English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Coconscious
a. இரண்டாவதான துணை உணர்வு நிலையிலுள்ள.
Coco-nt milk
n. இளநீர், தேங்காயிலுள்ள நீர்.
Coco-nut matting
n. தேங்காய் நாரினால் பின்னப்பட்ட பாய்.
Cocoon
n. புழுக்கூடு, பட்டுப்பூச்சிக் கூடு, நா ங்கூழ்ப் புழுக்களும் அட்டைகளும் முட்டையிடும் பொதியுறை, (வி.) புழுக்கூடு அமை, கூட்டினுள் புகுந்து போர்த்திக்கொள்.
Cocoonery
n. பட்டுப்புழு வளர்ப்பிடம்.
Cocotte
n. (பிர.) நடையினிய பரத்தை, ஒழுக்கங்கெட்ட இளம்பெண், அடுப்பின் மீது வைத்து இறக்கக்கூடிய இரண்டு கைப் பிடிகளுள்ள சிறு வட்டில் வகை.
Coctile
a. வேகவைக்கப்பட்ட செங்கல் வகையில் தீயினால் சுட்டுக் கெட்டியாக்கப்பட்ட.
Coction
n. கொதிக்க வைத்தல், சமைத்தல்.
Cod
-1 n. உணவுக்குப் பெரிதும் பயன்படும் பெரிய கடல் மீன்வகை.
Cod
-2 n. அறிவிலி, கேலி, ஏமாற்றுச்செயல்.
Cod-bank
n. மீனினம் நாடி அடையும் கடல் கீழ்க்கரை.
Coddle
n. கோழை, (வி.) நோயாளியைப்போல் நடத்து, இடங்கொடுத்துக் கெடு, கொஞ்சு, அரைகுறையாக வேகவை.
Code
n. சட்டத்தொகுப்பேடு, விதிகளின் அடைவு, ஓர் இனத்தினரிடையே அல்லது வகுப்பினரிடையே வழங்கி வரும் ஒழுக்கமுறை, படைத்தறை முதலியவற்றின் குறியீட்டுச் செய்தி முறை, குழூஉக்குறி, (தந்தி.) சுருக்கம் அல்லது மறைபொருளைக் குறிப்பதற்கான இலக்கம்-எழுத்து அல்லது சொற்கோவை, (வி.) தொகு, தொகுப்பு மூலம் வகைப்படுத்து, குழூஉக்குறியாகச் சொல்லு.
Co-declination
n. (வான்.) சரிவின் நிரப்பி, வடதுருவத்திலிருந்து உள்ள தொலைவு.
Codeine
n. தூங்கவைக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படும் அபினியிலுள்ள உப்புச்சத்து.
Codex
n. (ல.) தொகுப்புநுல், கையெழுத்துச்சுவடி.
Codfish
n. உணவுக்குப் பெரிதும் பயன்படும் பெரிய கடல் மீன் வகை.
Codger
n. (பே-வ.) இழிசினன், சிறுபயல், கிழடு, கிழம்.
Codicil
n. விருப்ப ஆவணப் பிற்சேர்க்கை, உயில் அனு பந்தம்.
Codify
v. தொகுத்தமை, ஒழுங்காக்கு, முறைப்படுத்து, மனத்திற்கொள்.