English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Allopathy
n. 'எதிர்முறை' மருத்துவம், நோய்க்கூறுகளுக்கு எதிர்க்கூறுகளை ஊட்டுவதன் மூலம் நோய் தீர்க்க நாடும் மருத்துவமுறை.
Allophylian
n. ஆரிய செமித்திய இனங்கள் சாராமொழிக்குரியவர், (பெ.) ஆரிய செமித்திய இனங்கள் சாராத.
Allot
v. பங்கிட்டளி, கூறுகளாக்பபிரி, ஒதுக்கிக்கொடு திருவுளச்சீட்டையொட்டிப்பிரித்துக்கொடு.
Allotheism
n. விசித்திரன்ன தெய்வங்களின் வழிபாட்டுமுறை, அயல்வழிபாட்டுமுறை.
Allotment
n. பங்கிடுதல், பிரித்துக்கொடுத்தல், பங்கீடு, பங்கு, பிரித்துக்கொடுக்கப்பட்ட கூறு.
Allotriomorphic
a. 'அகமணியுருவமான', புற அமைப்பில் மணியுருப்பெறாமல் அக அமைப்பில்மட்டும் பெறுகிற.
Allotrope
n. பொருண்மை மாறாமல் அணுஅமைப்பு மட்டும் மாறும் மறுவடிவம்.
Allotropic
a. அணுத்திரிபுள்ள.
Allotropous
a. (தாவ.) எல்லாவகைப்பூச்சி இனங்களும் எளிதில் வந்தணுகி அடைவதற்குரிய தேனையுடைய தேனுக்காகச் சில மலர்களை மட்டும் அணுகத்தக்க குட்டையான நாவுடைய.
Allotropy
n. தனிப்பொருள்க்ள ஒன்றுக்கு மேறபட்டட வடிவங்களில் அணுக்களையுடையவனாய் இருக்கும் தன்மை.
Allotted
a. குறிக்கப்பட்ட, வரையறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்டட, விதிக்கப்பட்ட.
Allottee
n. பங்கினர், வகுக்கப்பட்ட பங்கீடு பெறுபஹ்ர்.
Allow
v. ஒத்துக்கொள், இசைவுகொடு, தடுக்காமல் விடு, இடமளி, கொஞ்சம் கொஞ்சமாக வழங்கு, கொடுத்துதவு, சலுகையளி, ஈடுசெய், சரிக்கட்டு, சேர்த்துக்கொள்ளஇணங்கு, புகவிடு.
Allowable
a. ஒத்துக்கொள்ளத்தக்க, பெருங்கேடற்ற, மோசமல்லாத, பொறுத்தமையக்கூடிய, மன்னிக்கக்கூடிய.
Allowance
n. இசைவு, இணக்கம், உதவித்தொகை, படி, செலவுரததொகை, சலுகை, கழிவுரிமை, பொறுப்பமைதி, சரியீடு, (வினை) உதவித்தொகையளி, குறிப்பிட்ட அளவில் கொடுத்துதவு.
Alloy
n. உலோகக்கலப்பு, மட்ட உலோகக்கலவை, மட்ட உலோகம், பொன் வௌளி மாற்று, (வினை) உலோகம் கல, மட்ட உலோகத்துடன் கல, தரங்குறை, கலந்து மதிப்புக்குறை, மட்டாக்கு, மிதப்படுத்து, பண்பு சிறிதுமாற்று, மட்டக்கலவையாகு.
Allseed
n. விதைப்பெருக்கமுள்ள செடியினப்பெயர்.
Allspice
n. வால்மிளகு, பண்மணப் பொருள் த செடியினம்.
Allude
v. மறைமுகமாகக் குறிப்பிடு, குறிப்பாகத் தெரிவி, இயல்பான இணைக்கருத்துக்கள் தோன்றவை, குறிப்பிடு.
Allumni
n.pl. பழைய மாணவர், கல்லுரியில் முன் படித்துப்பட்டம்பெற்ற மாணவர்.