English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Airgraph
n. விமான வழி அனுப்புவதற்காகச் சிற்றுருவில் நிழற்படமாக்கப்பட்ட கடிதம்.
Air-grating
n. காற்றோட்டக்கிராதி.
Air-gun
n. அழுத்தம் பெற்ற காற்றின் உந்து விசையால் இயக்கப்படும் துப்பாக்கி.
Airhole
n. காலதர், காற்றுப்புகும் புழைவாய், பனிக்கட்டியின் பரப்பில் உயிர்க்ள வந்து மூச்சுவிடுவதற்கு உதவும் புழைவாய், வான் இடையிறக்க மண்டலம், இடையே காற்றின் அழுத்தக் குறைவாலோ கீழோட்டத்தாலோ விமானம் இறங்கிச் செல்லவேண்டி வருகிற காற்று மண்டலம்.
Air-hostess
n. விமானத்தாங்கி.
Airily
adv. காற்றுப்போல, நுண்ணிதாக, ஊக்கமாக, திட்பமின்றி, விரைவூக்கமாக, கவலையின்றி, தொட்டுந்தொடாமல்.
Airiness
n. காற்றோட்டம், காற்றுப்போன்ற தன்மை, நுண்மை, மென்மை, பளுவின்மை, ஆவிநிலை, விரைவியக்கம், கவலையற்ற தன்மை, தொட்டுந்தொடாத நிலை.
Airing
n. காற்றாடவிடல், காயவைத்தல், பொதுப்பார்வையில் வைத்தல், உலாப்போதல்.
Air-jacket
n. வெப்பம் குறைவதை அல்லது கூடுவதைத்தடுக்கவோ நீரில் மிதக்கும்படி பளுக்குறைக்கவோ அணியப்படும் காற்றுறைச் சட்டை.
Airless
a. காற்றில்லாத, காற்றோட்டமில்லாத, காற்றுஅகற்றப்பட்ட, காற்று வௌதத்தொடர்பற்ற, காற்று இறுக்கமான.
Air-lift
n. காற்றியக்க மூலம் தடையைக் கடக்கச் செய்யும் அமைப்பு, விமானத்தாக்குதல், நிலவழி அடைபட்ட நிலையில்பிரயாணிகளையும்,பொருள்களையும் விமானமூலம் எடுத்துச்செல்லும் முறை.
Airline
n. வானெறி, விமானப்பாதை.
Airliner
n. பெரிய பயணவிமானம், வானெறிப்போக்குவரத்துவிமானம்.
Air-lock
n. காற்றழுத்தத்தைக் கூட்டவும் குறைக்கவும் வாய்ப்புடைய காற்றுப்பேழை, குழாயில் நீர்ம ஓட்டத்தைத் தடுக்கும் குமிழி.
Airman
n. விமானி, பறந்து செல்லும் மனிதர்.
Airmanship
n. விமானம் செலுத்தும் கலை.
Air-marshal
n. விமானப் படைத் தளவாய்.
Air-mechanic
n. விமானம் பழுதுபார்ப்பவர், விமானப்பொறி அலுவலர்.
Air-minded
a. வான்செலவு விருப்பமுடைய, விண்ணிவர் ஆர்வமுடைய.