English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Athnasian
a. பண்டை அலெக்சாண்டிரியாவின் தலைமைக்குரு அதனேசியஸ் என்பாரைச் சார்ந்த.
At-home
n. விருந்தினர்க்கு வீட்டில் வரவேற்பு.
Athrill
adv. விதிர்விதிர்த்து, நடுநடுங்கி.
Athrob
adv. துடித்துக்கொண்டு.
Athwart
adv. பக்கம் நோக்கி, குழம்பி, ஒருசாய்வாய், ஏறமாறாக, தவறி.
A-tilt
adv. ஒருக்கணித்து.
Atimy
n. மானக்கேடு, அவமதிப்பு, குடியுரிமை இழப்பு.
Atingle
adv. உடல்சிலிர்த்து.
Atlantean
a. லிபியாவிலுள்ள அட்லாஸ்மலையைச் சார்ந்த, மிகப்பெரிய, கடல்கொண்ட பண்டைஅட்லாண்டிஸ் மாநிலத்திற்குரிய.
Atlantes
n.pl. (க.க.) ஆண் உருவச்சிலை வடிவான தூண்கள்.
Atlantic
n. அட்லாண்டிக் மாகடல், (பெ.) அட்லாண்டிக் மாகடற்பகுதியைச் சார்ந்த, லிபியாவிலுள்ள அட்லாஸ் மலையைச் சார்ந்த.
Atlantosaurus
n. தொல்பழங்காலப் பெரும் பல்லி உருவான விலங்குவகை.
Atlas
n. லிபியாவின் மலை, மேல் உலகங்களைத்தாங்குவதாகக் கருதப்பட்ட கிரேக்கப் புராணப் பழந்தெய்வம்.
Atlas,n.(1),.
நிலப்பட ஏடு, வரைதாள் அளவு வகை, (உட்.) மண்டை ஓட்டைத் தாங்கும் கழுத்தெலும்புப் பூட்டு.
Atman
n. ஆன்மா, உயிரின் உள்ளொளி.
Atmology
n. வளிமண்டல நீராவி நிலைநுல்.
Atmolysis
n. புகைகளைப் பிரிக்கும் முறை.
Atmosphere
n. வளிமண்டலம், பவனம், வளிச்சூழல், ஆவியமுக்கம், படத்தின் பின்னணித் தொலை உணர்வு, சூழ்நிலை.
Atmospheric, atmospherical
a. வளிமண்டலம் சார்ந்த, சூழ்நிலைக்குரிய.