English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ale-conner
n. மதுவின் தர ஆய்வாளர்.
Alecost
n. மாவடித் தேறலைச் சுவையூட்ட வழங்க்பபடும் மணப்பூண்டு வகை.
Alee
adv. (கப்.) காற்றுக்கொதுங்கிய பக்கத்தில், காற்றின் திசையில், காற்றுச் செல்கிற திசையில்.
Aleft
adv. இடதுபுறத்தில், இடதுபுறம்நோக்கி.
Alegar
n. புளிப்பு மாவடிக்காடி.
Alehoof
n. நிலம்படர்க்கொடி வகை.
Alemannic
n. தென் செர்மனி நாட்டுமொழி வகை, (பெ.) தென்மேற்கு செர்மனியிலுள்ள பண்டைமொழக் குழுவினரைச் சார்ந்த.
Alembic
n. பழங்கால வடிகலம்.
Alenate
a. மனமுறிவுகொண்ட, (வினை) உடைமை மாற்று, உறவு தொலைவாக்கு, மனமுறிவுகொள்.
Alenator
n. உடைமை மாற்றுபவர், வேறுபாடு செய்பவர், பஸ்ன் திருப்பிவிடுபவர்,
Alerce
n. சாந்தரக்கு மரக்கட்டை.
Alerion,allerion
(கட்.) காலும் அலகும் இன்றிக்காட்டப்படும் பருந்து வடிவம்.
Alert
n. இடையறா விழிப்பு, எச்சரிக்கை ஒலி, எச்சரிக்கை அறிவிப்பு, திடீர்த்தாக்கு, அதிர்ச்சி, விமானத் தாக்குதல் எச்சரிக்கை, விமானத்தாக்கு எச்சரிப்புக்குரிய இடர்நேரம்,(பெ.) விழிப்பான, உன்னிப்பான, சுறுசுறுப்பான, (வினை) எச்சரிப்பூட்டு, விழிப்புடன் இருக்கச்செய்.
Aleuron,aleruone
சிலவகை விதைகளில் காணப்படும் புரதவகை.
Ale-wife
n. மதுவிற்பனை செய்யும்ரரர பெண், வடட அமெரிக்கமீன்வகை.
Alexandrian
a. எகிப்து தேசத்து அலெக்ஸாண்டிரிய நகரத்திற்குரிய, கி,பி,தொடக்க நுற்றாண்டுகளுக்குரிய எகிப்திய நாகரிகம் சார்ந்த, அலெக்ஸாண்டிரியா நகரத்திற்குரிய பிற்கால கிரேக்க நாகரிகம் சார்ந்த.
Alexandrine,alexandrine
n. அடிக்குப் பன்னிரண்டு அசைகொண்டு பாவகை, (பெ.) அடிக்குப் பன்னிரண்டு அசை கொண்ட பாவகையைச் சார்ந்த.
Alexandrite
n. பச்சைக்கால்வகை.
Alexia
n. வாசிக்க இயலாமை, சொற்குருடு, பார்க்கும் சொற்களை உணர்ந்து வாசிக்க முடியாத மூளைநோய் நிலை.