English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Beck
-1 n. சிற்றாறு, மலைப்பகுதியிலுள்ள ஓடை.
Beck
-2 n. சைகை, தலையசைப்பு, விரல் அசைப்பு, குறிப்பாக உணர்த்தப்படும் ஆணை, (வினை) சைகை செய், தலை அல்லது விரல் அசைத்துக் கூப்பிடு.
Beckon
v. அழைக்கும் அடையாளம் காட்டு, தலையை அசை, ஊமைச்சைகை செய்.
Beckyet
n. (கப்.) தளர்ந்த கயிறுகள், பாய்மரக் கயிறுகளைப் பிணித்திறுத்கான அமைப்பு.
Becloud
v. மேகங்களினால் மறை, மங்கவை, நிழலடி.
Become
v. உண்டாகு, நேர், ஆகத்தொடங்கு, பொருந்து, தகுதியாயிரு, அணிசெய், நயம்படத்தோன்று.
Becoming
a. தக்க, ஏற்ற, பொருந்துகிற, இசைவான, நன்று இணங்குகிற.
Becquerel rays
n. pl. கதிரியக்க நுண்மங்கள் உமிழும் கதிர்கள்.
Bed
n. படுக்கை, கட்டில், விலங்குகளின் பாயல், படுகை,கடல் ஆறு ஆகியவற்றின் அடிப்பரப்பு, பீரங்கிவண்டியின் உடற்பகுதி, (மண்)நில அடுக்கு, அடை, படலம், திருமண இணைவு, மன்றப்படுக்கை, மண உரிமைக்கட்டுபாடுகள், (வினை) படுக்கை போடு, படுக்கவை, பள்ளிகொள், கூடிமுயங்கு, பாத்தியிற் பயிரிடு, நடவுசெய், பதித்துவை, இடையீடாக அமை, இடையடுக்காக்கு.
Bedabble
v. அழுக்குநீர் அல்லது குருதிகொண்டு தெறி, நனைவி, கறைப்படுத்து.
Bedad, int.`
ஆண்டவன் பெயரால், கடவுள் ஆணையாக.
Bedagle
v. சேற்றினுடாக இழு, இழுத்து அழுக்காக்கு, சேறுபுரட்டு.
Bedaub
v. அப்பு, வண்ணம் பூசு, அழுக்காக்கு, பகட்டாக உடுத்து.
Bedauze, bedazzle
கண்கூசவை, மேம்பட்ட ஔதயுல்ன் பகட்டு, மலைக்கலவை, ஆற்றலம்காட்டி அடக்கு.
Bedazzlement
n. மலைப்பூட்டுதல்.
Bedbug
n. மூட்டுப்பூச்சி.
Bed-closet
n. பள்ளியறையாகப் பயன்படும் உள்ளறை.
Bed-clothes
n. படுக்கைக்குரிய உடைகள்.