English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Amber
n. ஓர்க்கோலை, அம்பர், நிமிளை.
Ambergris
n. மீனம்பர், வெப்பமண்டலக்கடல்களில் மிதப்பதும் ஒருவகைத் திமிங்கிலத்தின் குடலில் காண்பபடுவதுமானமெழுகுப்பொருள்.
Ambery
a. அம்பரின் இயல்புடைய.
Ambiance
n. கலைத்துறையில் துணைப்பொருட்பின்னணி, துணைப்பொருள் அமைவு.
Ambidexter
n. இருகைகளையும் ஒரேவகையாக ஆளக்கூடியஹ்ர், இருவேறு செயலடையவர், பித்தலாட்டஞ்செய்பவர், (வினையடை) இருகைகளையும் ஒரேவிதமாகப் பயன்படுத்தக்கூடிய, இரண்டகமான.
Ambidexterity
n. இருகைகளையும் ஒப்பப் பயன்படுத்தும் ஆற்றல்.
Ambidexterous, ambidextra, ambidextrous
a. இருகைகளையும் ஒரே வகையாக்ப பயன்படுத்தக்கூடிய.
Ambience
n. சூழல், சூழ்விளைவு, சுற்றுப்புறத்தோற்றம்.
Ambient
n. சுற்றியிருப்பது, காற்று, வானம், (பெ.) சுற்றிச்செல்லுகிற, சூழ்ந்துள்ள, எம்மருங்கும் வளைந்துள்ள.
Ambiguity
n. இருபொருள், பலபொருள்களுக்கிடந்தரும் சொல், பொருள் தௌதவின்மை.
Ambiguous
a. ஐயப்பாடான, தௌதவற்ற, உறுதியற்ற, இரட்டுற மொழிதலான
Ambit
n. வளைவு, சுற்று, சுற்றெல்லை, புறவெல்லை, சுற்றுப்பரப்பு எல்லை.
Ambition
n. உயரவா, பேராவல், புகழார்வம், சிறப்படையவிருப்பம், அடைய விரும்பும் குறிக்கோள்.
Ambitious
a. பேராவலுடைய, ஆர்வம் நிரம்பிய, பெருவிருப்பத்ததைக் காட்டுகிற, ஒன்றைப்பெரும் அவாவுடைய, பகட்டான.
Ambivalence, ambivalency
n. இருமுக உணர்ச்சிப்போக்கு, இருமனப்போக்கு.
Ambivalent
a. இருமுக உணர்ச்சிப்போக்குடைய, இருமுகப்போக்கில் ஒன்றுடைய.
Ambivert
n. உள்முக உணர்ச்சிக்கும் புறமுக உணர்ச்சிக்கும் இடைநிலைப்பட்டவர்,
Amble
n. ஒருசிறை இருகால் தூக்கி ஆடி வருகிற குதிரையின் நடை, கவலையற்ற நடை, (வினை) கெச்சை மிதிமிதித்து நட, கெச்சைக் குதிரையிவர்ந்துசெல், குதிரையைத் தன் போக்கில் போகவிட்டு அதன்மேல் ஏறிச்செல், கெச்சை மிதிமிதித்துப்போகும் குதிரையைப்போல்நட.
Amblonia
n. பார்வை மந்தம்.
Amblyopic
a. பார்வை மந்தமுடைய.