English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Affidavit
n. உறுதிமொழித்தாள், ஆணைப்பத்திரம்.
Affiliate
v. புதல்வனாக ஏற்றுக்கொள், உறுப்பினராக ஏற்றுக்கொள், உறுப்பாக இணை, பெற்றோர் இன்னாரென்ற காட்டு, (சட்.) வளர்ப்புப் பொறுப்பை முன்னிட்டுத் தந்தை இன்னாரென்று குறிப்பிடு, ஆக்கியோன் யாரென்று முடிவு செய், மூலம் காண்.
Affiliation
n. சேர்த்தல், இணைப்பு, மூலம் காண்டல், (சட்.) முறையற்ற வகையிற் பிறந்த குழந்தையைத் தந்தையிடம் சேர்த்தல்.
Affine, affined
தொடர்புள்ள, உறவுடைய, பினைப்புடைய.
Affinitive
a. உறவுடைய, இனவொற்றுமையுள்ள.
Affinity
n. இன உறவு, உறவு, சுற்றம், திருமண மூலமான உறவு, இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை, பண்பின் ஒருமைப்பாடு, குடும்பப் பொதுச்சாயல், விருப்பம், கவர்ச்சி, (வேதி.) நாட்டம், இணைப்பீர்ப்பு, தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Affirm
v. ஒட்டவை, எழுதிச்சேர், பொருத்து, பின்சேர், இறுக்கு., அழுத்து, பதியவை.
Affirm
v. வலியுறுத்திக்கூறு, உறுதிசெய், முறைப்படி அறிவி, பிடிவாதமாகச் சொல், (அள.,இலக்,)உடன்பாட்டு வகையால் கூறு, (சட்,) நெடுமொழியின்றி உறுதி கூறி, உறுதிப்படுத்து, முறைப்படி இசைவு அளி.
Affirmant
n. உறுதிகூறுபஹ்ர், (பெ.) வலியுறுத்திச் சொல்லுகிற.
Affirmation
n. வலியுறுத்திக் கூறுதல், வலியுறுத்தப்பட்டட செய்தி, வாய்மையுரை, சபதமின்றி உறுதிகூறுதல்.
Affirmative
n. ஆம் என்பது, அழுத்தமாகச் சொல்லுதல், (அள., இலக்,) உடன்பாடு, (பெ.) உடன்பாடான, ஒப்புதஷ்ன, தன்கோள் நிறுவுகிற.
Affirmatory
a. உறுதிப்படுத்துகிற.
Affix
-1 n. ஒட்டு இணைப்பு, சாரியை, ஒட்டிடைச் சொல்.
Affixture
n. ஒட்டவைத்தல்.
Afflated
a. அக எழுச்சி உடைய, உள்ளிருந்து ஊக்குவிக்கப்பெற்ற.
Afflatus
n. அக எழுச்சி, ஆவேசம். அருளுக்கம்.
Afflict
v. அல்லற்படுத்து, துயருறுத்து, இடுக்கண்படுத்து, தொல்லைபடுத்து, நச்சரி, எரிச்சலுட்டு, (விவி.) தாழ்த்து.
Affluence
n. செழுமை, பெருஞ்செல்வம்.
Affluent
n. வரவுகால், துணையாறு, (பெ.) வளமான, ஏராளமான, செல்வமிக்க, உள்நிறைகிற.
Afflux, affluxion
உள்நிறைதல், மீவரவு.