English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Colonel-Commandant
n. உயர்பணி முதல்வர், துணைமைத் தலைவர்.
Colonelcy
n. படைப்பகுதித் தலைவரின் ஆட்சிப் படிமை, துணைத் தளபதி நிலை.
Colonel-in-chief
n. மதிநிலைத் துணைத்தளபதி.
Colonelling
n. துணைத்தளபதியாகச் செயலாற்றுதல்.
Colonial
n. குடியேற்ற நாட்டினர், வந்தேறு குடி, (பெ.) குடியேற்றஞ் சார்ந்த, குடியேற்ற நாட்டைச் சார்ந்த, குடியேற்ற நாட்டின் இயல்பான.
Colonialism
n. குடியேற்ற நாட்டு வாழ்க்கை மரபு, குடியேற்ற நாட்டுப் பேச்சு மரபு, குடியேற்றக் கோட்பாடு, குடியேற்ற நாடுகள் தாய்நாட்டு நலத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டியவை என்ற கொள்கை.
Colonist
n. குடியேற்ற நாட்டவர், தேர்தல் வேலைக்காக அமர்த்தப்பட்ட வாக்காளர், (தாவ.) பண்படுத்தப்பட்ட நிலத்துக் களை.
Colonization
n. குடியேற்றம், குடியேற்றப்பண்பு, புதுநாட்டில் குடியேற்றல், குடியேற்ற நிலை.
Colonize
v. குடியேற்ற நாடு அமை, குடியேற்ற நாடாக்கு, கட்சி நலங்கருதித் தேர்தல் தொகுதிக்குள் வாக்காளர்களை உண்டுபண்ணு, குடியேறுவி, குடியேற்று.
Colonnade
n. சம இடைவௌதகளில் நிறுத்தப்பட்ட தூண்களின் வரிசை, சாலை மரங்கள் வரிசை.
Colony
n. குடியேற்ற நாடு, குடியேற்றம், புதுக்குடியிருப்பு, கடல் கடந்த குடியமைப்பு, நாடு கடந்த குடியினம், வந்தேறு குடி, நகரின் அயல்நாட்டுக் குடியிருப்பு, தொழிலாளர் தனிக் குடியிருப்பு, தனிக்குடியமைப்பு, குடியமைப்பிடம், ரோமரின் பாயைக் குடியமைப்பு, கிரேக்கக் கடல்கடந்த இனக்குடிப்பகுதி, (உயி.) இன வாழ்வுக் கூட்டமைவு, (உயி.) அணு உயிர்க்குழு.
Colophon
n. ஏடு குறித்த தகவலை உட்கொண்டிருந்த பழங்காலப் புற அணியுரை, பின்னணியுரை, வௌதயீட்டாளர், பொறிப்புச்சின்னம்.
Colophony
n. கருப்பூரத் தைலம் வடிக்கும்பொழுது கிடைக்கும் மிகுதிப்பொருள் வண்டலான பிசின் வகை.
Colorado beetle
n. உருளைக்கிழங்கை அழிக்கும் கறுப்புக்கோடுகள் உள்ள மஞ்சள் நிற அமெரிக்க வண்டு வகை.
Coloration
n. வண்ணந்தீட்டும் முறை, வண்ண அமைவொங்கு, இயற்கைவண்ண அமைதி, பன்னிற அமைதி.
Coloratura
n. (இத்.) (இசை.) வாய்ப்பாட்டின் இன்சந்தப் பகுதிகள், (பெ.) பகட்டான, அணியமான.
Colorific
a. நிறம் உண்டாக்குகிற, மிகுநிறம் ஊட்டப்பெற்ற.
Colorimeter
n. நிறமானி, வண்ணத்தை அளக்கும் கருவி.
Colossal
a. பேருருவம் படைத்த, பேருருவச்சிலை போன்ற, பிரம்மாண்டமான.
Colosseum
n. ரோம் நகரத்தின் நடு வட்டரங்கிலுள்ள மிகப்பெரிய கேளிக்கைக் கூடம், பெரிய கேளிக்கைக் கூடம்.