English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Covinous
a. மோசடியான, ஏமாற்றுகின்ற.
Covin-tree
n. ஸ்காத்லாந்து நாட்டில் விருந்தினரைச் சந்தித்து வழியனுப்புவதற்குரிய மாளிகை முன்புள்ள மரம்.
Cow
n. பசு, யானை-காண்டாமிருப்ம்-திமிங்கிலம்-கடல்நாய் மான் முதலிய வற்றில் பெண் விலங்கு.
Cow
v. அச்சுறுத்து, அடக்கிவை, கீழ்ப்படுத்து.
Coward
n. கோழை, துணிவு இல்லாதவர், வலிமை குறைந்தவரிடம் வலிமை காட்டிக் காரியம் ஆற்றுபவர், (பெ.) கோழையான, (கட்.) கால்களுக்கிடையில் வாலுள்ளதான, (வி.) கோழையாக்கு.
Cowardice
n. கோழைத்தனம், துணிவின்மை, பயங்கொள்ளித்தனம், அச்சம்.
Cowardly
a. கோழையின் குணமுள்ள, கோழைக்குரிய, (வினையடை) கோழையைப் போன்று, கோழைத்தனமாக.
Cow-bane
n. கால்நடைகளுக்குக் கேடான நீர் நச்சுப்பூண்டு.
Cow-bell
n. பசுவின் கழுத்தில் அணியும் மணி.
Cow-berry
n. செந்நிறக்கொட்டையுள்ள புதர்ச்செடிவகை.
Cow-bird, cow-blackbird
n. மற்றப் பறவைகளின் கூடுகளில் முட்டையிடும் பழக்கமும் கால்நடைகளுடன் தொடரும் இயல்புடைய அமெரிக்க வெப்ப மண்டலப் பறவை வகை.
Cowboy
n. பசுவை மேய்த்துப் பாதுகாக்கும் பொறுப்புடைய பையன், பெரிய பண்ணை நிலத்தில் கால்நடைகளை மேய்க்கும் மனிதன்.
Cow-calf
n. பெண் கன்று, பெட்டைக்கன்று, கடாரி.
Cow-chervil
n. காட்டுச்செடி வகை.
Cowdie-gum
n. எண்ணெய்ச் சாயம் செய்யப் பயன்படும் பிசின் வகை.
Cowdie-pine
n. பிசின் வகை தரும் குவிகாய் உடைய மர வகை.
Cowed
a. அச்சுறுத்தி அடக்கப்பட்ட, முனைப்பழிந்த, முற்றிலும் ஆர்வமிழந்த.
Cower
v. அச்சத்தால் அடங்கு, கூனிக்குறுகு, பதுங்கு, குவிவுறு, குந்தியுரு.
Cowfeeder
n. பால்பண்ணைக்காரன்.
Cowfish
n. பசுவினது போன்ற முகமுடைய மீன்வகை, 'கடற்பசு', 'பிரசீல்' நாட்டு ஆறுகளிலுள்ள மீன் வகை, பல்லுள்ள சிறு திமிங்கில மீன்வகை, கொம்புபோன்ற புருவ முள்ளுடைய மீன்வகை.