English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Conciliation
n. இணக்கப்படுத்தல், சந்து செய்வித்தல், ஒப்புரவிணக்கம், சமரசம்.
Concinnity
n. இலக்கிய அழகுநயம், இசைவிணக்கம், பொருத்தம், நடை நயம், நேர்த்தி.
Concinnous
a. அழகு செறிந்த,.இசைவிணக்கமுடைய, நேர்த்தியான.
Concise
a. சுருக்கமான, பொழிப்பான, அடக்கமான.
Conciseness
n. சுருக்கம், அடக்கம், திட்பம்.
Concision
n. வெட்டுகை, உறுப்பழிவு, சுன்னத்து, சுருக்கம், பொழிப்பு.
Conclacist
n. போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கக் கூடும் கருதினால்மார் குழுவின் ஊழியன்.
Conclamation
n. பலர் சேர்ந்து எழுப்பும் பேரொலி.
Conclave
n. போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கக் கத்தோலிக்க கருதினால்மார் கூடியிருக்கும் அறை, போப்பாண்டவரைத தேர்ந்தெடுக்கும் உரிமையுடைய கருதினால்மார் குழு, தனிக் கூட்டுக்குழு.
Conclude
v. முடிவுறு, முடிவுக்குக் கொண்டுவா, ஏற்பாடு முற்றுவி, செய்து முடி, முடிவு செய், தீர்மானி, ஆய்ந்து முடிவுகாண், முடிவுக்கு வா, முடிவு உருவாக்கு, (சட்.) நோக்கம் தெரிவி.
Concluded
a. முடிந்த, தீர்க்கப்பட்ட.
Concluding
a. முடிவான, இறுதியான.
Conclusion
n. முடிவு செய்தல், முடிவு, முடிபு, தீர்மானம், முடிவுரை, முடிவுப் பகுதி, வாத முடிபு, ஆய் முடிபு.
Conclusive, conclusory
a. இறுதியான, முடிவான, நம்பவைக்கிற, மெய்ப்பிக்கிற.
Concoat
v. சேர்த்து வடித்திறு, இணைத்து உருவாக்கு, புனையந்தியற்று, கற்பனை செய், இட்டுக்கட்டு, திட்டமிடு, சதி செய், உண்டுபண்ணு, குதிர வை, பாகம்பண்ணு, செரிமானம் செய்.
Concoction
n. கலந்து வடித்திறுத்தல், வடிசாறு, மருந்துக்கலவை, பொய்புனைதல், புனைசுருட்டு, கட்டுக்கதை, முதிர்வு, குதிர்வு.
Concolor, concolrate, concolorous
a. ஒரு சீர் வண்ணம் கொண்ட.
Concomitance, concomitancy
n. இணை நிலை, ஒருங்கிணைந்து இயலும் தன்மை.
Concomitant
n. உடனிணை துணைவர், உடனிணை துணை, இணைந்தியலும் பொருள், (பெ.) உடனியங்குகிற, இணைந்த, ஒன்றுசேர்ந்த.
Concord
-1 n. உடன்பாடு, அசைவு, இணக்கம், ஒருமனப்பாடு, ஒப்பந்தம், (இசை.) செவிக்கின்பம்பந்தரும் ஒலிகளின் சேர்க்கை, செவ்விசைவு, (இலக்.) சொற்களுக்கிடையே பால்-எண்-இடம் பற்றிய ஒத்திசைவு.