English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Colossus
a. பேருருவச்சிலை, அரக்க வடிவம், ரோட்ஸ் துறைமுக வாயிலில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கிரேக்க மாபேருருவச்சிலை.
Colostration
n. குழந்தைநோய் வகை, ஈன்றணிமைக்குழவி அருந்தும் முதற்பாலால் ஏற்படும் நோய்வகை.
Colostrum
n. குழவி முதலில் உண்ணும் தாய்ப்பால்.
Colotomy
n. பெருங்குடல் இறுதியில் கீறிச் செயற்கைக் குழ்ம் உண்டாக்குதல்.
Colour
n. நிறம், வண்ணம், வெண்ணிற ஔதயினின்றும் பிரிக்கப்படக்கூடிய பகுதி, முகத்தில் தோன்றும் குருதிக் கனிவு, ஐரோப்பியரல்லாத மரபினம், மரபினக்கலப்பு, பொன்துகள், அணியழகு, போலிப்பகட்டு, தோற்றம், புறக்காட்சி, காரணம், போலிக்காரணம், விளக்கக் காரணம், போலிவிளக்கம், சாயல், ஔதமறைப்பு, சாயம், களை, பொலிவு, (இசை.) பண்பு, பண்புவளம், பல்திற உணர்ச்சி வன்மை, இயல்பு, தொனி, பொருளின் நயம், அணியழகு நடை, தனிப்பண்பு, தனிக்குறிப்பு விவரம், படையின் கொடி, (வி.) நிறமேற்று, வணணந்தீட்டு, கறைக்கடுத்து, மிகைப்படுத்து, உருமாறுபடுத்து, முனைப்பாக்கிக்காட்டு, தவறாக, விவரி, வண்ணங்கொள், சிவப்பாகு, வெட்கப்படு.
Colour lab
வண்ணக்கூடம், வண்ண ஆய்வகம், வண்ணப்பட ஆக்ககம்
Colourable
a. நல்ல தோற்றமுள்ள, நன்கு மறைக்கும்படி அமைந்த.
Colour-blind
a. சில நிறங்களைப் பிற நிறங்களின்றும் பிரித்தறிய இயலாத, சில நிறங்களைக் காண இயலாத.
Colour-cast
n. வண்ணத் தொலைக்காட்சிப் பரப்பீடு.
Coloured
a. நிறமுள்ள, வெண்மையல்லாத பிற நிறம் வாய்ந்த, ஐரோப்பிய இனமில்லாத வேறு மரபினத்தைச் சார்ந்த.
Colour-film
n. வண்ணத் திரைப்படச்சுருள்.
Colour-filter
n. வேண்டிய சில நிற ஔதக்கதிர்களை மட்டும் ஊடுருவவிடவல்ல திரைத்தகடு.
Colourful
a. வண்ணப்பகட்டான, பல நிறங்களுடைய, முனைப்பான தோற்றமுடைய, விளக்கமாகத் தெரிகிற.
Colour-hearing
n. வண்ண ஓசைத்தொடர்பிணைவு.
Colouring
n. வண்ணப்பொருள், பொருளின் இயல்பான நிறம், நிற அமைதி, நிறஒழுங்கு, வண்ணந்தீட்டும் முறை, தோற்றம், சாயல்.
Colourist
n. வண்ண ஓவியர், வண்ணத்திறங்களின் வல்லுநர்.
Colourless
a. நிறமற்ற, பளிங்கு போன்ற, தௌதவான, வௌதறிய, பொது நிலையான, தனித்தன்மையற்ற.
Colour-line
n. வௌளையர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே காட்டப்படும் சமூகச்சார்பான வேறுபாட்டுணர்ச்சி.
Colour-man
n. வண்ண வணிகர், சாயங்களை விற்பவர், வண்ணப்பொருள் உண்டுபண்ணுபவர்.