English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Alexin
n. குருதியில் நோயணுக்களை அழிக்கும் திறனுடைய புரதவகை,
Alexipharmic
n. நஞ்சுக்கு மாற்றுமருந்து, (பெ.) நஞ்சுக்கு மாற்று மருந்தான,
Alfresco
a. திறந்தவௌதயிலுள்ள, (வினையடை) ஈரச்சாந்தில், திறந்த குளிர்காற்று வௌதயில்.
Alga
n. கடற்பாசி வகை, பாசிவகை.
Algal
a. கடற்பாசிக்குரிய.
Algebra
n. குறிக்கணக்கியல், இயற்கணிதம், எண்களுக்குப்பதிலாக்க குறியீடுகளை வழங்கும் கணக்கியல்துறை.
Algebraic
a. குறிக்கணக்கியல் சார்ந்த.
Algebraist
n. குறிக்கணக்கியலாளர், இயற்கணிதர்.
Algid
a. குளிருற்ற, சன்னியுற்ற.
Algidity
n. குளிர், சன்னி.
Algolagnia
n. துன்புறுத்தி அல்லது துன்பமேற்றுப்பெறப்படும் சிற்றின்ப நுகர்ச்சி, பெருந்திணை மகிழ்ச்சி.
Algology
n. கடற்பாசி ஆய்வுத்துறை.
Algorism,algorithm
அராபிய பதின்முறை இலக்கமானம், கணக்கு.
Alhambra
n. ஸ்பெயினைச் சார்ந்த கிரானடா நாட்டு இஸ்லாமிய மன்னர் அரண்மனை.
Alhambraic, Alhambresque
a. சித்திர வேலைப்பாடமைந்த, அல்ஹம்பிராவின் சிறிய மரபுக்குரிய.
Alias
n. புனைபெயர், மறுபெயர், (வினையடை) மாற்றாக, மறுபெயராக.
Aliases
n.pl. மறுபெயர்கள்.
Alibi
n. (சட்.) பிறிதிடமிருப்புவாதம், வேற்றிடவாதம், குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றம் நிகழந்த இடத்திற்குத் தொலைவிலுள்ள பிறிதோரிடத்தில் இருந்தார் என்று காட்டப்படும்வாதம், பிறிதோரிடம், (வினையடை) பிறிதோரிடத்தில்.