English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Concur
v. உடனிகழ், முற்றும்பொருந்து, ஓரிடத்தில்கூடு, இசைவுறு, கூடிச் செயலாற்று, கருத்தில் ஒன்றுபடு, உடன்படு.
Concurrencer concurrency
n. ஒருமுனை, கோடுகள் ஒரு புள்ளிமுனையில் சென்றிணைதல், ஒருங்கு நடைபெறுதல், உடனிகழ்வு, முழுதுறழ் இசைவு, முற்றும் பொருந்துதல், கூட்டுச்செயல், உடன்பாடு, போட்டி.
Concurrent
n. உடன்படுபவர், இசைபவர், போட்டியிடுபவர், ஒரு புள்ளியில் சென்று கூடுகிற கோடு, நாட்டாண்மைக்காரரின் அலுவலருடன் சான்றாளராகச் செல்பவர், (பெ.) உடன் இருக்கிற, ஒரே புள்ளியில் கூடுகிற, உடன் நிகழ்கிற, உடன்இயங்குகிற, முற்றும் பொருந்துகிற.
Concurrently
adv. ஒருங்கிணைவாக, ஒரேசமயத்தில் நிகழ்வதாக.
Concurring
a. இசைகிற, உடன்படுகிற.
Concuss
v. கலக்கு, அதிர்ச்சியுறும்படி குலுக்கு, அச்சுறுத்து, வல்லந்தப்படுத்து, வலுக்கட்டாயப்படுத்து.
Concussion
n. தாக்குதல், மோதல், தலைமீது பேரடி, அதிர்ச்சி, கலக்கம், வலுக்கட்டாயப்படுத்துதல், நெருக்கடி உண்டுபண்ணுதல்.
Condemn
v. பழித்துரை, கண்டி, எதிராகத் தீர்ப்புக் கொடு, குற்றத் தீர்ப்பளி, எதிர்வாக முடிவு செய், பாதகமாக முடிவுகட்டு, முன்கூட்டி முடிவுக்கு வா, தீதறிவு.
Condemnable
a. பழிப்புக்கிடன்ன.
Condemnation
n. கண்டனம், சட்டமன்றக் குற்றத்தீர்ப்பு, கண்டிப்பதற்கான காரணம், கண்டிக்கப்பட்ட நிலை.
Condemnatory
a. கண்டனம் தெரிவிக்கிற, பழிப்பு இயல்பான.
Condemned
a. பழிக்கப்பட்ட, குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்ட, தீர்த்தொதுக்கப்பட்டுவிட்ட, கைவிடப்பட்டுவிட்ட, குற்றத் தண்டனை அளிக்கப்பட்டவருக்குரிய, தீயதென்று அறிவிக்கப்பட்ட.
Condensable
a. சுருக்கத்தக்க, அடக்கப்படக்கூடிய, செறிவிக்கக்கூடிய, உறையக்கூடிய, நீர்மமாக வடிக்கப்படக்கூடிய.
Condensate
n. சுருக்கிச் செறிவாக்கப்பட்ட பொருள், உறைபொருள், வடிமானம், (வி.) சுருக்கு, செறிவாக்கு, சுருங்கு, செறிவாகு.
Condensation
n. சுருக்குதல், அடக்குதல், செறிவித்தல், செறிவு, உறைவித்தல், உறைவு, வடித்தல், வடிபடல், சுருங்கிய பொருள், சுருக்கம், அடக்கம், செறிமானம், செறி பொருள், உறைமானம், உறைபொருள், வடிமானம், வடிபொருள், சேர்மானத்தில் இடைநீர்மம் நீக்கப்பெற்ற இணைவு, எடைமிகும் சேர்மானம்.
Condense
v. சுருக்கு, சுருக்கிக்கூறு, சுருங்கு, செறிவி, நீர்மத்தை உறைவி, வளிப்பொருளை வடித்தெடு, செறி, உறை, வடிமானமாக உருவாகு, கெட்டிப்படுத்து, ஒருமுகப்படுத்து, மின்வீறு பெருக்கு, நீர்மநீக்கித் திண்மைப்படுத்து.
Condensed
a. உறைவிக்கப்பட்ட, நீர்வற்றச் செய்த, உறைந்த, சுருக்கப்பட்ட, சுருங்கிய.
Condensed disc
செறி தட்டு, செறி தகடு
Condenser
n. வடிகலம், வாலை, நீராவிப்பொறியில் ஆவியை நீர்ப் பொருளாக மாற்றுவதற்கான அமைவு, (இய.) ஔதக்கதிர்களை ஒருமுகப்படுத்தும் குவிமுகவில்லை, மின்விசையேற்றி, மின் ஆற்றலின் வீறுபெருக்குவதற்கான அமைவு.
Condensery
n. உறைபால் தொழிற்சாலை.