English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Brow-antler
n. மான்கொம்பின் முதற்கிளை.
Browbeat
v. கொடுஞ்சொற்களாலும் கொடுநோக்காலும் அதட்டு, கொடுமைப் பரத்திக் கீழடக்கு.
Brow-bound
a. முடிசூடிய, தலையில் சூட்டிய.
Browed
a. ஓரங்களில் கொண்ட, சூழப்பட்ட, புருவமுடைய, தோற்றமுடைய.
Browless
a. புருவமற்ற, தோற்றமில்லாத, வெட்கங்கெட்ட நாணமற்ற.
Brown
n. காவி நிறம், பழுப்புவண்ணம், கறுத்த ஆரஞ்சு வண்ணம், (பெ.) காவி நிறமான, தவிட்டு நிறமான, வெயிலிற் பழுப்பேறிய, (வினை) காவி நிறமாக்கு.
Brownian
a. இயல் நுலறிஞர் ராபர்ட்பிரௌன் என்பவரைச் சார்ந்த.
Brownie
n. நன்மை செய்யும் கூளிவகை, பெண் சிறு சாரணர் படையைச் சேர்ந்தவர்.
Browning
n. பழுப்பு நிறமாக்கல், மங்குதல், மாநிறமாகுதல், பழுப்பு நிறமாக்குவதற்குரிய செய்முறை.
Brownish
a. சற்றே பழுப்பு நிறமான.
Brownstone
n. பழுப்புநிற மணற்கல், மாநிற மணற்கல்.
Browse
n. இளந்தளிர் உணவு, கிளை தழை, பசுந்தீவனம், தழை மேய்தல், கறித்தல், கொய்தல், பறித்தல், விட்டுவிட்டு வாசித்தல்.
Browsing
n. செடியின் முளை-தளிர்-இலை முதலியன, பசுந்தீவனம், கறித்தல், பொய்தல், பறித்தல், விட்டுவிட்டு வாசித்தல்.
Bruin
n. கரடி, பிரஞ்சு காப்பியத்தில் வரும் கரடியின் பெயர்.
Bruise
n. கன்றிப்போன காயம், இரத்தம் கட்டிய நோவிடம், (வினை) அடித்துக்கன்றவை, வடுப்படுத்து, புண்படுத்து, இயலாதாக்கு, குத்து, நொறுக்கு, இடி, சிறுதுகளாக்கு, கண்மூடிக் குதிரையோட்டிச்செல்.
Bruiser
n. கன்றும்படி காயப்படுத்தியவர், பந்தயச் சண்டைபோடுபவர்.
Bruising
n. கன்றிப்போகும்படி அடித்தல், நொறுக்குதல், புண்படுத்துதல், (பெ.) கன்றிப்போக வைக்கிற, நொறுக்குகிற, புண்படுத்துகிற.
Bruit
n. ஆரவாரம், இரைச்சல், கம்பலை, அலர், வதந்தி, (வினை) செய்திப்பரப்பு, அறிவி, புகழ்பரப்பு.
Brumal
a. குளிர்காலத்திற்குரிய.