English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Columbit
n. கனிப்பொருள் வகை.
Columbium
n. (வேதி.) அணு எண் 41 கொண்ட உலோகத் தனிமப்பொருள்.
Columel
n. சிறுதூண், சிறு பத்தி.
Columella
n. திருகு சுருளாய் அமைந்த ஒருவழி அடைப்பிதழின் நடு அச்சு, முதுகெலும்புள்ள கீழ்த்தர விலங்குகளின் செவியெலும்பு, பாசியின் சிதல் விதைப்பெட்டியின் நடுக்கோடு, சூலறை வெடித்துத் திறந்தபின் உள்ளே எஞ்சியிருக்கும் நடுப்பகுதி.
Column
n. தூண், தூபி, படையின் நீளணி, நிமிர்நிலை அணிவரிசை, பக்கத்தின் அகலக்கூறான பத்தி நிரல், பத்திரிக்கை நிரலணி, பத்திரிக்கைத் தனிப்பகுதி, நரம்பு நாள மையம், தோட்டச் செடி வகையின் தண்டு.
Columnated, columned, columniated
தூண்களுள்ள, பத்திகளுள்ள.
Columniation
n. தூண்கள் அமைத்தல், தூண்களின் ஒழுங்கமைப்பு.
Columnist
n. பத்திரிக்கையில் குறிப்பிட்ட பத்தியில் தொடர்ந்து எழுதுபவர்.
Columnnal, columnar
தூணினைச் சார்ந்த, தூண் போன்ற, பத்தியாய் அமைந்த.
Colure
n. ஒன்றையொன்று செங்கோணமாக வான துருவங்களில் வெட்டிக் குறுக்கிடும் இரு நிரைவட்டங்களில் ஒன்று.
Coma
-1 n. இயல்பு கடந்த ஆழ்ந்த உறக்கநிலை, எல்லா உணர்ச்சியும் இழந்த முழு மயக்கநிலை, செயலின்மை.
Coma
-2 n. (தாவ.) விதைநுனியின் குஞ்சம், மரத்தின் உச்சித் தழைக்கொத்து, (வான்.) வால் வௌளியின் தலைப்புறத்தில் மேகம் போன்று சூழ்ந்துள்ள உறை.
Comal, comate
(தாவ.) மரஉச்சியின் தழைக்கொத்துச் சார்ந்த, (வான்.) வால் வௌளியின் தலைப்புச் சார்ந்த.
Comatose
a. உணர்விழப்பால் தாக்கப்பட்ட, அரைகுறைத் தூக்கமான, மயக்கமான.
Comb
-1 n. சீப்பு, சீப்பு போன்ற கருவி, இழைமங்களைத் துப்புரவுப்படுத்தும் பல்வரிசையுள்ள வார்கருவி, பறவைகளின் கொண்டை, அலைஉச்சி, கூரை அல்லது மலையுச்சி, தேன் கூடு, தேனடை, (வி.) சீப்பினால் ஒழுங்குசெய், துப்புரவாக்கு, சீவு, வாரு, குதிரையைத் தேய், முழுவதும் தேடிப்பார்
Comb
-2 n. காடார்ந்த ஆழ்ந்த சிறு பள்ளதாக்கு, குன்றின் சரிவிலுள்ள குடைவு.
Comb
-3 n. முகத்தலளவைக்கூறு (நான்கு மரக்கால்).
Combat
n. சண்டை, போர், (வி.) எதிர், போரிடு, எதிர்த்துப்போராடு, மல்லாடு, போட்டியிடு, எதிர்த்துநில், வாதிடு, சொற்போர் செய், உழன்று முயற்சிசெய்.
Combatable
a. போரிடும் இயல்புள்ள.