English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Brief
n. வழக்குரைஞரிடமுள்ள வழக்காடிகளின் வழக்குக்குறிப்பு. சுருக்க அறிவிப்பு, வழக்குரைஞரின் பணி, சிறுபணி, போப்பாண்டவரின் ஒழுங்குமுறையாணை, தாள் வடிவளவு, கையச்சுப்பொறி வீச்சளவு, வான்படைத்துறையில் வானோடிகட்கு அறிவிக்கப்படும் கட்டளை, (பெ.) சுருக்கமான, சுருங்கிய காலக்கூறுடைய, செறிவான, (வினை)சுருங்கிக் குறிப்பிடு, சுருக்கிக் குறிப்பெடு, சுருக்க விவரத்தின் மூலம் அறிவி, வழக்காட அமர்த்திக்கொள், வானுர்திப் பணியாளருக்கு விமானத்தாக்குப் பற்றிக்கட்டளை இடு.
Brief-bag
n. சிறு தோற்பை.
Briefless
a. கட்சிக்காரர் இல்லாத, வேலையற்ற.
Briefly
adv. சுருக்கமாக, குறிப்பாக.
Briefs
n. pl. (பே.வ.) பெண்டிர் குறுங்காற்சட்டை.
Brier
n. காட்டுரோசா உட்பட்ட முட்செடிவகை, புகைக் குழாய் செய்யப்பயன்படும் வேரையுடைய வெண்புதர்ச்செடி, இவ்வேரால்செய்யப்பட்ட புகைக்குழாய்.
Briered
a. முட்செறிந்த, முள் நிறைந்த.
Brier-root, brier-wood
n. புகைக்குழாய் செய்ய உதவும் வேர்கை.
Briery
a. முள்ளார்ந்த, முள்ளடர்ந்த.
Brig
n. இருபாய்மரக்கப்பல்.
Brigade
n. படை அணிப்பகுதி, களப்பீரங்கிப் பிரிவுல்ன் மூன்று காலாட்பிரிவுகளடங்கிய படைவகுப்பு, கவசப்படைப்பகுதி, ஒழுங்கும் கட்டுப்பாடுமுள்ள தொண்டர்குழு, (வினை) படைப்பகுதியாக அமை, படைப்பிரிவுகல் இணை, படை வகுப்புக்களாக அமை, படைப்பிரிவுடன் இணை, படை வகுப்புக்களாக உருவாகு, ஒழுங்காக அமை.
Brigademajor
n. படைப்பகுதித் துணைப்பணியாளர்.
Brigadier
n. படைப்பகுதித் தலைவர், படைப்பணியாளர்.
Brigadier-General
n. படைப்பகுதித் தளபதி.
Brigandish
a. கொள்ளைக்காரனுக்குரிய, கொள்ளையடிக்கும் இயல்புடைய, கொள்ளைக்காரன் போன்ற.
Brigantine
-1 n. உடலின் மேற்பகுதியைக் காக்கும் இருப்புக் கவசம்.
Brigantine
-2 n. இருபாய்மரக்கப்பல் வகை.
Bright
a. ஔதர்கிற, ஔதமிக்க, பளபளப்பான, விளக்கமான, முனைப்பான, தௌதந்த, மகிழ்ச்சிமிக்க, அறிவுக் கூர்மையான, முன்னறிவுடைய, புகழ்சான்ற, சிறப்புவாய்ந்த.
Brighten
v. ஔதமிகச் செய், பொலிவுறச்செய், பளபளப்பாக்கு, ஔதபெறு, பொலிவு பெறு, தௌதவடை.