English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Concord
-2 v. உடன்படு, இணங்கு, இசைவுறு.
Concordance
n. ஒத்திசைவு, ஏட்டின் சொல்தொகுதி விளக்கப்பட்டியல்.
Concordant
a. ஒத்திருக்கிற, இணக்கமான, இசைவான, ஒருமனப்பட்ட, ஒருமைப்பட்ட, (.இசை.) செவ்விசைவான, ஒத்திசைவான.
Concordat
n. திரு உடம்படிக்கை, போப்பாண்டவருக்கும் சமயச்சார்பற்ற ஓர் அரசுக்கும் ஏற்பட்டுள்ள உடன்படிக்கை.
Concordial
a. இசைவிணக்கமான.
Concourse
n. கூட்டம், பெருந்திரள், ஒருங்கிணைவு, சந்திப்பு, இணையியக்கம், ஒருங்கிணைந்து செல்லும் திரள், பெரிய மண்டபம், சாலைச் சந்திப்புவௌத, இருப்பூர்திநிலையப் பொது வௌதயிடம்.
Concrescence
n. (உயி.) இணைதிரட்சி, திரள்வளர்ச்சி.
Concrete
-1 n. பருப்பொருள், திரள் பிழம்பு, திரள்வளர்ச்சி, காரைக்கட்டு, திண்காரை, பசைமண் கூழாங்கற்கலவைப் பிழம்பு, (பெ.) பருப்பொருளான, பிழம்புருவான, திண்ணிய, பொருளியலான, புலனீடான, மெய்யான, காரைக்கட்டான.
Concrete
-2 v. காரைக்கடிட்டாகக் கட்டியெழுப்பு, திரண்டுருவாகச் செய், கெட்டிப்படுத்து, கடினமாகு.
Concrete works
திண்காரைப் பணியகம்
Concretion
n. ஒன்றுசேர்தல், திரட்சி, திரண்ட பிண்டம், (மரு.) உடற்கட்டி, (மண்.) திரள்துகள் கணு, சிறுதுப்ள் சேர்ந்திறுகுவதால் அமைந்த பாறையின் உட்கணு.
Concretionary
a. பாறையுள் திரள்துகள் கணு இயல்பான.
Concretive
a. கெட்டியாகத் திரளும் ஆற்றலுடைய.
Concubinage
n. காமக்கிழத்தியர் கூட்டுறவு, திருமணமாகாத ஆணும் பெண்ணும் கூடிவாழ்தல், வைப்பாட்டியைக் கொண்டிருத்தல், வைப்பாட்டியாயிருத்தல்.
Concubinary
n. திருமணமாகாமல் கூடிவாழும் ஆண்பெண்களில் ஒருவர், (பெ.) திருமணமாகாமல் கூடிவாழ்கிற, சட்டத்துக்குப் புறம்பான ஆண்பெண் கூட்டுறவுக்குரிய, சட்டப்புறம்பான கூட்டுறவிலிருந்து தோன்றிய.
Concubine
n. காமக்கிழத்தி, வைப்பாட்டி, மனைவியாயிராமல் ஒருவருடன் கூடிவாழ்பவள், (பன்மனைவியர் கொள்ளும் மக்களிடையே) துணைமை நிலையான மனைவி.
Concubitancy
n. திருமணம் செய்துகொள்வதற்குக் கடமைப்பட்டிருக்கும் பழக்கம், முறைக்கட்டுநிலை.
Concubitant
n. முறைமணத் துணைவர், முறைப்பெண், முறைமாப்பிள்ளை.
Concupiscence
n. இணைவிழைவு, பால்வகைச்சேர்க்கை விருப்பம், மட்டுமீறிய சிற்றின்ப வேட்கை, (விவி.) உலகியல் பற்று, உலகப் பொருள்கள்பால் தோன்றும் அஹ்.
Concupiscent
a. சிற்றின்ப வேட்கையுள்ள, பேரவாவுடைய.