English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Boy
n. பையன், சிறுவன், இளைஞன், மைந்தன், சிறுவர் தன்மையும் இயல்புகளுமுள்ளவர், பணியாள், பணிப்பையன்.
Boyau
n. கோட்டையில் நீண்டு நெருங்கிய போக்குவரத்துக்குரிய அகழிச் சந்து.
Boycott
n. ஊர்க்கட்டு, சமுதாய வணிக வாழ்வினின்று வழக்கீடு செய்தல் (வினை) சமுதாய-வாணிகத் தொடர்பிலிருந்து விலக்குச் செய்.
Boyhood
n. சிறுமைப் பருவம், சிறு வயது, சிறுவர்கள்.
Boyish
a. சிறுபிள்ளைத்தனமான.
Bra, n. brassiere
என்பதன் சுருக்கக் குறிப்பு.
Brabble
n. சிறுபூசல், சச்சரவு, இரைச்சல், ஆரவாரம், வீண்பேச்சு, (வினை) சச்சரவிடு, பிதற்று, கூக்குரலிடு.
Braccate
a. சிறகார்ந்த காலடிகளையுடைய.
Brace
n. நாய்கள்-சீட்டுக்கள் ஆகியவற்றின் இணை, சோடி கட்டிட உறுப்புக்கள் தளைக்கட்டு, பற்றிறுக்கி, இடுக்கி திருப்புளி, துளைக்கருவிகளைத் திருப்பும் சட்டம், உட்பிணைப்புக் குறிவளைகோடு, இணைக்கவிகை, (வினை) இணை, பிணை, இழுத்துக் கட்டு, இறுக்கு, உரங்கொடு, வலிமையூட்டு, தாங்கு, ஆதாரம் கொடு, சோடியாக இணை, (கப்.) பாய் மரக்குறுக்குக் கட்டைகளை இழுத்துப்பாயைச் சீர்செய்.
Bracelet
n. கைவளை, கடகம், காப்பு.
Bracer
n. விற்பயிற்சியிலும் சிலம்பத்திலும் மணிக்கட்டுக்குரிய வலுக்காப்பு.
Braces
n. pl. இடுப்பு காலுறை தளைப்பட்டைகள், இசைக்கம்பியின்வார், வில்வண்டியின் இணைப்பு வார், (கப்.) பாய்மரக் குறுக்கைகளை இழுத்துப் பாயைச் சீர்செய்ய உதவும் வார்.
Brach
n. பெண் வேட்டைநாய்.
Brachet
n. பெண் வேட்டைநாய், குட்டி நாய், குருளை,
Brachial
a. மேற்கையைச் சார்ந்த.
Brachiopod
n. வாயின் இருபுறங்களிலும் நீண்ட கைகள் போன்ற அமைப்புடைய சிப்பி இனங்களின் வகை.
Brachy-axis
n. குறுகிய ஊடச்சு, குறுக்கு ஊடச்சு.
Brachyceaphalic, brachycephalous
a. குறுகிய தலையை உடைய.
Brachycephal
n. குறுந் தலையர்.
Brachycephaly
n. குறுகிய தலையிடைமை, நீளத்தில் ஐந்தில் நான்கு பங்கு அகலமுடைமை.