English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bulkiness
n. புடைப்பு, பருமன, பேரிடமடைக்கும் பண்பு.
Bulky
a. பெருத்த, பருமனான, பாரித்த, இடம் பெரிது அடைக்கிற.
Bull
n. ஆங்கிலேயரைப் பொதுப்படக் குறிக்க அவர்கள் பண்புருவமாக வழங்கப்படும் ஜான் புல் என்ற பெயரின் சுருக்கம், ஆங்கிலேயர்.
Bull
-1 n. ஆனேறு, விடைஎருது, விதையகற்றப்படாத காளை, யானை-திமிங்கலம் முதலியவற்றின் ஆண், இடபஇராசி, எருத்து வான்மனை, பொருள்களின் விலையை ஏற்றுபவர், பங்கு மதிப்பேற்றுபவர், இலக்குக்குறி மையம், இலக்குமைய வேட்டு, (பெ.) ஆண்மையுடைய, பெருத்த, திரண்ட, மதிப்பு உயர்த்துகிற,
Bull
-2 n. போப் பாண்டவரின் கட்டளை.
Bull
-3 n. நகைப்புக்கிடனான முரண்பாடுடைய சொற்றொடர், மிகு சுருக்கத்தானல் முரண்பாடகத் தோன்றும் தொடர்.
Bull
-4 n. சாராயம் இருந்த மிடாவில் ஊற்றி நீர்கலந்து செய்யும் குடிவகை.
Bull
-5 n. சாய் தட்டாட்டம், கப்பலின் மேல்தள விளையாட்டு வகை, எண்கள் பொறித்த சதுரக்கட்டங்களைக் கொண்ட சாய்வுப் பலகையில் சிறுதட்டையான மெத்தென்ற பைக் கட்டுகளை எறிந்து விளையாடும் ஆட்டம்.
Bulla
n. குமிழ்வடிவான கிளிஞ்சல் இனம்.
Bulla
v. பண்டை ரோமநாட்டுக் குழந்தைகளின் பதக்கம் போன்ற அணிவகை, ஆவணத்தின் பொறிப்பு, புண், பொப்புளம், வட்டமாகவும் உருண்டையாகவுமுள்ள பொருட்கள்.
Bullace
n. காட்டுப் பழவரவகை, கனிவகை.
Bullary
n. போப்பாண்டவரின் திரு அறிக்கை திரட்டு.
Bullate
a. கொப்புளம் கொண்ட, சுரிப்புக்கொண்ட, குமிழி போன்ற, குமிழ் வடிவான, உப்பிய.
Bull-baiting
n. எருதுவேட்டை, நாய்களை எருதின்மீது தூண்டிவிட்டுப் போர் செய்யவிடல்.
Bull-beef
n. எருது இறைச்சி, முரட்டுமாட்டு இறைச்சி.
Bull-bitch
n. விடாப்பிடியும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயின் பிணவு.
Bull-board
n. கப்பலில் ஆடப்படும் சாய்தட்டாட்டத்துக்குரிய ஆட்டப்பலகை.
Bull-calf
n. காளைக்கன்று, அறிவிலி, மடையன், பாங்கற்றவன்.
Bull-dance
n. ஆண்கள் மட்டும் ஆடும் ஆட்டம்.