English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Alcohol
n. வெறியம், சாராயச்சத்து, சர்க்கரைக் சலவைகளிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட வெறியச்சத்து, சாராயவகை, நீர்க்கரிமக் கலவைவகை.
Alcoholic
n. மட்டுமிஞ்சிய குடிக்கு அட்பட்டவர் (பெ.) வெறியம் சார்ந்த, வெறியம் கலந்த, வெறிக்குடிவகை சார்ந்த, வெறிக்குடிவகை காரணமாக, மட்டுமிஞ்சிய குடிக்கு ஆட்பட்ட.
Alcoholisation
n. வெறிமயமாக மாற்றுதல், வெறியம் செறிவித்தல், வடித்துத் தூய்மையாக்கல்.
Alcoholise
v. வெறியமாக மாற்று, வெறியம் தோய், வடித்துத் தூய்மைப்படுத்து.
Alcoholisem
n. வெறிய விளைவு, வெறிய நச்சுத்தன்மை.
Alcoholist
n. வெறிக்குடி ஆதரவாளர், வெறிக்குடியர்.
Alcoholometer
n. வெறியமானி, வெறியக்கலவையில் வெறியவிகிதம் அளக்கும் கருவி, மதுவகைகளில் வெறியச் செறிவை மதிப்பிடுவதற்கான கருவி.
Alcoholometry
n. வெறியச் செறிவின் அளவு.
Alcove
n. அறையின் ஒதுப்புறம், கவிகைமாடம், மாடக்குழி, பள்ளியறை, வேணிலகம்.
Aldehyde
n. உயிரகம் ஊட்டப்படுவதால் இருநீரக அக்க்ள குறைவுபட்ட வெறியம், எளிதில் ஆவியாய்ப்போகிற நெடிவீசும் நீர்மம்.
Alder
n. பூர்ச்சமரம் போன்ற மரவகை.
Alderman
n. நகரத்தந்தை, மூப்பர், நகராட்சிக்குழு உறுப்பினர், சாத்து முதல்வர், வணிகக்குழு தலைவர்.
Aldermanic
a. நகரத்தந்தைக்குரிய.
Aldermanlike, aldermanly
a. ஆரவாரமான, பீடுடைய.
Aldermanry
n. நகரத்தந்தை ஆட்சிவட்டாரம், நகரத்தந்தையின் படிநிலை.
Aldine
a. 16ஆம் நுற்றாண்டில் ஆல்டஸ் என்ற வெனிஸ் நகரத்தவர் பெயரால் வக்ஷ்ங்கிய அச்சுருப் படிவம் சார்ந்த.
Ale
n. மாவடி, கோதுமை வாற்கோதுமை முதலியவற்றின் மா ஊறலிலிருந்து வடித்ததெடுக்கப்படும் மதுவகை.
Aleatory
a. குருட்டாம்போக்கான, சூதாட்டப்பாங்கான, வருநிலைப்போக்கினைச் சார்ந்த.
Alebench
n. மதுக்கடையிலுள்ள அமர்பலகை.
Ale-berry
n. அப்பத்துண்டுகளிட்டுச் சுவையூட்டப்பட்ட மாவடித்தேறல்.