கு அடை, கொணரப்பெறு, வந்துபொருந்து, நிகழ், நேர் அமைவுறு.
Arriviste
n. தன்னலவேட்டையர், திடுமெனமுன்னுக்குவரமுயல்பவர்.
Arrogance
n. இறுமாப்பு, அகந்தை, திமிர்.
Arrogancy
n. தான் தோன்றித்தனம், தன்முனைப்பு.
Arrogant
a. தருக்கு நிறைந்த, வீம்புமிக்க தன்முனைப்பான.
Arrogate
v. பொருந்தாத உரிமை பேசு, உரிமை கற்பி.
Arrogation
n. தகாத உரிமை, தருக்குதல், உரிமைகற்பித்தல்.
Arrondissement
n. பிரெஞ்சு ஆட்சித்துறையின் உட்பிரிவு.
Arrow
n. அம்பு, கணை, வாளி, அம்பு வடிவமுடைய பொருள், சுட்டிக்காட்டும் முள், அம்புக்குறி, செடியின் நடுக்குருத்து, கரும்பின் பூத்தண்டு.
Arrow-grass
n. பொதியுறை வெடித்தபின் அம்புத்தலை போன்றிருக்கும் சதுப்புநிலச் செடியினம்.
Arrow-head
n. அம்புத்தலை, பகழிமுனை, அம்பு போன்ற இலைகளையுடைய நீர்ச்செடிவகை.
Arrow-headed
a. அம்புத்தலை வடிவுடைய.
Arrow-root
n. கூவைக்கிழங்கு, சத்துள்ள மாப்பண்டம் செய்வதற்கு ஏதுவாயுள்ள கிழங்குவகை.
Arrow-shot
n. அம்பு பாயும் தூரம்.
Arrowy
a. அம்புகளுக்கு உரிய, அம்புகள் போன்ற.
Arsenal
n. படைக்கலச்சாலை, படைக்கொட்டில்.
Arsenic
n. உள்ளியம், அரிதார நஞ்சு, (பெ.) அரிதார நஞ்சு சார்ந்த, அரிதார நஞ்சு கலந்த.
Arsenical
a. உள்ளியம் சார்ந்த, உள்ளியம் அடங்கிய, ஐமடி இணைதிறத்துடன் உள்ளியம் கலந்துள்ள.
Arsenious
a. உள்ளியம் சார்ந்த, அவாதார நஞ்சு அடங்கிய, மும்மடி இணைதிறத்துடன் உள்ளியங்கலந்துள்ள.