English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bank
-3 n. கைதிக்கப்பலில் தண்டுவலிப்பவரின் இருக்கைப் பலகை, துடுப்பு வரிசை, தண்டுத்தொகுதி, இசைக்கருவி முறுக்கானி வரிசை, தொழிறகள மேசை, பட்டறைப்பலகை, நடுவர் அமரும் நீள் தவிசு, பாண்டத்தொழிற்களம், அன்னம் முதலிய பறவைகளின் கும்பு.
Bank of issue
பணச்சீட்டைத்தானே வௌதயிடும் பொருளகம்.
Bank up,
பனிக்கட்டிகளைத் தொகுதியாகச் சேர்த்துக் குவி, அல்ர்த்தியாகு, செறிவாக்கு.
Bankable
a. பொருளகம் ஒப்புக்கொள்ளக்கூடிய.
Bank-bill
n. பொருளகங்களிடையே பரிமாறப்படும் கடன் சீட்டு.
Bank-book
n. வாடிக்கையாளரின் பொருளகக் கணக்குப் புத்தகம்.
Bank-cheque
n. வங்கியாணைச்சீட்டு, காசோலை.
Bank-credit
n. பிணையத்தின் மீது பணம் மிகையாக எடுக்கும் நிதிமனை ஏற்பாடு.
Banker
-1 n. பொருளாக முதல்வர், நிதிமனை நடத்துபவர்,பொருளகப் பங்காளி, பொருளக இயக்குநர், மடபொருளக ஆளுநர், பொருளகத்தொழில் இருப்பவர், சீட்டாட்டத்தில் நிலுவைப்பணம் வைத்திருப்பவர், பந்தயச்சீட்டாட்ட வகை, குருட்டு யோக ஆட்டங்கள் நடத்துபவர்.
Banker
-2 n. கொற்றனின் பணிக்குரிய அடைகல், கொல்லமத்து வேலையின் அடிப்பலகை.
Banker
-3 n. தொழிலாள், கரைதாவும் வேட்டைக்குதிரை.
Banker-mark
n. கல்லில் தொற்றன் பொறிப்பு.
Banket
n. பொன்விளையும் தென்னாப்பிரிக்கக் கூழாங்கற்பாறை வகை.
Bankhigh
adv. கரைததும்பி.
Banking
-1 n. நிதிமனைத்தொழில், (பெ) நிதிமனை சார்ந்த.
Banking
-2 n. கரையமைத்தல், கடற்கரையில் மீன்பிடித்தல், வானுர்தி வகையில் ஒரு சாய்வாகப் பறத்தல்.
Banking-house
n. வணிகத் தொழிலமைப்பின் நிதிமனை.
Bank-note
n. பொருளகப் பணமுறி, பொருளகத்தின் பண அளிப்பு வாக்குறுதிச் சீட்டு.
Bank-paper
n. சுற்றோட்டத்திலுள்ள பொருளகப் பணமுறி..