English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Afford
v. விளைவி, வளம் அளி, வாய்ப்பளி, உதவு, வாய்ப்பமைவோடிரு, விற்க அல்லது செலவுசெய்ய அல்லது செலவைத் தாங்கிக்கொள்ளத் தகுதியோடிரு.
Afforest
v. காடுவளர், வேட்டைக்காடாக மாற்று.
Afforestation
n. காடுவளர்ப்பு, காடாக மாற்றுதல்.
Affranchise
v. அடிமைத்தளை நீக்கு, கட்டறு, கடமையிலிருந்து விடுவி.
Affray
n. தெருச் சண்டை, கலவரம், அமளி, அமைதிக்குலைவு, (வினை) அச்சுறுத்து, அமைதிகுலை.
Affreightment
n. கப்பலை வாடகைக்கு எடுத்தல்.
Affricate
n. தடையுறழ்வொலி, தடையாகத் தொடங்கி உறழ்வாக முடிவுறும் மெய்யொலி.
Affright
-1 n. கிலி, திகில்.
Affright(2),affrighten
v. அச்சுறுத்து
Affront
n. நேர்முக அவமதிப்பு, இகழ்ச்சி, மரியாதைக்குறைவாக நடத்துதல், (வினை) எதர்ப்படு, முகத்தெதிரே அவமதி, நாணவை, பெண்மைக்கு ஊறுசெய், தன்மதிப்புக்குக் கேடு விளைவி.
Affusion
n. நீர் சொரிதல், ஞானத் திருமுழுக்கின்போது உடலின் மேல் நீர் ஊற்றுதல், (மரு.) காய்ச்சல் உடையவன் மீது நீர்வார்த்தல்.
Afghan
n. ஆப்கனிஸ்தான் நாட்டவர், ஆப்கனிஸ்தான் நாட்டுமொழி, (பெ.) ஆப்கனிஸ்தான் நாட்டுக்குரிய.
Afghan
-2 n. பின்னப்பட்ட கம்பிள மெத்தை உறை.
Afield
adv. கழனியில். களரியில், களத்தில், களத்தை நோக்கி, தொலைவில்.
Afire
adv. எரிந்துகொண்டு, கனலெழ, வீக்கம் கண்டு.
Aflame
adv. கொழுந்துவிட்டு எரிகிற நிலையில், அழன்று, சுல்ர்விட்டு, ஔதப்பிழம்பு வீசி.
Afloat
adv. மிதக்கும் நிலையில், கடலில், கப்பலில், கடற்படைப் பணியில், நீர்நிரம்பி, காற்றில் மிதந்துகொண்டு, நிலையற்று, செலாவணியில், நடப்பில், கடனில் மூழ்காமல், தன்னைக் கட்டிக்கொண்டு போகிறநிலையில், தன் செலவுக்கு வேண்டிய அளவு வரவுடன், முழுவேகத்தில் இயக்கப்பெற்று.
Afoot
adv. தொடங்கி, ஆயத்தமாகி, விழிப்புற்று, எழுந்து, நடந்துகொண்டு, நடப்பில், நடைமுறையில், பணியில் இயங்கிக்கொண்டு.
Afore
adv. ஏற்கனவே, முன்னதாக, முன்பாக, முன்னால்.
Aforecited
a. முன்குறித்த.