English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Condescend
v. திருவுளங்கொள், எளிமைதோன்ற இறங்கி வந்தருள்செய், அருள்பாலி, அளிசெய், பெருமிதநிலையினை விட்டுப்கொடுத்துச் செயலாற்று, வீறுதுறந்து செயல்முனை, இரங்கியருள், கருணை நயம்படச் செயலாற்று, பணிவு நயம் பட நட, தகாதன செய், விட்டுக்கொடு, பணிந்துபோ, உடம்படு, இசை.
Condescendence
n. இணக்கம், அமைவு, (சட்.) ஸ்காத்லாந்தில் முறைமன்ற அழைப்பாணையுடன் இணைக்கப்படும் குற்றச்சாட்டு விவரப்பட்டியல்.
Condescending
a. அருள்பாலிக்கிற, ஆதரவு நல்குகிற, கீழோரிடத்துக் கருணை காட்டுகிற, புண்படுத்துமுறையில் ஆரவார இரக்கம் காட்டுகிற.
Condescension
n. கீழோரிடத்து அன்புடைமை, அருள்பாலிக்கும் பண்பு.
Condign
a. ஏற்ற, உரிய, போதிய, தகுதிவாய்ந்த.
Condiment
n. சுவையூட்டுப்பொருள், (வி.) சுவையூட்டு.
Condition
n. நிலைமை, நன்னிலை, தகுதி, முறைமை, பண்பு, படிநிலை, தரம், உயர்நிலை, மனநிலை, உணர்ச்சிநிலை, ஒப்பந்த விதியின் வரையறைக்கூறு, கட்டுப்பாடு, முன்னீடு, செயலுக்கு முன்பே பெற்றிருக்கவேண்டிய இன்றியமையாக்கூறு, (அள.) காரியத்துக்குரிய காரணக்கூறான இன்றியமையா முன்னிகழ்ச்சி, (சட்.) கடப்பாட்டுக்குரிய முன்வரையறை, (இலக்.) முன்வரையறைக் குறிப்பு, முன் வரையறை வாசகம், (வி.) கட்டுப்பாடு விதி, வரையறைமீது ஒப்புக்கொள், தக்க சூழலில் வை, வேண்டும் சூழ்நிலையமை, தகுதியுடையதாக்கு, கட்டுப்படுத்து, வரையறு, உறுதிசெய், வாணிகச்சரக்கின் நிலையை ஆராய்ந்து பார்.
Conditional
n. (இலக்.) வாக்கியத்தின் சார்புநிலைவாசகம், சார்புநிலைக் குறிப்புச்சொல், சார்புநிலை இணை இடை, சார்பு நிலை குறித்த வினைப்பாங்கு, (பெ.) கட்டுப்பாடு தெரிவிக்கிற, வரையறைமீது நிகழ்கிற, கட்டுப்பாடு சார்ந்த, சார்புநிலை குறித்த.
Conditionally
adv. துணிபின்றி, சார்புநிலையில், வரையறையுடன், கட்டுப்பாட்டின்மீது.
Conditionate
v. கட்டுப்பாடு விதி, நிபந்தனை கூறு, வரையறு.
Conditioned
a. வரையறுக்கப்பட்ட, கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட, ஒருநிலைப்படுத்தப்பட்ட, சூழ்நிலைக்கு உட்பட்ட, சூழல் சார்பான, சார்புடைய, தொடர்புடைய, நிலையுடைய, பாங்குடைய.
Conditioner
n. பண்படுத்துமுறைக்கு முன்னீடாக நிலத்தைப் பக்குவப்படுத்தவல்ல பொருள் வகை.
Conditioning
n. தக்க சூழ்நிலையமைப்பு, (பெ.) தக்கசூழ்நிலையமைக்கிற, வரையறுக்கிற.
Conditions
n. pl. சூழ்நிலைகள், வாழ்க்கைச் சூழற் பண்புகள்.
Condjutant
n. பிறருக்கு உதவிசெய்பவர், (பெ.) ஒருவர்க்கொருவர் உதவியாயுள்ள.
Condolatory
a. வருத்தம் தெரிவிக்கிற, ஒத்துணர்வு வௌதப்படுத்துகிற.
Condole
v. வருத்தந்தெரிவி, ஒத்துணர்வு அறிவி, மற்றொருவருடன் சேர்ந்து துயரப்படு.
Condolement, condolence
n. மற்றொருவர் துயரத்துக்காக வருத்தந் தெரிவித்தல்.
Condominium
n. (ல.) கூட்டுத்தலைமை ஆட்சி, ஓர் அரசின் ஆட்சியில் இருவேறு அரசுகள் சரிபங்கு பெற்றிருக்கும் நிலை.